நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

Sunday, 02 July 2017 13:03 - தகவல்: முருகபூபதி - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

அன்புடையீர் வணக்கம். அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவிபெறும் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பயின்று நிதியத்தின் உதவி பெற்ற செல்வி க. ஹர்சினி, இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்மாணவி தற்போது தனது பட்டப்படிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராஜா, மற்றும் சமூகப்பணியாளர் செங்கதிர் கோபாலகிருஷ்ணன், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், சீர்மிய ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் ஆகியோருடன் முருகபூபதியும் பங்குபற்றினர். உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும்,  நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

தகவல்: முருகபூபதி இலங்கை மாணவர் கல்வி நிதியம்- அவுஸ்திரேலியா
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 15 July 2017 10:05