சிறுகதை: சந்திரமதி

Saturday, 05 December 2015 06:20 - நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். சிறுகதை
Print

 நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். சொந்தமென்றும், உறவென்றும், இலக்கியமென்றும், கலையுலகென்றும் மறைந்துகொண்டிருப்போரின் நினைவுகள் மனதைப் பம்பரமாக்கி, காலம் என்ற ககன வெளியில் சிதைத்தெறியும் துயரில் நான். நிம்மதி தேடி அலைகிறது மனம். நிற்பதுவும் நடப்பதுவும் வெறும் தோற்ற மயக்கங்களோ என்று  சிந்தனை சிலிர்க்கிறது. வீட்டில் நடந்துபோன துயர் அனுபவங்களும் மேலும் துயர் சோபையைக் கூட்டுகிறது. ஏன் சிந்தனை அலையைக் குறிக்கிட்டு தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நிதர்சன உலகில் நான். இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. ஒரே கதையைத் திரும்பத் திரும்ப சொல்லப்போகும் அழைப்பு மணி அது. இன்னுமொரு திகிலில் கதையைக் கொண்டு சேர்க்கப் போகிறதா அந்த அழைப்பு மணி. அழைக்காத விருந்தாளியாக  ஒலிக்கிறது அந்த அழைப்பு மணி. அழைப்பிற்கு பதில் சொல்லாமல் விடலாமோ என்று நினைத்தேன். அது நாகரீகமில்லை என்று மனதில் பட்டது.

‘ஹலோ’ என்றேன்

‘நான் சந்திரமதி கதைக்கிறேன்’

ஓ சந்ரமதியா? நெடுநாளாhகிவிட்டது.  என்ன விடயம்?

‘எனக்கொரு உதவி செய்ய வேணும் மாதங்கி. உங்களுக்கு லண்டனில் இருக்கிற நல்ல சமூகசேவையாளர்கள் என்று பலரையும் தெரியும்தானே! ஆங்கிலம் நல்லாகக் கதைக்கக்கூடிய ஒரு பொம்பிளை ஒருவரை அறிமுகஞ் செய்து தருவீங்களோ?’  

‘ஏன் உங்களுக்கு கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் தானே! உதவி செய்ய மாட்டார்களோ?’

‘எல்லோரும் இருக்கிறார்கள்தான். ஆனால்.’

மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிய விசும்பல் அவளது பதிலில் ஒலித்தது. ‘ஏன் கவலைப்படுகிறீங்கள்?  என்ன நடந்தது?...’

‘அது பெரிய கதை மாதங்கி. ‘என்னுடைய தாய்தகப்பனுக்கு நான் ஒரே ஒரு பொம்பிளைப்;பிள்ளை. ஊருக்குள்தான் காதலிச்சுக் கலியாணம் முடிச்சு எனக்கு நாலு பிள்ளையள். கொஞ்சம் குறைந்த வயதிலேயே கலியாணம் செய்துவிட்டேன். என்ர மனுசன் லண்டனுக்கு நேரத்தோட வந்திட்டார். லண்டனில் தனது ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் வீட்டில்தான் இருந்தவர்;. என்னையும் பிள்ளைகளையும் ஊரில் விட்டுவிட்டு லண்டனில் இருந்து அவர் நன்றாக உழைத்தார்தான். ஆனால் ஒரே குடித்துக்கொண்டு பொறுப்பற்று இருந்ததாக  அறிந்தேன்.  பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பு இருந்தால் எல்லாவற்றையும் குறைப்பார்  என நம்பி எனது மூத்த இரண்டு; பிள்ளகளை முதலில் அவரிடம் அனுப்பி வைத்திருந்தேன். பிள்ளைகளை உறவுச் சகோதரி வீட்டில் இருந்து கவனிப்போடு வளர்த்தார்தான்.   ஆனால் நான் மற்ற இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு நான் பட்டபாட்டை வாழ்நாளில் மறக்க முடியாது என்று சொல்லி அவளின் நெஞ்சில் யாழ்ப்பாண மண்ணின் அலைகள் நினைவெறிந்தன. யுத்தம் அந்த அழகிய மண்ணில் தனது கோரத்தடங்களை பதித்து நடந்தகொண்டிருந்த வேளை.யில் தி;க்கற்றுக் கதறி ஓடிய மக்கள் கூட்டத்தோடு தனது  இரு செல்வங்களோடு இடம்விட்டு  இடம்பெயாந்து அலைந்து கொண்டு திரிந்த சோகக் காட்சிகள் அவள் நெஞ்சில் விரிந்தன...’

