நாடகம் - அறிமுகம்

avvai_sanmugam5.jpg - 10.30 Kbமுத்தமி;ழ் வடிவங்களில் நாடகம் குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் என்ற தனி சொல்லைக் காலத்தால் முந்தைய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன் முறையாகப் பயன்படுத்தியுள்ளது. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" என்பர்.

நாடக ஆர்வம்

அவ்வை சண்முகம் இளமையில் நாடகத்தில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்ததை தன் வரலாற்றில் குறித்துள்ளார். சண்முகம் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய போது கூட அவருடைய கவனமெல்லாம் நாடகத்திலேயே இருந்ததையும் தன் நாடக வாழ்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக கம்பெனி தொடங்குதல்

அவ்வை சண்முகம் 1952ல் மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின்  1950ல் டி.கே.எஸ் நாடகக்குழு தொடங்கப்பட்டது.

நாடகத் தொழில் சிறப்புப் பெற்ற இடம்;

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரை மாநகரமாகும். நாடக கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள் கூட மதுரை என்று போட்டுக் கொண்டதை அவ்வை சண்முகம் நாடக வாழ்க்கையின் மூலம் அறிய முடிகிறது.

அவ்வை சண்முகம் நாடகத்தில் நாடக வகைகள்

பழங்காலத்தில் நாடகங்களை மூன்று வகையாகப் பிரித்திருந்தார்கள். ஒன்று பக்திரசமான புராணக்கதைகள். இவைகளை கோவிலில் நடத்தி வந்தார்கள். மற்றொன்று வீரர்கதைகள். இவை அரசர்கள் முன்னிலையில் நடிக்கப்பட்டன. மூன்றாவது அறிவுவளர்ச்சிக் கதைகள். இவைகளை மக்கள் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். அவ்வை சண்முகத்தின் நாடகத்தில் இலக்கிய நாடகம்,  சமூகசீர்திருத்த நாடகம், வரலாற்று நாடகம்,  புராண நாடகம்இ விடுதலை இயக்க நாடகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இலக்கிய நாடகம்

இலக்கியம் சார்ந்த நாடகங்கள் இவ்வகையில் அடங்கும். அவ்வை சண்முகத்தின் முதல் இலக்கிய நாடகமான “கோவலன்”; நாடகம் தஞ்சை காமாட்சியம்மாள் நாடகக் கொட்டகையில் நடத்தப்பட்டது. கோவலன் நாடகத்தில் பாடல்கள் அதிகம் இடம்பெற்றதையும் கோவலன் நாடகத்தில் சண்முகம் இடைச்சி வேடத்தில் “தயிர் வாங்கலையோ” என்று பாடி மேடையில் வரும்போது சபையில் சில ரசிகர்கள் சில்லறை நாணயங்களையும், ரூபாய்களையும் அவர்மீது வீசி எறிந்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கின்றனர்.

சமூகச் சீர்திருத்த நாடகம்

சமூக நிகழ்வுகளில் புதிய மாற்றத்தையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய நாடகங்கள் இவ்வகையில் அடங்கும். சிறந்த நாடக ஆசிரியரான எம்.ஆர்.சாமிநாதன் எழுதிய "ஜம்புலிங்கம்"| என்னும் சமூகச்சீர்திருத்த நாடகத்தை 1934ம் ஆண்டில் நடித்ததை தன் நாடக வாழ்க்கையில் குறித்துள்ளார். "டம்பாச்சாரி"  நாடகம் தமிழகத்தின் முதன் முதலாக நடிக்கப் பெற்ற சமூக நாடகமாகும். இந்நாடகத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு செல்வச்சீமானின் கதையாகும். தாசியின் மையால் சிக்கி சீரழிந்த ஒருவரின் வரலாறு பற்றியதாகும் என்று தன் நாடக வாழ்க்கையில் விவரிக்கின்றார். அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்”; அல்லது “கொலைகாரியின் குறிப்புகள்”; என்னும் பெயரில் முதல் புதினம் “திராவிடநாடு” என்னும் இதழில் வாரந்தோறும்; வெளிவந்தது. இந்நாவலை நாடகமாக்கியவர் டி.கே.எஸ் குழுவினர். இது விதவை மறுமணத்தை ஆதரிக்கும் நாடகமாகத் திகழ்ந்தது.

வரலாற்று நாடகம்

வரலாற்று நாடகங்களில் இருவகை உண்டு. உண்மையான வரலாற்றை ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் நாடகங்கள் ஒருவகை. கற்பனையான வரலாற்றுப் பின்னனியில் எழுதப்படுபவை மற்றொரு வகையாகும். அவ்வை சண்முகத்தின் நாடகத்தில் இந்த இருவகை நாடக அமைப்பும் உண்டு. “வீரசிவாஜி” நாடகம் 1944ம் ஆண்டு ஜனவரியில் பாலக்காட்டில் நடந்தது. "சேரன் செங்குட்டுவன்" , "இமயத்தின் நாம்", "மனோகரா"| முதலிய வரலாற்று நாடகங்களிலும் தன் முத்திரையை பதித்தவர் அவ்வை சண்முகம்.

புராண நாடகம்

இறைச்சிந்தனையைப் பற்றி கூறும் நாடகம் புராண நாடகமாகும். இப்புராண நாடகங்கள் பழங்காலத்திலேயே இருந்தது. சங்கரதாஸ் சுவாமிகளின் "சதியனுசியா"| நாடகம் ஒன்பதே நாளில் நடிக்கப்பட்டது பற்றியும், அடுத்து புராண நாடகம் “பக்ததுருவன்”; நாடகத்தில் ஆங்கில மொழி இருந்ததையும், மக்கள் ரசித்ததையும் தன் நாடக வாழ்க்கையில் அவ்வை சண்முகம் குறிப்பிட்டுள்ளார். அவ்வை சண்முகத்தின் புராண நாடகத்தில் ஒரு புதுவித நாடகமாக உருவான நாடகம் "சிவலீலா"| ஆகும்.

விடுதலை இயக்க நாடகங்கள்

விடுதலையை மையமாக வைத்து தோன்றிய நாடகங்கள் விடுதலை இயக்க நாடகங்கள் ஆகும். "கதரின் வெற்றி"| ஒரு தேசிய நாடகமாகும். அவ்வை சண்முகத்தின் “தேசபக்தி” நாடகத்தில் தேசிய வீரர்களும்,  வீராங்கனைகளும் புனிதமான கதரிலே ஆன உடைகள் தைத்து நடித்ததையும் சுவாரஸ்யமாக அவ்வை சண்முகம் எடுத்துரைத்துள்ளார்.

முடிவுரை

கலைப்பணியில் அவ்வை சண்முகத்திற்கு தனியிடம் உண்டு. இறுதி மூச்சுவரை நாடகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நாடக உலகில் நடிப்பின் சிகரமாகத் திகழ்ந்தவர். இவரின் நாடக அனுபவங்களை படிக்கும் போது ஒரு மனிதனின் வளர்ச்சி சுலபத்தில் நிகழ்ந்து விடுவதில்லை அதற்கு அவன் பல இடையூறுகளையும், பல துன்பங்களையும் சந்தித்த பிறகே முழுமையான வெற்றி பெறமுடியும் என்பது புலனாகிறது.        

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.