நிகழ்வு: லண்டனில் பிரீத்தி பவித்ரா மகேந்திரனின் புல்லாங்குழல் இசை

‘அரங்கேற்றம் என்பது ஒரு இளம் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும். பத்து வருடங்களுக்கு மேலாக புல்லாங்குழல் இசையை, பிரபல வேணுகானமணி ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனைக் குருவாகக் கொண்டு பயின்ற பிரீத்தியின் அரங்கேற்றமோ ஒரு புல்லாங்குழல் கச்சேரியைப் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. அபாரமான தேர்ச்சி பெற்ற கலைஞர் போன்று பிரித்தி பவித்ரா பிரபல மிருதங்க வித்துவான் ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரா, பிரபல வயலின் வித்துவான் ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் போன்ற கலைஞர்களுடன் தனது புல்லாங்குழல் இசையின் தாள லயம் குறித்த உணர்வை முக பாவங்கேளோடு வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. பிரீத்தியின் அண்ணனான டாக்டர் மேவின் மகேந்திரன் தன்னடக்கத்தோடு மோர்ஷிங் இசையை அழகாக வாசித்து தங்கைக்கு புத்துணர்வை ஏற்படுத்திய விதம் மகிழ்வு தரும் ஒன்றாகும்’ என்று செப்டம்பர் 21ஆம் திகதி லண்டன் ‘பெக்’ தியேட்டரில் இடம்பெற்ற அரங்கேற்றத்தில், சென்னையிலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ என். ராமகிருஷ்ணன்  தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் வர்ணம் முதல் பக்திப்பாடல்கள், ராகம் தாளம் பல்லவி வரை பிரீத்தியின் புல்லாங்குழல் இசையின் வாசிப்பு உயர்ந்த உன்னதமான உணர்வுகொண்ட தளத்துக்கு கலையை உயர்த்துகிறது. அங்கிருந்த பார்வையாளர்களையும் அவளின் சிறப்புமிக்க ஊக்கத்திற்கு எழுந்து நின்று பாராட்டைப் பொழியும்படி கேட்டுக்கொண்டார், கலையின் அழகியலை ரசித்து கலை வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மகேந்திரன் - வதனி, சகோதரன் மேவின் குடும்பத்தினரைப் பாராட்டி, பிரீத்தியின் இத்தகைய கலை ஆர்வத்தை சென்னையில் இடம்பெறும்; இசை உற்சவத்திற்கு அழைத்து அவளை மேலும் ஊக்குவிக்கவேண்டும்’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

‘பரதக் கலை, கர்நாடக இசை. புல்லாங்குழல் என்று பல்கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெறுவது என்பது இலகுவான செயலன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவியாக இருந்தும், இத்தகைய கலைகளையும் நேர்த்தியோடு கற்றுத் தேர்ந்துள்ளமை பிரமிக்க வேண்டிய ஒன்றாகும். நாட்டியத் துறையிலும் பிரகாசித்துக்கொண்டிருக்கும்  பிரீத்தி;; இன்று ராஜ வாத்தியம் என்று வர்ணிக்கப்படும் புல்லாங்குழல் இசை மூலம் கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்துவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அவளது கடின உழைப்புக்கும், அழகியல் சார்ந்த இத்தகைய உணர்வுகளுக்கும் எனது உளம் நிறைந்த  உயர்ந்த பாராட்டுக்கள்!’  என்று ஸ்ரீமதி உஷா ராகவன் தனது கௌரவ விருந்தினர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

‘நாம் பல்வேறு மாணவர்களை அரங்கேற்றம் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறோம். பல குறிப்புக்களை தாள்களில் எழுதிக்கொடுத்து அதன்படி இளம் கலைஞர்களை அரங்கேற்றத்தின்போது முன்னெடுப்பதுண்டு. ஆனால் பிரீத்தி எந்த வித குறிப்புகளுமின்றி பண்பட்ட பயிற்சிகளின் மூலம் புல்லாங்குழல் இசையை லாவகமாக, சற்றும் நீர்த்துப்போகாத ஒட்டுமொத்த நுண்ணிய அழகையே ஒருங்கிணைத்;து நிகழ்த்திக்காட்டினார் என்று பாராட்டினார்;. அவளின் பெற்றோரின் அக்கறையான செயற்பாடுகளையும், கலைகளுக்குக் காட்டும் முக்கியத்துவத்தையும் பாராட்டியே ஆக வேண்டும். அத்தோடு பிர்Pத்தி தொடர்ந்து  இக்கலைகளை விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்’ என்று ஸ்ரீ துரை பாலசுப்ரமணியம் தனது சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வு: லண்டனில் பிரீத்தி பவித்ரா மகேந்திரனின் புல்லாங்குழல் இசை
வெண்ணெய் பானைகளிலிருந்து வழிந்தோடுவதுபோன்றும், மயிலின் இறகுகள் அசைந்தாடுவது போன்றும் வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்ட அழகிய நீலநிற மேடையில் கலைஞர்களின் கச்சிதமான ஒருங்கிணைப்பால்; பார்வையாளர்களை மகிழவைத்திருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ‘ஆனந்த லயாஸ்’ இன் ஸ்ரீ ஆனந்த நடேசன் கெஞ்சிரா, டாக்டர் மேவின் மகேந்திரன் மோர்சிங். ஜனன் சத்தியேந்திரன் தபேலா, தீபனா, திபீகா ஸ்ரீறீஸ்கந்தராஜா தம்புரா, ஸ்ரீ என் ராஜராமன் கடம், ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் வயலின், ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரா மிருதங்கம் போன்ற பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து கண்ணனின் வாத்தியமென வர்ணிக்கப்படும் வேணுகானத்தை பீரீத்தி லய உணர்வோடு வாசித்திருந்தாள். மண்டபம் நிறைந்த கலை ரசிகர்களோடும், பிரீத்தியின் குருவான வேணுகானமணி ஸ்ரீ பிச்சையப்பாவின் வழிமொழியோடும், சிவஸ்ரீ ராமநாதக் குருக்களின் ஆசீரோடும் இனிய நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.