‘பச்சைப் பசேல் எனக் காட்சியளித்த நீண்ட வயற்பரப்புகள், மண் தொட்டு கண்ணில் ஒற்றி விதைப்புச் செய்து சந்தோஷம் துள்ளும் அழகால் செதுக்கப்பட்ட பூமித்துளி அந்தக் கிராமம். ஆனால், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் ரசாயனத்தால் விதைக்கப்பட்ட சுடுகாடாய்த் தெரிந்தன. பார்வை பதறி அலைவது தவிர்க்க முடியாமல் நேர்ந்த கணங்கள் அவை. குருதியும் பிணமுமாய் கசிந்துகொண்டிருந்தது வாழ்க்கைச்சூழல். எல்லாமே சூன்யம் சுழித்தோடிக்கொண்டிருந்த வேளை....’ 

ஆழ்ந்த விரிசல் தவிர்க்கமுடியாது உணர்வாகி சந்திரமதியுள் வெளிப்படுகிறது...

‘சந்திரமதி  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கோ! முடிந்ததுகளை நினைத்துக் கவலைப்படாதேயுங்N;கா  மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கோ!’

‘எனது இளைய மற்ற  இரு பிள்ளகளோடும்  இலங்கையில் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கிய வண்ணம்தான் இருந்தோம். என்றவளின் குரல் கமறியது..’

சந்திரமதியின் மனதில் யாழ்ப்பாண நினைவுகள் ரீங்காரமிட்டன.

யாழ்ப்பாண வட்டாரங்களில் பெருங்கிராமங்களைச் சுற்றி வளைத்து, சும்மா இருந்த அப்பாவிப் பொதுமக்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்லி அள்ளி பெரிய றக்குகளில் போட்டுக்கொண்டு, வதை முகாம்களுக்குக் கொண்டு சென்று மிருக ராணுவம் சித்திர வதைசெய்து கொண்டிருந்தது ஒரு புறம். எமது மண்ணை வென்றெடுக்கவேண்டும் என்றுசொல்லி இளைஞர்கள், யுவதிகளை பலவந்தப்படுத்தி இழுத்துச் சென்று வருத்தியவர்கள்; இன்னொருபுறம்;. இந்த மண்ணின் மக்களைச் சபித்துவிட்ட கொடிய தேவதை எது? ஏன் நாம் மனிதர்களாகப் பிறந்தோம் என்று மக்கள் மனம் கேவிக் கொண்டது! நெஞ்சு கொள்ளாத அடக்கப்பட்ட வாழ்வை இயல்பாக ஏற்கும் தர்மம் விதியாகிவிட்டது... மக்களோ வாழ்க்கைப் போராட்டத்திற்கிடையில் வலுவற்று நசிந்துகொண்டிருந்தார்கள்.

சந்திரமதியின் வாழ்வில் அவள் என்று நினைத்திராததுபோல் அந்த செய்தி காதில் விழுந்தது.  

‘ சந்தியில் நின்ற பொடியங்கள் சிலரை யாரோ பிடித்துக் கொண்டு போகின்றார்களாம். அதற்குள் உங்கள் மகனையும் பிடித்துக் கொண்டு போய்விட்டாங்களாம்’ கிராமத்துச் சிறுவன் ஒருவன் ஓடி வந்து சொன்னான். யார் பிடித்துக்கொண்டு போனார்கள் என்ற விபரம் அவனுக்குத் தெரியவில்லை.

‘சந்திரமதியின் உடல்; அதிர்ந்து துடித்துப்போனாள். நீர்த்தேக்கத்துள் அலைகின்ற நிழற்பின்னல்போல் மனம் மயங்கி மங்கலாகிக்கொண்டு வந்தது. வானத்தின் தெளிநீலம் சட்டென்று இருண்டது. அச்சம் அவளில்; சுரந்துகொண்டிருந்தது. நொதிக்கும் வியர்வை, கொதிக்கும் உடல், பிசுபிசுக்கும் உடைகள், மயக்கமுறும் நினைவுகள்.... தனது மகனைத் திரும்ப உயிரோடு காண்பேனா என்று எண்ணும்போது அவளது சுவாசப் பைகள் சிதைந்து வெடிப்பதுபோலிருந்தது. அவளது உடலே தனதல்லாதது போன்று தனித்து எடை கூடிக்கொண்டிருந்தது. ‘நான் என்ன செய்வேன்? எப்படி என் செல்வ மகனைக் காப்பாற்றுவேன் என்று அவள் துடித்தாள்?...’

அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும், கசிவும் சந்திரமதியைக்;; கரைத்துக்கொண்டிருந்தது.

அவளுடன் சேர்ந்து அவளது இளைய மகளும் சோகத்தில் துவண்டுபோயிருந்தாள். 

‘அம்மா அண்ணா திரும்பி வருவார். அம்மா சில பொடியங்களை பிடிச்சுப்போட்டு திருப்பி விடுகிறாங்களாம். யார் பிடித்துக்கொண்டு போனாலும் அண்ணா எப்பிடியாவது திரும்பி வந்திடுவார் என்று தான் எனக்கு மனம் சொல்லுது. ஏதோ நல்லகாலம் இருந்தால் அண்iணாவையும் திருப்பி அனுப்புவாங்கள். அம்மா அழாதையுங்கோ’ என்று பதினான்கு வயது இளைய மகள் சந்திரமதியைத்; தேற்றிக்கொண்டிருந்தாள். கலகலப்பும் குறும்புத்தனமும் துடுக்கும்; நிறைந்த அவள் சந்திரமதியை எவ்வளவுதான் தேற்றினாலும், சகோதரபாசம் அவளையும் அனலாயத் தாக்கியது.
நெஞ்சு கொள்ளாத கற்பனைகளாலும் நினைவுகளாலும் நெஞ்சு திக்கிக்கொண்டிருந்தது...

‘உது அவங்கட ஷெல்தான்.. ‘ 

‘சீசீ இது இவங்கட ஷெல்தான் வாற வேகத்தில தெரியுது... என்று சனங்கள் உலக மகா யுத்தங்களில் ஷெல் தாக்கங்களை நடாத்திய அனுபவம் கொண்டவர்கள்போல் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். யாருடைய ஷெல் விழுந்தால் என்ன எங்கட சொந்தமண் சிதறிப்போகுது என்றும் வயது வந்தவர்கள்; பேசிக்கொள்வார்கள். மிகைப்படுத்தப்படாத கோரச்சித்;திரங்கள் அவர்களுள் காட்சிகளாகி கோஷமின்றித் தீட்டப்பட்டுக்கொண்டேயிருக்கும்...
இந்த மாதிரி ஷெல்கள் விழுந்து அழிந்துகொண்டிருக்கும்போது இந்த நிலையை அறிந்து நாட்டைவிட்டு தப்பிஓடுவதைவிட்டு இங்கிருந்து எங்களுக்கு நாங்களே மண்ணை அள்ளிக் கொட்டுகிறோமா? ஏன்றும் சனங்கள் பேசிக்கொள்வார்கள்’

‘அது சரி மகனுக்கு என்ன நடந்தது’ என்று மற்றவர்கள் கேட்கும்போது சந்திரமதியின் நெஞ்சு பதைத்தது.

மகனைக் காணாது ஆறு மாதங்களுக்கு மேலாக அவள் பட்ட பாட்டை அவளே அறிவாள். என் வேதனைகள் என்னுள் அடிக்கடி கரைந்து மறைந்துகொண்டேயிருந்தது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘லண்டனில் இருக்கும் மற்றப் பிள்ளைகளோடு என் செல்வத்தையும் கடன்;பட்டாவது அனுப்பிவிட்டிருந்தால்; இப்படி ஒரு மரணபயத்தை நான் எதிர்கொள்ளவேண்டி இருந்திருக்க மாட்டாதே’ என்று சந்திரமதி பிதற்றிக்கொண்டு திரிந்தாள்.

அது உண்மைதானா அவள் காண்பது நிஜம்தானா?.

ஒரு நாள் மாலை நேரம் சந்திரமதியின்; வீட்டை நோக்கி யாரோ காலை நொண்டி நொண்டி வருவது தெரிகிறது.

இளைய மகள் ‘அண்ணா அண்ணா’ என்று கத்துகிறாள்.

