தமிழ் ஸ்டுடியோ : லெனின் விருது - 2017

Wednesday, 09 August 2017 09:13 - தமிழ் ஸ்டுடியோ - நிகழ்வுகள்
Print

நண்பர்களே, சுயாதீன திரைப்பட கலைஞர்களை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் லெனின் விருது வழங்ம் விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் பகிர்ந்திருக்கிறோம். வருகை புரிந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது வெறுமனே விருது மட்டுமல்ல, இந்திய சினிமாவின் மிக போற்றுதலுக்குரிய கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கலை, கலாச்சார பரிவர்த்தனை மேற்கொள்ளும் மிக முக்கிய நிகழ்வு. சென்ற ஆண்டு அனுராக் காஷ்யப் வந்திருந்தார். இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னோடி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் சென்னை வருகிறார். வாருங்கள் மலையாள சினிமா குறித்தும் உரையாடுவோம். சுயாதீன கலைஞர்களை போற்றுவோம். 15-08-2017, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணிக்கு.
பிரசாத் லேப் (70MM அரங்கம்)

லெனின் விருது பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்
விருதை வழங்கி தலைமையுரை ஆற்றுபவர்: அடூர் கோபாலகிருஷ்ணன்

சிறப்பு விருந்தினர்கள்:
இயக்குனர் மிஷ்கின்
ஓவியர் டிராட்ஸ்கி மருது
ஒளிப்பதிவாளர் செழியன்
வெங்கடேஷ் சக்கரவர்த்தி
அம்ஷன் குமார்
லலிதா கோபாலன்
இயக்குனர் அருண்மொழி & B. லெனின்

அனைவரும் வருக...அனுமதி இலவசம்...

தொடர்புக்கு: 9840698236

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 August 2017 09:17