மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

Friday, 06 December 2019 09:09 - நிர்மல் - நூல் அறிமுகம்
Print

- நூல் அறிமுகம் பகுதியில் உங்கள் நூல்கள், மின்னூல்கள் மற்றும் ஏனைய நூல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   - பதிவுகள் -


மின்னூல்: காணாமல் போன தேசங்கள்! - நிர்மல் -

மின்னூல்: காணாமல் போன தேசங்கள்!

அன்பு வணக்கம், என் பெயர் நிர்மல், நான் உங்கள் இணைய தளத்தை இணையத்தில் தேடும் பொழுது கண்டடைந்தேன். மிக்க தரமான தகவல்களை சிரத்தையோடு தரும் தளமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.  நான்  கிண்டிலில் ஒரு புக் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  காணாமல் போன தேசங்கள் என்கிற தலைப்பிலான என் புத்தகத்தில் எப்படி தேசங்கள்  அழிந்தன என்பதையும் , நில வளங்களை சரியாக பங்கீட்டு பல மொழி இனம் கொண்ட நாடுகள் சிறப்பாக வாழ்கின்றன என்பதையும்  எட்டு நாடுகளின் வரலாற்றை   எளிமையாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு ஏற்றது போல எழுதியுள்ளேன். யுகோஸ்லாவியா சிதறியது, கொசோவாவில் நடந்த இன அழிப்பு பற்றி எழுதியுள்ளேன்.

சோமாலியானின் கொடூரமான சூழலுக்கு காரணம் என்ன, சோவியத் யூனியன் உடைந்து போனது எப்படி, செக்கஸ்லோவாக்கியா எப்படி இரு நாடுகளாகின, கொசோவா வில் நடந்த இன ஒழிப்பு, கிழக்கு மேற்கு ஜெர்மனி இரண்டும் எப்படி ஒன்றானது, ஆப்பிரிக்க நாடுகளில் பொதூவாக காணப்படும் வன்முறைகள்  நிலையான அரசாங்கம் இல்லாமை, ஊழல் இனப்பகைச் சண்டைகள் போன்றவை இல்லாமல் எப்படி  பன்முக கலாசாரத்தோடு பல இனக் குழுக்களோடு வாழும் போட்ஸுவானாபற்றியும், எப்படி சுய அதிகாரம் கொண்ட மா நிலங்களின் கூட்டமைப்பான சுவிட்சர்லாந்து பற்றியும் எழுதியுள்ளேன். எந்த நீண்ட பாரம்பரிய வரலாறு இல்லாத ஒரு நிலம் எப்படி தனி நாடாக மாறியது என எஸ்தோனியா பற்றி எழுதியுள்ளேன்.
உங்கள் இணைய தளம் மூலம் அறிமுக படுத்துவதூ, சிறந்த வாசகர்கள் பலரை சென்று அடையும் என்கிற நம்பிக்கை உள்ளது.
இதுதான் என் பூத்தகத்தின் அமேசான் இணைப்பு. இது ஒரு இ-புத்தகம்
https://www.amazon.in/dp/B081K8H16Y/ref=cm_sw_r_cp_awdb_t1_Bdm0DbD27D5RT
அரசியல், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் என பரந்துபட்ட புரிதலுடன் எழுதப்பட்டது "காணாமல் போன தேசங்கள்”.  நாம் அறிந்திராத அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்ட கடந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். பூமி வெப்பமாகுதல் ஒரு புறம் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போதே, சத்தமே இல்லாமல் பல அரசியல் மாற்றங்களும் நிகழ்கின்றன என்பதை எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய தமிழில் எழுதியுள்ளார். இந்த மாற்றங்களால் பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட நாடுகள் சந்திக்கும் நெருக்கடிகளை மனதில் வைத்து எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிய முறையில் எழுதபட்ட புத்தகம் இது.

பூகோள வரைப்படங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ‘ காணாமல் போன தேசங்கள்’ வாசித்தால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும்.எது தேசங்களை உருவாக்குகிறது, எது தேசங்களைப் பிரிக்கிறது என்பதை சில நாடுகளின் வரலாற்றை சொல்லி நமக்கு விளங்க வைக்கிறது இந்த புத்தகம். நிலங்கள் மீதும் வளங்கள் மீதான அதிகார அரசியலால் காணாமல் போன தேசங்கள் எவை? இந்த அதிகாரங்களை திறம்பட நிறுவி எழுச்சியுற்ற தேசங்கள் எவை? என மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை தொகுப்புதான் "காணாமல் போன தேசங்கள்."

இணைப்பு: https://www.amazon.in/dp/B081K8H16Y/ref=cm_sw_r_cp_awdb_t1_Bdm0DbD27D5RT

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 06 December 2019 09:22