பாயிஸா அலி கவிதைகள்!

Thursday, 23 May 2013 18:52 - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி - நூல் அறிமுகம்
Print

பாயிஸா அலி கவிதைகள்!இலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு  கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை  )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின்   கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண்.  கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன்  கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.

சிந்தனை  ஊற்றுக்களால்  மனம் மகிழ
எழுதும் விதம் கற்றாய் கவிதைத்
தரத்தால் இமயச் சிகரம் தாண்டும்
தன்மை பெற்றுவிட்டாய் - பாயிஸா

அழகொளிக்கும் பாயிசாவின் கவிதை பற்றி நான் நேசிக்கும் இலங்கை மண்ணின் பிரபலமான சிந்தனையாளர் பலராலும் விரும்பப்படுக்கின்ற அறிவிப்பாளரும் .கவிஞரும் .எழுத்தாளருமான சகோதரர் அஸ்ரப் சிஷாப்தீன் அவர்கள் தன்  மனதை தொட்டு மதிப்புரையை இப்படிப் பதிவு செய்து உள்ளார்.

நவீன கவிதைகள் என்றால் பாலுறுப்புக்களைப் பற்றிப் பேசவது  என்று பலர் நினைக்கின்றார்கள் எதுவும் மறைக்கப் பட்ட நிலையில் இருக்கும் வரை அல்லது தூரத்தே இருக்கும் வரையே அழகானதாக இருக்கும். தமிழில் எழுதும் சில பெண் கவிஞர்கள் அவ்வாறு எழுதுவதன் மூலம் தான் கவனத்தில் ஈர்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் தெளிவானது இதில் முஸ்லிம் ஆண்  கவிஞர்களும் அடங்குவார்கள். மற்றவர்களின் முன்னாள் தான் தனித்துத் தெரிவதற்கு வேறு ஏதும் இல்லாத பெண்களே உடலழகைக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள்.

இதன் மருவடிவமாகவே பாலியலைப்  பச்சையாக எழுதும் படைப்பாளிகளின் செயலை நான் பார்க்கின்றேன். ஆண்களில் சிலரும் கூட இவ்வாறான போக்கில் இருப்பதை நாம் கண்டே வருகின்றோம். பாயிசாவுக்கு அப்படி ஒரு நிலமை என்றைக்கும் எவராது என்பதற்கு அவரது கவிதைகள் உயிர்த் துடிப்போடுப் இன்று சாட்சிப் பகர்கின்றது

சமகாலத்தில் (தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ) ஈடுபடும் அநேகர் கவிதை என்ற பெயரால் இருண்மையும் .மயக்கமும் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கின்றாகள். எழுதுவோர்களுக்கும் புரியாமல் படிப்பவர்களுக்கும் புரியாமல் பெருந் திண்டாட்டமே நடந்தது கொண்டிருக்கிறது. மாறாக இதற்கு அப்பாட்டபட்டவர் பாயிஸா அலி. யாரும் அவர் எழுத்துக்களை விரும்பி படிக்கலாம்.

1997 - இல் தினகரன் சிறுவர் பகுதில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரைக்கும் இடைவெளியின்றி எழுதிக் கொண்டிருப்பதோடு ஏற்கனவே 'சிகரம் தொடவா , தங்கமீன் குஞ்சுகள், எனும் இரண்டு சேருவர் இலக்கியங்களையும் தந்து உள்ளார்.
ஆழமான இவரது அனைத்துக் கவிதைகளும் மனதை தொட்டுச் செல்கின்றது.

நடுங்கும் விரல் நுனிக்களுக்கும்
செவிப்பாறைக்கும் இடையிலோர்
மனித மிருகம் தனதான
பிறப்பின் முழு ரகசியங்களையும்
படு அநாகரிகமாய் ஒளி வடிவமிட்ட படி
தன்  கோர நாவினாலென்
உணர்வுளை  விறாண்டுகிறது.

என்று அருமையாகச் சொல்கின்றார்.

மேலுமிரு வண்ணாத்திகளாய், நானாகவே, சடன ஓய்ந்த பொன்மழை, தோழமையின் விரிகைக்குள்ளே,கனவுப் பூக்களும் கண்ணாடிக் கண்களும், அயல் வீட்டுப் பீர்கங்காக்  கொடி,பச்சைப் பொய்கள்,நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள், கண்ணீரில் கரையும் தலையணைகள், பேரலையின் முடிவினிலே, ஒற்றை வரி  ஒளி விசிறும் சிறு பூ, கருஞ்சுவரில் குழாய் வரைந்து, ஆயுதம்  இங்கே, சிட்டுக்குருவியே  சிட்டுக்குருவியே, ஒப்படைத்தாயிற்று ,இனியும் பொழியேண், கறந்த பாலின் வெது வெதுப்பாய், பாகற்காய்த் தீவுகளுக்குள், சிட்டுக் குருவிகளின் சிறை வாசகம், கால நேரம் சாலையோரம் மிதந்துவரும் நுரைப்பூவாய் ,அரூபமானவன்,ஒற்றைப் பூவும் உதிருமுன்பே, செல்லக் குழந்தையாகியே,கடல் கனவுக்குள் மிதக்குமோர் வெற்றுப்புன்னகை  மீளவேண்டும், தசை ரோபோ, உனக்கே உனக்காய் ,அபூர்வம், நீ, வெள்ளைச் சிரிப்பினிலே, பாறாங்கல், சீருடைப் பிறையே, கடைசி இருக்கை ஆகிய 43 கவிதை தலைப்புக்களில் 90 பக்கத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளது. கைக்கு அடக்கமான  நூல் இந்த நூல் பாயிசா அலியின் கவிதைகள் ஏற்றுக்கொள்கின்றேன். அவர் பிரசவம் என்று ஆனால் ஒரு குறை எனக்கு அவரது பிரசவமான கவிதைக் குழந்தைகளுக்கு ஒரு பெயர் வைக்காமல் விட்டது 43 அருமையான ஆழமான கவிதைத் தலைப்புக்களில் ஒரு தலைப்பை வைத்து இருந்ததால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் அத்தோடு இந்நூல் தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கள்  சபையினது அனுசரனையுடன் அச்சிடப்பட்டுள்ளது.
தனது அன்புக் கணவருக்கு  நூலை சமர்ப்பணம் செய்து உள்ளார்.

ஈழத்தின் பெண் கவிஞர் என்ற வரிசையில்  அதுவும் முஸ்லிம் எழுத்தாளர் என்ற வகையில் உரிய இடம் அளிக்கப்படுதல் அவசியம் இதில் எவரும் பின் நிற்க முடியாது  முஸ்லிம்  பெண் எழுத்தாளர்களின்  கௌரவம் பெண் பாடல் வேண்டும் என்பதை நாம் அறிவோம். பாயிசாவின் எழுத்துப் பணி தொடர மன நிறைவோடு அல்லாஹ்வைப் பிராத்திக்கின்றேன்.

நூல்:- பாயிஸா அலி கவிதைகள்
நூலாசிரியர்:- கிண்ணியா பாயிஸா அலி

இந்த நூலின் விலை 250 ரூபா

இந்  நூலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
கிண்ணியா எஸ் . பாயிஸா அலி
முனைச்சேனை வீதி,குரிஞ்சாகேணி - 03, கிண்ணியா
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it or www.faiza.kinniya.net

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 23 May 2013 19:08