'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


 

முன்னுரை:
சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளன.  சங்க காலத்தில் வேளாண்மைப்பண்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.  வேளாண்மை சமூக மாற்றத்திற்கான அடிகோலாய் தோன்றின எனலாம்.  சங்கச் சமுதாயம் இனக்குழு வாழ்விலிருந்து அரசு உருவாக்கத்திற்கும், நகரமயமாதலுக்கும் அடிப்படையாய் அமைந்தன.  இவ்வேளாண்மைப்பண்பாட்டை பற்றிக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பண்பாடு
பண்பாடு எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'உரடவரசந' என்று கூறுவர்.  பண்பாடு எனும் சொல் 'பண்படு' என்னும் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது எனலாம்.  நல்ல பழக்க வழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் மனிதனைப் பண்பட்ட மனிதன் எனலாம்.  பண்பட்ட உள்ளம் கொண்டவரைப் பண்பாட்டைப் பின்பற்றுவர்கள் எனலாம்.  பண்பாடு எனும் சொல்லிற்கு 'செம்மைப்படுத்தல்' என்னும் பொருளும் இச்சொல்லுக்கு அமையப்பெற்றுள்ளதை அறியலாம்.  'பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகளால் இணைக்கப்பெற்ற ஒழுங்கமைப்பு ஆகும்.  கற்றுணர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும் நடத்தை முறைகளின் தொகுப்பே பண்பாடு என மானிடவியலாளர் கூறுவர்.  மேலும், சீர்படுதல், பண்ணுதல் என்ற பொருளும் பண்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

மருத நில ஊர்கள்
மருத நில ஊர்கள் மருத நில வேளாண்மை பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காட்டு நிலத்திற்கும், கடலோர நிலத்திற்கும் இடைப்பட்ட நீர் வளமிக்க ஆற்றுப்படுகையில் அமைந்த ஊர்களை மருத நில ஊர்கள் என அழைக்கபடுகிறது.  இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.  இந்நிலப்பகுதி பல்வேறு பயிர் வகைகளை வேளாண்மை செய்ய ஏற்ற நிலவளமும் நீர் வளமும் கொண்ட பகுதியாக உள்ளன.  மருத நில ஊர்களைச் சுற்றிலும் குளிர்ந்த வயல் பரப்புகள் காணப்பட்டன.  பல்வகை உணவுப் பொருட்கள் கொண்ட (நெற்கூடுகள்) குதிர்கள் வீடுகளில் இருந்தன.  மக்கள் வாழ்கை வேண்டிய பல் பொருளும் நிரம்பியிருத்தலினாலே மருத மக்கள் பசியின் கொடுமையை அறியாதிருந்தனர் என்பதை

'தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர்ஊர் ..........'
பெரும்பாணாற்றுப்படை(253-254)
இப்பாடலின் மூலம் மருத நில ஊர்கள் அறியலாம்.

மருத நில வேளாண் மக்கள்
மருத நிலத்துத் தலைமகனை 'மகிழ்நன்' 'ஊரன்' என்று அழைப்பர்.  இம் மருத நிலத்தில் வாழும் வோளண் மக்களைக் களமர், தொழுவர், உழவர், தொழுவர், அரிநர், வினைஞர், அரிஞர், அரிவணர், கடைசியர், ஏராளர் என்று புலவர்கள் கூறுவதைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம்.  இதை

'-------  அரி நெல்லின்
இனக் களமர்
(பொருநாராற்றுப்படை 193-194)
'----------
கருங்கை வினைஞர்......' (பெரும்பாணாற்றுப்படை 223)

இப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.  மேலும், வேளாண் மக்களை உழுதுண்ணும் வோளண் மக்கள்இ உழுவித்து உண்ணும் வேளாண் மக்கள் என இருவகையாகத் தொல்காப்பிய உரையாசிரியருள் ஒருவரான 'நச்சினார்க்கினியரின் உரைமூலம் அறியலாம்.

