சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019

Wednesday, 06 February 2019 00:12 -தமிழ் ஸ்டுடியோ.காம் - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள்சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 - முன்பதிவு தொடங்கியது

பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)

பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)

MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)

நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

இந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என "சினிமா சந்தை" என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு திரையரங்கரத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்ல தமிழ் ஸ்டுடியோவே வாகன வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துணையும் சேர்த்து உங்களுக்கு சினிமாவின் இன்னொரு புதிய உலகத்தை காட்டவிருக்கிறது. மூன்று நாட்கள் சினிமாவில் கறைந்துப்போக வாருங்கள். சினிமாவை அணு அணுவாக ரசித்து ருசித்துப் பருக உங்களுக்கான திருவிழா இது. அவசியம் கலந்துக்கொள்ளுங்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிக முக்கியமான திரைப்பட ஆளுமைகள் பங்கேற்கும் தமிழ்நாட்டின் பெருமைமிகு இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரை ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்.

அன்புடன்

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 06 February 2019 00:16