கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

எதோ ஒரு பயங்கரக் கனவு.
வாய்விட்டுக் கத்த
முயற்சிப்பதும் ,
முடியாமல்
திணறுவதும் புரிகிறது.
ஆனாலும்
எதுவுமே செய்ய முடியாத
இயலாமை.
பக்கத்தில்
அன்புக் கணவர்
அணைத்துக் கொள்ள,
குழந்தையானேன்.
கடுமையாய்
உழைத்து வீடு திரும்பும் முன்
உணவு தயார் செய்கையில் ,
தாயானேன்.'

என்ன சோதனை வந்தாலும்
தைரியமாய்
எதிர் கொள்ளும்
வீரத்தில்,
பெருமிதம் அடைந்தேன்,

நண்பியானேன்,
சிஷ்யையானேன்,
குருவும் ஆனேன்,

அழகான உறவுகள்!
நன்றி இறைவா!

என்ன கைம்மாறு செய்வேன்?
என் மனம் சிறிதளவும் சலனமற்று,
என்றுமிருக்க
எப்பொழுது இம்மனம்
சிறிதளவும் சலனமற்று,
உண்மையாக
அன்பு செலுத்த அருள்வாய்