கவிதை: சேகுவேரா!

Thursday, 10 October 2019 00:19 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

மாவீரன் சேகுவேரா!

மானுட விடுதலைக்காகத்
தன்னுயிர் தந்த
மாவீரன்.
மறைந்தும் இவன் புகழ்
இன்னும்
மங்கவில்லை மானுடர்தம்
மனங்களில்.

மரணப்படுக்கையிலும் இவன்
மனவுறுதி மலைக்க வைப்பது.

இவன் சிந்தனைகள்,
இவன் எழுத்துகள்
இவன் வாழ்வு
போர் சூழ்ந்த உலகில்
படிக்க வேண்டிய பாடப்
புத்தகங்கள்.

என்னே மனிதனிவன்
என்றே எப்போதும் மானுடர்
இவன் புகழ் பாடி நிற்பர்.
மாவீரனே! மாமேதையே!
மகத்தான மானுடனே!
நீ வாழ்க! நின் புகழ் வாழ்க!

Last Updated on Thursday, 10 October 2019 00:22