காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!

Friday, 20 September 2019 05:00 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!1. காலத்தால் அழியாத கானங்கள் : 'அபுது கே துமசி கரு குஷி அபுனி'

ஜெயாபாதுரி, லதா மங்கேஷ்கார், எஸ்.டி.பர்மன் & மஜ்ரூத் சுல்தான்பூரி கூட்டணியில் உருவான இன்னுமொரு நெஞ்சிற்கினிய 'அபிமான்' பாடல் 'அபுது கே துமஷி கரு குஷி அபுனி'. filmy Quotes இணையத்தளத்திலிருந்த இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றேன்.

படம்: அபிமான்
இசை: எஸ்.டி.பர்மன்
பாடகர்: லதா மங்கேஷ்கார்
பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி
https://www.youtube.com/watch?v=emKJ5_cMEHk

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்
என் வாழ்க்கை இருப்பது உனக்குத் தியாகம் செய்வதற்காகத்தான்.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
உலகம் என்ன கூறுகின்றது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
என் உறவினர்கள் யாரும் என்னைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றி.
எனக்குக் கவலையில்லை.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
நான் உன்னுடன் இணைந்து புகழும் பெற்றுள்ளேன்.
யாருக்குத் தெரியும் எனது அமைதியின்மை என்னை எங்கே கொண்டு செல்லுமென்று.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

2. காலத்தால் அழியாத கானங்கள் : பிய பீனா பிய பீனா

- பாடலாசிரியர்: மஜ்ரூத் சுல்தான்பூரி -

படம்: அபிமான்
இசை: எஸ்.டி.பர்மன்
பாடகர்: லதா மங்கேஷ்கார்
பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி
https://www.youtube.com/watch?v=59EJJrOzTWw

'அபிமான்' திரைப்படப்பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றவை. பாடல்களுக்காகவே வருடக்கணக்கில் ஓடிய திரைப்படம் 'அபிமான்'. 'அபிமான்' திரைப்படப்பாடல்களில் லதா மங்கேஷ்காரின் இனிய குரலில், எஸ்.டி.பர்மனின் இசையில், ஜெயாபாதுரியின் நடிப்பில் இப்பாடலைக் கேட்கையில் , பார்க்கையில் நெஞ்சிழக்காதவர்தாம் யாருண்டோ? filmy Quotes தளத்தில் இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டேன். அவ் வரிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன்.

- இசையமைப்பாளர்: எஸ்.டி.பர்மன் -

லதா மங்கேஷ்காரின் குரலுக்கு நான் எப்போதுமே அடிமை. என்ன குரல்! நெஞ்சை வசியப்படுத்தும் குரல்! அதற்கிணையாக முகபாவங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயபாதுரியின் ந்டிப்பு! மறக்க முடியாத பாடல்களிலொன்று.

என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவ்ர் இல்லாமல்
புல்லாங்குழல் இசையைத் தருவதில்லை.
என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல்

என் பிரியத்துக்குரியவர் மிகவும் ஆத்திரமாக உள்ளார்.
அந்த இசையானது எனது உதடுகளிலிருந்து வெளியேறிவிட்டது.
என் பிரியத்துக்குரியவ்ர் மிகவும் ஆத்திரமாக உள்ளார்.
அந்த இசையானது எனது உதடுகளிலிருந்து வெளியேறிவிட்டது.
நான் பாடும் போது
என் இதயத்தின் ஒவ்வொரு பாடலுமே பொய் போலுள்ளது.
அவ்வளவு தொலைவில் என் காதலுக்குரியவர் என்னிடமிருந்து பிரிந்துள்ளார்.

என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவ்ர் இல்லாமல்
புல்லாங்குழல் இசையைத் தருவதில்லை.
என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவ்ர் இல்லாமல்

உன்னுடைய அழைப்பில்லாமல்
எங்கெங்கும் தனிமையை உணர்கின்றேன்.
உன்னுடைய அழைப்பில்லாமல்
எங்கெங்கும் தனிமையை உணர்கின்றேன்.
குயில் கூட அமைதியாகவுள்ளது.
கானகத்தில் மயில் தன் சொற்களை மறந்து விட்டது.
என் பகல்களும், என் இரவுகளும் தனிமையிலுள்ளன.

என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவ்ர் இல்லாமல்
புல்லாங்குழல் இசையைத் தருவதில்லை.
என்னுடைய அன்புக்குரியவர் இல்லாமல், என்னுடைய அன்புக்குரியவ்ர் இல்லாமல்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 20 September 2019 05:53