வேளாண்மைக் களம்
வேளாண்மைக்குரிய நிலத்தைச் சங்க இலக்கியங்களில்

வன்புலம், மென்புலம் என்னு இரண்டாகப் பிரிக்கலாம்.  மருத நிலம் நீர் வளம் மிக்க பகுதியதலால் மென்புலம் என்றே இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது என்பதை

'..........
மென்புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
.........'  (புறநானூறு:42:18)

இப்பாடல் உணர்த்துகின்றது.  மேலும், மருத நில மக்கள் வேளாண்மை செய்யும் நிலத்தை களம், செய், தண்டலை, தண்ணடை, பணை, புலம், பழனம், போன்ற பெயர்களில் அழைத்தற்கு சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.  என்பதை

'............
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும்.....'  (அகநானூறு:84:12-13)

'........
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
...............'  (அகநானூறு:91:14)

'........
புசி என அறியாப் பணை பயில் இருக்கை
..........(அகநானூறு:91:14)

இப்பாடல்கள் உணர்த்துகின்றன.

வேளாண்மை பயிர் வகைகள்:
மருத நில மக்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வேளாண்மை பயிர் வகைகள், நெல், கரும்பு, முக்கியத்துவம் பெற்றன.  வாழை, வெற்றிலைக் கொடி, உளுந்து போன்றவையாகும்.  செந்நெல், வெண்ணெல் (அகம்:6:4:5) போன்ற நெல் வகைகள் மருத நில வயல்களில் அதிகமாக விளைவிக்கப்பட்டன.  மேலும், கரும்பும் அதிகமாக விளைவிக்கப்பட்டன. என்பதை (பொ.ஆ,193 ஐங்,4:4-6) சங்க இலக்கிய பாடல்களின் வழி அறியலாம்.  உளுந்து போன்ற பயறு வகைகள் ஊடு பயிர்களாக விளைவிக்கப்பட்டதை (ஐ-47:3) ஐங்குறுநூற்றுப் பாடல் வழி அறியலாம்.

இப்பாடல் மூலம் அறியலாம்.

மேலும் வெற்றிலைக் கொடிகளைத் தனியே வளர்த்து பயிர் செய்ததை

'............. இன்நீர்ப் பசுங்காய்,
நீடு கொடி இலையினர் ........'  (மதுரைக்காஞ்சி 400-401)

மருத நில பயர் வகைகள் பெரும்பாலும் மற்ற நிலங்களில் பயிரிடல் பெறததால் மருத நிலப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைகிறது.

உழுதல்
மருத நில மக்களின் உழுதலுக்குப் பயன்படுத்திய கருவிகள் அவர்களின் பண்பாட்டை பதிவு செய்யும் விதத்தில் அமைகின்றன.  உழவுக்கருவிகள் ஏர், உழுபடை (கலப்பை), நாஞசில் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன.  வேளாண்மைக்கு முதலில் கலப்பையில் எருதுகளைப் பூட்டி நிலத்தை நன்றாக உழுது பழக்கப்படுத்தியதை

'.............
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து
குடுமிக் கட்டிய படப்பையொடு......  (அகம்:41:4-5)


இப்பாடல் மூலம் அறியலாம்.  மேலும், சேற்றுழவு உழுதலையும், நெல் அறுவடை செய்த பின் மீண்டும் உழுதலையும், மழை பெய்த போது நிலத்தை உழுதலையும் சங்கப்பாடல்கள்

'..........
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செஞ்சால் உழவர் கோல் ...'  (நற்:40:6-7)
'அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
,,,,,,,..'  (நற்:210:1-2)
'..........
ஈறம் பட்ட செவ்விப் பமை;புனத்து
ஓரேர் உழவன் .........(குறுந்தொகை(131:4-5)