சந்திரமதியின் உடல்; திகிலில் ஜில்லிட்டது. மகனின் காயம் மூடிக் கட்டப்பட்ட காலைப்; பார்த்துக் கதறினாள். தனது உயிரை திரும்பிப் பெற்ற உணர்வில் திளைத்தாள.; அது அவளுடைய இளைய மகன்தான். ‘எப்படியடா வந்தாய் என் செல்வமே’ என்று உச்சிமோர்ந்து கட்டித் தழுவினாள். அழுது புரண்டாள்;. அந்த உடலுக்கு உருக்கொடுத்து சுமந்து ஈன்ற தாயல்லவா அவள்...’

உறவின் கதகதப்பு எங்கும் பரவிக்கொண்டிருந்தது....

நெடுநேர மௌனத்தின்பின்...

‘அம்மா காலில் பாம்பு கடித்து விட்டது. கைமருந்தால் காப்பாற்றப்பட்டுள்ளேன். ஒரு காரணமும்; இப்போ கேட்காதையுங்கோ உடனேயே கொழும்புக்குச் சென்று வைத்தியம் பார்க்க வேண்டும்; அம்மா’ என்றான்

துணிiவும் நம்பிக்கையையும் நெஞ்சில் வரவழைத்து தன்னால் இயன்ற முயற்சிகளை சந்திரமதி மேற்கோண்டாள். கொழும்பிற்குச் சென்று அங்கிருந்து லண்டனில் இருக்கும் தனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அறிவித்து லண்டனுக்கு பயணத்தை மேற்கொள்வதுதான் சிறந்த வழி என சந்திரமதி உணர்ந்தாள். பலவித துக்கங்கள், அபாயங்கள் மத்தியிலும் சந்திரமதி நினைத்தது வெற்றியாக அமைந்துகொண்டிருந்துது.
தாலி தொடக்கம் காணி வரைக்கும் காணாமல் போயின.

‘நாளைக்குக் கொழும்புக்;குப் போகினமாம்’ என்று ஊர் கதைத்த நாளும் வந்தது. ‘சந்திரமதி தனது கடைசி இரண்டு பிள்ளைகளுடன்;; லண்டன் வந்து சேர்ந்தது நேற்று நடந்ததது போல் இருக்கிறது’

‘லண்டனில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் செந்தாமரைப் பூவாய்; மலர்ந்து மகிழ்வாகக் கழிந்தது வாழ்க்கை. பிள்ளைகள் நால்வரும் வளர்ந்துவிட்டார்கள். நட்சத்திரங்கள் கலகலத்துச் சிரிப்பதுபோல் எந்நேரமும் பிள்ளைகள் குதூகலம்;.

ஒரு பேரானந்த நிலையில் லண்டன் குளிர்காற்று  மென்காற்றாய் மிதந்துவந்ததுபோல் காலம் அவர்களைத்; தடவிச் சென்றது. ‘எல்லாம் கொஞ்;;சக் காலம்தான்’. சந்திரமதி தன் நினைவில் இருந்து மீண்டும் போணுக்குத் திரும்புகின்றாள்.

‘வளர்ந்த பிள்ளைகளுக்கிடையில் வளர்;ச்சிப் போக்கில் மாற்றம் காணும்போது அவர்களும், உணர்வுகளும் மாறுபடத்தொடங்கின மாதங்கி. லண்டன் சூழல் தன்னிச்சையாக வாழ வரையறுத்தது. வாக்குவாதங்கள், வாய்ச்சண்டை என்று தலை தூக்கின. தாம் தமது சொந்தக் காலில் உழைத்து வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது எவருடைய கருத்துக்களையும்; அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை மாதங்கி என்று தொடர்ந்தாள் சந்திரமதி’. ஒரு பெரு மூச்சுடன் அவள் மீண்டும் தொடர்ந்தாள்

