பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வீட்டுக் கரசன் நான்தானே
வீட்டைக் காக்கும் காவல்காரன்
வெளியே இருந்து காக்கின்றேன்
வீரன் யாரு தெரியாதோ... ..

காவல் காரப் பெரியவரே
கனக்க வீரம் காட்டுகிறீர்
நானும் வித்தையில் வல்லவனே
நீரும் என்னை அறிவீரோ... .. வீட்டுக் குள்ளே புகுந்திருப்பீர்
வேளை முழுதும் உறங்கிடுவீர்
அடுப்பங் கரையில் படுத்திருக்கும்
உமக்கு என்ன வீரம்தான்... ..

பெரிதாய்ப் புளுகும் நாயண்ணா
பக்குவம் வேண்டும் மனதினிலே
மற்றோரை மதித்திடப் பழகிடுவீர்
மனதில் அமைதி கொண்டிடுவீர்...

எதிரே நின்று சீறுகின்றீர்
எலியைப் பிடித்துத் தின்னுகிறீர்
என்ன திறமை கொண்டுள்ளீர்
எதுவோ சொல்லும் பூனையாரே... ..

இவ்வளவு சொல்லும் நாயண்ணா
என்னை வெல்ல முடிந்திடுமோ
சின்னப் பூனை நானண்ணா
செயலில் பெரியவன் தானண்ணா...

இந்தா பாரும் என்னைத்தான்
உம்மால் முடிந்தால் காட்டிவிடும்
ஓடி மரத்தின் உச்சியிலே
ஏறும் அணிலைப் பிடித்திட்டேன்...

அதிகம் பேசிப் பயனென்ன
எதையும் செயலில் காட்டிவிடும்
அணிலைப் பிடித்த வீரன்யார்
அண்ணாந்து என்னைப் பாரண்ணா...

சிறியவர் என்று மற்றோரை
சிறிதும் ஏளனம் செய்யாதீர்
செயலில் வீரம் காட்டுகின்ற
சிறியவர் எல்லாம் பெரியவரே..!


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.