அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் செங்கதிர் இதழின் ஆசிரியருமான த. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர். மெல்பன், கன்பரா மற்றும் சிட்னியைச்சேர்ந்த எழுத்தாளர்களும் ஒன்றுகூடும் இந்நிகழ்ச்சியில் நூல்களின் அறிமுகம், கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும்.
நிகழ்ச்சிகள்:
நூல் அறிமுகம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு
சந்திரிக்கா சுப்பிரமணியம்: சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் - ( வரலாறு)
கார்த்திக்வேல்சாமி: நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)
கலையரசி சின்னையா: முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் (புனைவுசாரா இலக்கியம்)
எஸ். எழில்வேந்தன்: 'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)
இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஊடகங்களும் வாசிப்பு அனுபவங்களும் என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|