‘லண்டன் சூழ்நிலையில் தாம் வேலை பார்க்கும் இடங்களில் தமக்கென்று துணைகளை தாமே தேடிக்கொண்டனர். மூத்த பெண்ணும் தனக்கு விருப்பமானவனுடன் சென்று தனிக்குடித்தனம் ஆரம்பித்துவிட்டாள். மூத்த மகனும் தான் விரும்பிய ஒரு ஆபிரிக்க நாட்டுப் பெண்ணை விரும்பி திருமணபந்தத்தில் சென்றுவிட்டான். அந்நிய நாட்டில் வாழ்வதால்தான் இந்தப் பிள்ளைகள் இத்தகைய பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடுகின்றார்களா என மனம் ஏங்கியது! ஐயோ நான் என்ன செய்வேன்?  பிள்ளைகள் தாம் தமது வாழ்வைத் தெரிவு செய்து முடிவு செய்யும்போது பெற்றோர்களாகிய நாங்கள் அவற்றை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றோம்’ என்றவளின் குரலில் கவலை கசிந்தது. சந்திரமதியின் நினைவில் விசித்திர எண்ணக் கோலங்கள்.
மேகங்கள். அவை கலையும், சேரும். விதம்விதமாக உருக்கொள்ளும். பிறகு கருக்குலையும். சிறு சிறு துணுக்குகளாகி அலையும். இப்படித்தான் மனதின் நினைவுகள் பிரளயப்பட்டுக்கொண்டிருந்தது. மனதைச் சரிப்படுத்த முடியவில்லை. கற்பனை செய்த நினைவுக்கோட்டைகள் யாவும் இடிந்துவிழுந்து கரைகின்றன. பிள்ளைகள் எந்நேரமும் முரண்பட்டே பேசத்தொடங்கிய நிலைமை அவள் கண்முன் விரிந்தது.   

‘கணவன் மனைவி என்று நாமே உள்ளார்ந்தமாக உறவை மேற்கொள்வது கிடையாது. மனம்விட்டு பேசுவதோ, பரஸ்பர அன்போ கிடையாது. பிள்ளைகளின் விடயத்தில்கூட தந்தையின் நிலையில் நின்று அவர் செயற்படுவது கிடையாது. தானும் தன்வேலையும் தன்னைப் பிறர் நல்லவனாக மதிக்கவேண்டும் என்று சுயநலப் போக்கிலதான் அவர் நடமாடித்திரிகிறார். தன்னுடன்; பழகுபவர்களுக்கு என்னை அறிமுகம் செய்தால் தான் தரம் குறைந்தவனாகக் கணிக்கப்படுவேனோ என அவர் அஞ்சுவதுபோல்தான் எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. நண்பர்களின் கொண்டாட்டங்களுக்குக் கூட, என்னைக் கூட்டிச் செல்லாமல் உறவுச் சகோதரி குடும்பத்துடன்தான் சென்று வருவார் எனது கணவர். போலியான ஒரு வாழ்வில் நடித்துக்  கொண்டிருப்பது போலத்தான் வாழ்நாள் கழிகின்றது. சமூகசேவைகள், ரத்தஉறவுகள் என்று உடற் சக்தியை மற்றவர்களுக்காக மாய்க்கும்போது எப்படி குடும்பவாழ்வு நல்லாக இருக்கும்?; குடும்பம், வாழ்வு என்று இணைந்து வாழ்வது அவருக்குப் பொருத்தமற்றது போல் எண்ணத் தோன்றுகின்றது.. வீட்டுத் தலைவனே புத்தி மங்கிச் செயற்படும்போது, எப்படி எமது பெற்ற பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியும்? ஓன்றுமே புரியவில்லை மாதங்கி எனக்கு’ என்று தொடந்தவளின் குரல் துக்கத்தில் கமறியது.

‘அப்போ உங்களுடைய கணவர் அவர்களைக் கண்காணிப்பதில்லையா சந்திரமதி?’

‘மாதங்கி எப்படிச் சொல்வேன்? என்னவோ உறவுச் சகோதரியாம். பாசம்பொழியும் உறவுச்சகோதரி வீட்டில் மீண்டும் குடிகொண்டுவிட்டார் என்கணவர்’             

‘இப்போ எனது இளையமகளும் வளர்ந்துவிட்டாள். அப்பா முதற்கொண்டு மூத்தவர்கள்; மாறுபட்டுத்; திகழும்போது அவளை எப்படி நான் எமது கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைவாள்; என எதிர்பார்ப்பது? இளைய மகனும் அமைதியானவன் போல் காட்சியளித்துக்கொண்டு திரிகிறான். சிறந்த கல்விக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் லண்டனுக்கு படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். எங்களைச் சுற்றிவர பல்கலைக் கழகங்களும், பள்ளிக்கூடங்களும் தான் தெரியுது. ஆனால் எனது வீட்டில் மட்டும் பிள்ளைகள் சுற்றித்திரிகிறார்கள்’

