நூல் அறிமுகம்: இலக்கிய – அறிவியல் நுகர்வுகள்

Thursday, 17 January 2013 19:18 --தகவல்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் - நூல் அறிமுகம்
Print

இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள்    என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள்    என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.

திரு. விசயரத்தினம் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஆராக் காதல் கொண்டவராதலால் அவருடைய கட்டுரைகள் அனைத்திலும் இலக்கிய வாடை கமழ்கிறது. அறிவியலை அணுகும் போதும் அதனைப் பழந்தமிழ் இலக்கியத்தின் ஊடாகப் பார்க்கின்ற ஒரு போக்கைப் பார்க்க முடிகின்றது.

கட்டுரைகளிற் பெரும்பாலானவை தமிழ் இலக்கியம் பற்றியே பேசுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்த ஒழுகலாறுகள் பற்றியும் ஆணித்தரமாகக் கூறிச் செல்கிறார். பண்டைத் தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும், குறுந்தொகைக் காட்சிகளின் மாட்சிமை பற்றியும், தொல்காப்பியர் காலம் பற்றியும், சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.

உள்ளத்தின் உயர்வுதான் உண்மையான நாகரிகத்தின் உயிர்நாடி; புறத்தின் வளர்ச்சி வெறும் வற்றல் நாகரிகமே; அது நாகரிகத்தின் உயிர்நாடி அன்று; அகவளர்ச்சியும் புறவளர்ச்சியும் ஒத்த அளவில் வளரவேண்டும். ஒன்றுக் கொன்று ஊன்றாக இருக்கிறவாறு வளரவேண்டும். அப்போதுதான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிh,; தீதும் நன்றும் பிறர்தரவாரா!’ என்ற மனநிலை ஓங்கும். இந்தக் கருத்தே ஆசிரியரின் இந்த நூலின் அடிநாதமாக உள்ளது.

பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போட்டுக், களைய வேண்டியன களையப்பட வேண்டும், நுழைய வேண்டியன நுழைய வேண்டும் என்று ஏங்குகின்ற ஆசிரியரின் இந்த நூலைத் தமிழ் உலகும் வரவேற்கும். அவருடைய தமிழ் உள்ளம் வாழ்க!

இந் நூலைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:-

K. Wijeyaratnam,
35> Southborough Road,
Bickley,  Bromley,  Kent.
BR1  2EA
Telephone No.  020 3489 6569   E-mail:-  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 17 January 2013 19:22