”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்.  ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய  “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு  இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.

நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி  வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில்  கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும்   முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை  நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.

முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன்  "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து அன்று மதிய நிகழ்வில் லண்டன் தமிழ்க் கழகத்தின் இயக்குனர் திரு சிவா பிள்ளை அவர்கள்  "கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் மொழியை மிக இலகுவாக திரைப்படப் பாடல்களைக் கொண்டு எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும் என்றும், லண்டனில் தமிழ்க் குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழ் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் செயல்முறையின் மூலம் தெளிவாக விளக்கினார்.

9 - 10 -2020 அன்று காலை 10 மணிக்குத் தமிழ் விக்கிபீடியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வரும் அன்பர் தகவலுழவன் " இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இதில் தமிழ் விக்கிபீடியாவின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் விக்கிபீடியாவில் எவ்வாறு ஒரு சொல்லை உள்ளீடு செய்வது? தமிழ் விக்கிபீடியாவில் எத்தனைப் பகுப்புகளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாக விளக்கினார்.

அன்று மதியம் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தலைமை பொறுப்பில் இருக்கும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்  "இணையத்தில் தமிழ் மொழிக் கற்றலும் கற்பித்தலும்"  என்ற தலைப்பில் உரையை வழங்கினார். இவ்வுலகில் இந்தக் கொரனா காலகட்டத்தில் நாம் இணைய வழியில் கற்றல் கற்பித்தலை எவ்வாறு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதையும், சிங்கப்பூரில் இந்த இணையவழிக் கற்றல்  கற்பித்தல் எந்த அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கமளித்தார்.     ]

”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்.

இணைய வழியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் இந்திய அளவில் 27 மாநிலங்களிலும், பன்னாட்டு அளவில் ஓமன், இலண்டன், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கனடா, மலேசியா ஆகிய 06 நாடுகளிலுருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

 

உள் மற்றும் வெளிநாட்டுப் பள்ளிகள் 04, 83 கலை அறிவியல் கல்லூரிகள், 01 பொறியியல் கல்லூரியும், 04 பல்கலைக்கழகங்களும், மத்தியசெம்மொழி ஆய்வு நிறுவனமும், 02 உள் வெளி வேளாண் பல்கலைக்கழகமும், ஸ்ரீலங்கா விபுலானந்தா இசைக்கல்லூரி பேராளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

இணைய வழியில் மொழிகளை மேம்பாடு அடையச் செய்தல்” எனும் தலைப்பில் இரண்டு நாள் (08.10.2020 & 09.10.2020) நடைப்பெற்ற பன்னாட்டுப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்களின் பின்னூட்டக் கருத்துரைகள் ஒரு சில சிவகாசி பி.எஸ்.ஆர் கல்லூரிப் பேராசிரியை மு.முத்துமாரி அவர்கள் இப்பயிலரங்கு மொழிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்றது என்று கூறியுள்ளார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எஸ்.பாரதி அவர்கள் மொழி நிபுணர்கலை வைத்து நடைபெற்ற இப்பயிலரங்கம் சிறப்புக்குரியது என்று எடுத்துரைத்துள்ளார்.

செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பள்ளி ஆசிரியர் திரு.ஜி.பரமசிவம் அவர்கள் பயிலரங்கில் அருமையான பாடல் படங்களுடன் கற்பித்தலையும் திறனையும் சுட்டிக்காட்டி விளக்கிய விதம் மிக அற்புதம் என கருத்துரை பதிவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் எங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது. அதனோடு மட்டுமின்றி கற்றல் கற்பித்தல் மிகவும் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். திரு.ஆர்.வேல்முருகன் அவர்கள் பன்மொழியில் ஆய்வு, ஒப்பிலக்கியம் மேற்கொள்ள இப்பயிலரங்கம் வழி வகை செய்கின்றது என கூறியுள்ளார்.

இந்நிகழ்வு நடப்பதற்கு அனுமதி நல்கிய ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐயா ஸ்ரீ. R.ராஜகோபாலன் அவர்களுக்கும், கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் CA அம்மங்கி V.பாலாஜி அவர்களுக்கும், கல்லூரியின் ஆலோசகர் முனைவர் N.ராமானுஜம் அவர்களுக்கும், இயக்குநர் முனைவர்  S.ஸ்ரீவித்யா அவர்களுக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் J.ராதிகா அவர்களுக்கும், துணைமுதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்களுக்கும், கலைப்புல முதன்மையர் முனைவர் R.P.இராஜேஸ்வரி அவர்களுக்கும், பிற துறை புலமுதன்மையர்களுக்கும், ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா அவர்களுக்கும், சமஸ்க்ருதத்துறைத் தலைவர் முனைவர் V.ராமன் அவர்களுக்கும், தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,  ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை, தமிழாய்வுத்துறைப் பேராசிரியப் பெருமக்களுக்கும், பிற துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த இரண்டு நாள் நிகழ்வையும் மணிவானதி YouTube வலை தளத்தில் வழியாக வெளியிட்டு உதவிய  கனடாவிலிருந்து “The Tamil Journal “ – நிறுவனர் திரு.சுகு பாலசுப்ரமணியன்,   ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தானையக்கத்துறைப் (Automation unit) அன்பர்களும் பங்களிப்பு செய்தார்கள். மேலும், இந்த  இணையப் பயிலரங்க நிகழ்வைத் திறம்பட நடத்திய நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப. சண்முகம் அவர்கள்  நன்றியுரை வழங்கினார்.

உரை வழங்கிய காணொலி தொடுப்பு கீழே

1.     https://youtu.be/VY3oDOSEmZoஇணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்
2.     https://youtu.be/gzmMBXGq90Q -  தகவலுழவன்
3.     https://youtu.be/Ms7dKJi1gJ8 -  information technology in tamil
4.     https://youtu.be/P82mveHv3RY - சிவாப்பிள்ளை
5.     https://youtu.be/BW64yvjd2V0 -  தொடக்கவிழா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.