பேராசிரியர் மெளனகுருவுடன் நோர்வே ஊடகவியலாளர் வசீகரன் நடாத்திய நேர்காணல்
பேராசிரியர் மெளனகுருவுடன் நோர்வே ஊடகவியலாளர் வசீகரன் நடாத்திய நேர்காணல். பல்வேறு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக, தெளிவாகப் பேராசிரியர் பதிலளிக்கின்றார்.

வசீகரன் அவர்கள் பேராசிரியரிடம் அவர் எதற்காக புராணப்பாத்திரங்களை வைத்து நாடகங்களை உருவாக்குகின்றார். அண்மைக்கால அழிவுகளை வைத்து ஏன் உருவாக்கவில்லை என்னும் அர்த்தப்படக் கேள்விகளை முன் வைத்தபோது பேராசிரியர் அவர் புராண பாத்திரங்களை முன் வைத்தாலும் சம கால நிகழ்வுகளின் குறியீடுகளாகத்தான் அவற்றைப் பாவிப்பதாகக் கூறினார். யாருக்காகவும் தன் பாணியை மாற்றப்போவதில்லையென்றும் கூறினார். அறுபதுகளில் தீண்டாமைப்பிரச்சினை பற்றியெரிந்துகொண்டிருக்கையில் தான் உருவாக்கிய சங்காரம் நாடகம் கூட அக்கால நிகழ்வுகளை மையமாக வைத்ததுதானென்றார். புராணப்பாத்திரங்களை உள்ளடக்கியதாகவிருந்த போதுமென்றார்.

புராணப்பாத்திரங்கள் இருப்பதால் , அவை குறியீடுகளாக இருக்கின்றன. இதனை நேர்காணல் கண்டவர் உணரவில்லையோ என்றும் தோன்றியது. புராணப்பாத்திரங்கள் என்பதால் அவை புராண காலக்கதைகளைக் கூறுகின்றன என்று வசீகரன் எண்ணிவிட்டார் போன்ற தோற்றத்தை அவர் அவ்வகைக் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டது உருவாக்கியது. கலைஞர்களுக்கு எவ்விதம் தம் படைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற சுதந்திரமுண்டு. அச்சுதந்திரத்தில் யாருமே தலையிட முடியாது. அதனைத்தான் பேராசிரியர் தன் பதிலில் அடித்துக்கூறினார் அச்சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்று.

நல்லதொரு நேர்காணல் . கேட்டு மகிழுங்கள். சிந்தியுங்கள். அறியாதவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=Eu_mYM7xgYE&feature=youtu.be&fbclid=IwAR31p-jYxrcwd-NHzwu_BIdki04Z2ub5buN5n5CFiXJJU-0ujiY82XFq5N4