நூல் அறிமுகம்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்!

Friday, 01 November 2013 18:12 -காவியன்- நூல் அறிமுகம்
Print

நூல் அறிமுகம்: வியக்க வைக்கும் பிரபஞ்சம்!இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’  என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம்! இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று  பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து  வைத்துள்ளார் ஆசிரியர்.

பிரபஞ்சம் உருவான அறிவியல் முறைகளும், அதில் அடங்கிய அனைத்தும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. பிரபஞ்சம் விரிவடைந்த வண்ணம் உள்ளது. இந்தவெளியை ‘விசும்பு’ என்றும், ‘அகலிரு விசும்பு’ என்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்கள் கூறியுள்ளன. உலகத் தோற்றத்தினை ‘நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்று தொல்காப்பியர் வானியல் பேசியுள்ளார். இதே கருத்தினைப் புறநானூறும் கூறியுள்ளது.

கணக்கிட முடியாத விண்மீன்கள் வானில் நிறைந்துள்ளன. இவற்றின் தொகையை நூறு (100) பிரமகற்பம் (முக்கோடி) என்றும், அதிகமான விண்மீன்கள் நீண்ட காலமான நூறு கோடியிலிருந்து ஆயிரம் கோடி ஆண்டுகள் வரை வாழக்கூடியன என்றும் வானூலார் கூறிய செய்திகளும் உள்ளன.

சூரியன் பிறப்பு, வயது, விவரம், வாழ்ந்த காலம், சூரியன் ஆற்றும் சேவை, சூரியன் இன்றேல் உயிரினங்கள் இல்லை, உலகமும் இல்லை, இன்னும் அவன் 550 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்வான் என்ற பற்பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

நிலாவின் தோற்றம், அதன் பிரகாசம், விவரங்கள், சந்திர கிரணம், நிலாவின் ஈர்ப்புச் சக்தி, கதிரவன் மண்டலத்திலுள்ள 176 நிலாக்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில், நூறு ஆயிரம் கோடி நிலாக்கள் உள்ளன போன்ற செய்திகள் மக்களைக் கவரக் கூடியதாகவுள்ளன.
 
திரு. மீ. ராஜகோபாலன் (மீ.ரா) அவர்களின் அணிந்துரையும், அவர் உவந்தளித்த அட்டைப்பட ஓவியமும் இந்நூலை மேலும் அலங்கரித்து நிற்கின்றன.

இந் நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:-

K. Wijeyaratnam,
35,  Southborough  Road,
Bickley, Bromley,  Kent.
BR1  2EA

Telephone No.  020  3489  6569
E-mail :-  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Price per copy:- £3.00 + postage  charges.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 01 November 2013 18:17