சான்றளிக்கின்றன

விதைத்தல்
நிலத்தை நன்றாக உழுது பக்குவப்படுத்தியப் பின்னர் விதைகளை விதைத்தனர்.  மேலும், விதைத்தப்பின் விதைகளைக் கொண்டுச் சென்ற கடகப் பெட்டியில் (விதைப்பெட்டியில்) கழனிகளில் கிடைக்கும் மீன்களைப் பெண்கள் எடுத்துச் சென்றனர் என்பதை

'அரிகால் மாறிய........
...........
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும்..........' (நற்:210)

நாற்று வளர்த்தல் மற்றும் பறித்து நடுதல்
உழுத வயலில் உழுவர்கள் அதிகாலையிலேயே நடுகை ஆட்கள் நாற்று நட்டதைச் சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன.  நாற்றாங்காலில் வளர்க்கப்பட்ட பயிர், பறிக்கப்பட்டுப் பின்னர், வயல்களில் நடப்படும் பழக்கம் மருத நிலத்து வேளாண்மை பண்பாட்டைப் பதிவு செய்கிறது.  மேலும் நெல்லை அப்படியே விதைத்து வளர்க்கும் வழக்கம் மருத மக்களிடையே இல்லையென்பதும் தெளிவாகத் தெரிகிறது.  இதை

'............
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்
..........
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின்.........'  (நற்:60:2-8)
'..........
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்,
........'  (பெரும்பாணாற்றுப்படை:212)

நீர்ப்பாசனம்
வயல்களுக்குத் தேவையான நீர் ஆறுகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் பெறப்பட்டன.  பெரியக் குளங்களிலிருந்து நீரை மடைமூலம் வெளியேற்றி கால்வாய் வழியாக ஓடச் செய்து வயல்வரப்புகளை வெட்டி நீரைப் பாய்ச்சி வேளாண்மை செய்ததார்கள் மேலும், வேளாண்மைக்கு பய்னபடும் குளத்தைக் காவல் காக்க காவலர்கள் இருந்தார்கள் என்பதைச் சங்கப் பாடல்கள் தெளிவுப்படுத்துன்றன.

அறுவடைக் களம்
கழனிகளில் விளைந்து காணப்பட்ட கதிர்கள் முற்றிச் செந்நிறமானவுடன் அநநெற்கதிர்களை உழவர்கள் அறுவடை செய்து களத்து மேடுகளில் அடுக்கிய பின்னர் பெருங்களத்தில் கதிர்களைக் களைத்துப் பரப்பி அவற்றின் மேல் கடா விட்டு நெல்லை வேறாகப் பிரிப்பார்கள்.  பின்னா திரட்டிய நெற்குவியல் (பொங்கழி) தூசியோடு காணப்படுவதால் அவற்றை முறங்களில் அள்ளி மேல்காற்றில் தூற்றுவார்கள் இதனை,

'..........
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடைக்கும்,
சாலி நெல்லின்இ சிறைகொள்..........'  (பொருநராற்றுப்படை 244-246)

இவ்வாறான தூற்றிய நெற்குவியலை உழவர்கள் தங்களின் இல்லங்களில் குதிர்களில் சேர்த்து வைப்பார்கள்.  மேலும், களத்தில் வரும் இரவலர்களுக்கு நெல்லை வாரி வழங்கும் இப்பண்பு வேளாண் பண்போடு கொடைப் பண்பும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.  என்பதனை

'..........
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்கவீசி,
.........'  (அகம்-30:8-9)
இப்பாடல் உணர்த்துகின்றது.

முடிவுரை
வேணாண்மையை அடிப்டையாய் கொண்டிருந்த மருத நிலச் சமூகம் வேளாண்மை வளர்ச்சியால் அரசு நிறுவனமாயதாலுக்கு தூண்டுகொளாய் அமைந்தன.  இவ்வாறான வேளாண்மை பண்பாட்டை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. 

* கட்டுரையாளர்: - மு.ச.இசக்கியம்மாள், முனைவர் பட்ட ஆய்வாளர், மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி.,திருநெல்வேலி.-