மனக்குறள் 9 & 10

மனக்குறள் -19  தெய்வத் தமிழ்மொழி

தமிழா உலகந் தனையே வரித்த
அமிழ்தின் மொழியாய் அறிக!

பேசும் மொழியே பெரிதாம் புரிதமிழ்
தேசம் வழங்கும் துணை!

மக்கள் மொழியே வணங்கல் மொழியாமே
புத்திக் கிதுவே புகல்!

வணங்கும் மறைமொழி மண்ணின் அறிவாய்
இணங்கும் இறைமொழி என்ப!

செய்யுள் இலங்கும் சிவனார் மொழியைப்
பொய்யில் அமிழ்த்தால் பிசகு!

முதன்மொழி மூத்த முகையெனப் பூமிப்
பதமொழி சொல்வர் பகர்!

எதுசொல நின்றும் புரிதலே காணாய்
விதிமொழி என்றே விளம்பு !

தெரியா மொழியினைத் தெய்வம் துதிக்கும்
சரிமொழி என்பதா சாற்று?

பிள்ளை அகவல் பெருமானார் வாசகம்
வள்ளலா ருந்தமிழ் வான்!

திருக்குறள், காப்பியம் தேவாரம் ஆழ்வார்ப்
பிரபந்தங் கூறும் தமிழ்

 


மனக்குறள் -20 பூவரும் ஒரு நிலம்-2

தமிழா உலகம் முழுதும் பரந்த
அமிழா மொழியை அறி!

தொல்காப் பியனார் திருவள் ளுவனார்எம்
தொல்காப் பவராம் தெரி !

இரண்டா யிரம்முன் எழுதிய பாக்கள்
பிரபஞ் சமெல்லவும் பொன் !

யாவரும் கேளிராய் யாத்தோன் தனக்கென
பூவரும் ஓர்நிலம் பில்லன் !

இற்றைத் தமிழ்நாடு இந்தியில் மூழ்கிய
கற்றையென் றாச்சுக் கழி!

பத்துசொல் பேசினால் பற்றிறிடும்(கு) வாய்மொழி
சொத்தாயு மாங்கிலம் தூள்!

மூலரின் காப்பை விளக்குவா ராங்கிலம்
பாலவர் வானொலி பாழ்!

கக்கல் நிகழ்வால் கருகும் தமிழ் நாடு
எக்கால் எழும்பும் இனி !

தமிழை மாய்க்கும் சதியே சினிமா
மொழியைத் திணித்தார் மிகல் !

ஏடா தமிழா இளிச்சவா யன்னொடா
தேடா மொழியனோ சொல்!


மனக்குறள் -21 கவரும் கீழடியும் கட்டுகரையும்-3

கீழடி சொல்லும் கிருத்திகை வாழ்வின்;
ஆழடி காட்டுமே அகழ்!

என்னே அறிவு இயலெனக் கட்டிடம்
அந்நாட் தமிழர் அடுக்கு !

போகுநீர் உண்டு புதுக்குநீர் ஏற்;றிடும்
மேகுகால் என்ன மிடுக்;கு!

இற்றைவீ ராக்;கும் இயலினை மூவாயி
ரம்முன் எடுத்தனர்காண் என்;ப?

பழநியும் வைகைப் படிவமும் தெற்கில்
மளிகையைக் கட்டினர் வான்!

கட்டுகரை ஈழம் கனிந்தமுற் கீழடியும்
விட்டகதை அல்ல விளம்பு!

மக்களும் வாழ்வும் மறைந்தபல் நூறாண்டும்
முற்கால மெம்தமிழ் வேர்!

இரண்டரை நூற்றாண்டு  ஏற்றவா ரன்றே
திரண்டதோர் பாடலூர் தேர்!

கமழுந்தொல் காப்பியத்தைக் காணூர் முதலாய்
அமையுமாம் கீழடியென் றார்!

இந்தியும் ஏந்திய இத்துவாள் தன்னொடுமாம்
காந்தளாம் மென்தமிழ் கார்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.