புகலிடத்திலிருந்து பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் நாட்டிலிருக்கும் போரினால் பாதிக்கப்பட்டுப் பல்வகைதேவைகளை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்குப் பல்வகைத்திட்டங்கள் மூலம் உதவி வருகின்றார்கள். இவ்வகையில் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச்சங்கத்தினரும் கல்வித்திட்டமொன்றினை நடத்தி வருகின்றார்கள். 'ஊருணித்திட்டம்' என்னும் அத்திட்டம் அங்குள்ள மாணவர்களுக்குக் கல்வியில் உதவி வரும் திட்டங்களிலொன்று. அது பற்றிய காணொளியிது. இக்காணொளி அத்திட்டம் பற்றிய புரிதலை உங்களுக்குத் தரும்.
இத்திட்டம் பற்றிய யாழ் இந்துக்கல்லூரிக் கனடாச் சங்கத்தின் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது:

"யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா, தாயகத்தில் “ஊருணி செயல் திட்டம்” மூலமாக ஆதரவு தேவைப்படும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்துவருகின்றனர். இத்திட்டம் இன்று படிப்படியாக விரிவடைந்து, ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரையிலான 105 மாணவர்களுக்கு உதவும் திட்டமாக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. தற்போது தாயகத்து மாணவர்களுக்கு நிகழ்நேர மெய்நிகர் வகுப்பு (Live Virtual Class): ஸ்கைப் (Skype) மூலம் ஆங்கில பாடம் கற்பிக்கும் முயற்சியினையும் முன்னெடுத்துள்ளனர்."

காணொளிக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=nLZM1DzISVo&feature=youtu.be