‘ஏன் பேசுவான்? இப்போ இளைய மகளும் தனது நண்பிகள் நண்பர்கள் எனக் கூறிக்கொண்டு அங்கே பிறந்தநாள் கொண்டாட்டம், அது இது எனக் கூறிக்கொண்டு இரவு பகல் எனத் திரிவதும், நண்பர்கள் நண்பிகள் வீட்டில் தங்குவதுமாக ஆரம்பித்துக்கொண்டாள். ஏதாவுது கேட்டால் மரியாதைக் குறைவாகவும் பேச ஆரம்பிக்கின்றாள்’

‘ஐயோ நான் பெற்ற என் செல்வமே! நீயாவது படித்துப் பட்டம் வேண்டாவிட்டாலும் உன் அறிவுக்கேற்ப நல்ல தொழிலைத் தேர்ந்தெடுத்து நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்’ எனக் கெஞ்சிக் கேட்டுக்  கொள்வேன்.

‘ஆனால் அவள் என்னை அவளின் அம்மா என்றே மதிக்கத் தவறினாள். அறிவு குறைந்தவள், ஆங்கிலமும் பேசத்தெரியாது எனக் கருதி அவமதித்தாள். இருந்தும் அவள் ஒரு இலங்கையைச் சேர்ந்த ஒரு வாலிபனை தனது எதிர்காலக் கணவராக அடைய இருப்பதாக அறிந்தபோது மனதிற்கு ஆறுதல் கொடுத்தது. பிள்ளைகள் சுகமாக நல்லவர்களாக வாழ்ந்தால்சரி. ஒரு அம்மாவாக இதனைத்தான் பிள்ளைகளிடம் என்னால் இரைஞ்சமுடியும்...’

‘இளைய மகன் இப்போது அமைதியாக நல்லவன் போல் இருக்கிறான். அவனாவது என்னுடன் அன்பைப் பேணுவான் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ஆனால்’  அந்தத் தாய் விம்மிக்கொண்டிருந்தாள்.

‘என்ன சந்திரமதி!  இப்போ என்ன நடந்தது என்று இவ்வளவு தூரம் கவலைப்படுகிறீர்கள?;’

சந்திரமதி தொடர்ந்தாள்... ‘அம்மா, எனது நண்பி  விரைவில் என்னுடன் வந்து வீட்டில் தங்கவுள்ளாள். நீங்கள் வேறெங்காவது போய் இருக்கப்பாருங்கள் அம்மா’ என்றான் இளையவன்’ என்று கூறியவள் சற்று நேரம் அமைதியானாள். குளிர்காற்று ஒரு தரம் விசும்பித் தணிந்தது. துக்கத்தின் கனத்த மர்ம வளைவுகள் அடர்ந்து ஜில்லிட்டுக் கொண்டிருந்தது. ‘தொலைபேசிப்பேச்சு வலித்துக்கொண்டுவருகிறது மாதங்கி...’

‘சந்திரமதி கவலைப்படவேண்டாம்;. நல்லாக ஆங்கிலம் பேசக்கூடிய ‘றஞ்சனா’ என்ற பெண்ணை ஒழுங்கு செய்து தருகிறேன். அவளை உடனேயே உங்களோடு தொடர்பு கொள்ளும்படி கூறுகின்றேன்’ என்றாள் மாதங்கி.

நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்குக் கலாச்சாம், காலத்திற்குக் காலம் மனிதனின் நடத்தைகள் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. தாயின் துயர் துடைத்து திருப்தி அடைந்த காலமும் மாறிவிட்டதா? தொலைபேசிமயங்கி விழுவது போல் தெரிகிறது...  குளிர்கோர்த்;த வீட்டின்;;;; சுவர்கள்... சுற்றிலும் அசைவற்ற கட்டிடங்கள்;...அதிர்வுகள்;... பனிபடர்ந்த ஜன்னலில் கரைந்துமறைவதைப் பார்த்தபடியே நிற்கின்றாள் சந்திரமதி...    

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
26.12.2014.

 

Last Updated on Saturday, 05 December 2015 06:24