கனடிய அரசியல் செய்திகள்! தமிழில் நுண்ணறிவு எந்திரன் -
[இக்கனேடிய செய்திகள் செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.]
பிரதமர் காரியாலய ஊடகச் செய்தி! வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்த பிரதமர் கார்னி துருக்கி பயணம்!
அக்டோபர் 6, 2026, ஒட்டாவா, ஒன்டாரியோ
வேகமாக மாறிவரும் இந்த உலகில், கனடா அரசு எதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே கவனம் செலுத்துகிறது: கனடியர்களுக்கு அதிக நிச்சயம், பாதுகாப்பு மற்றும் செழிப்பை உருவாக்குவதற்காக உள்நாட்டில் நமது வலிமையை அதிகரிப்பதிலும், வெளிநாடுகளில் நமது கூட்டாண்மைகளை பன்முகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. ஒரு நேட்டோ (NATO) கூட்டு நாடு மற்றும் ஜி20 (G20) உறுப்பு நாடு என்ற வகையில், இந்த இலக்கில் துருக்கியே ஒரு முக்கியமான பங்காளியாகும்.
இந்தக் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பிரதமர் மார்க் கார்னி 2026 அக்டோபர் 21 முதல் 23 வரை துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகரங்களுக்குப் பயணம் செய்யவுள்ளதாக இன்று அறிவித்தார். கனடிய பிரதமர் ஒருவர் துருக்கிக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.
அங்காராவில், பிரதமர் கார்னி அதிபர் எர்டோகனைச் சந்தித்து, ஆற்றல் மற்றும் சுரங்கம், காலநிலை, பாதுகாப்பு மற்றும் அமைதி, மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கனடா-துருக்கிக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதிப்பார்.



எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மலையகத்தில் இருந்து ஒலித்த மூத்த எழுத்தாளரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இவரது மறைவு மலையகத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பாகும். இலக்கிய உலகில் இவரை ‘மூனாசீனா’ என்று சுருக்கமாக அழைத்தவர்கள் பலர்.

எழுத்தாளர்: திருமதி கீத்தாராணி பரமானந்தன் ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளர் கீத்தாராணி பரமானந்தன் அவர்கள் ஏற்கனவே கவிதைத் துறையில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தக் கவிதை அனுபவத்திலிருந்து சிறுகதை உலகிற்குள் அவர் மேற்கொள்ளும் முதல் முயற்சியே ‘சொல்லாத கதைகள்’.

ஈழத்து முற்போக்கு இலக்கிய உலகில் பஞ்சமர் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அழகியல் மற்றும் கருத்தியல் தளங்களில் பதிவுசெய்த முதன்மைப் படைப்பாளி தோழர் கே. டானியல் (1926–1986) ஆவார். அவர்தம் ‘வள்ளி’ சிறுகதையானது, சாதிய அமைப்பு மற்றும் முதலாளித்துவ வர்க்க உணர்வு ஆகியவற்றின் சிக்கலான குறுக்குவெட்டு உறவை (Intersectionality) மிக நுட்பமாகத் தோலுரித்துக் காட்டும் அமைப்பியல் பிரதியாகும். இக்கட்டுரை, நவீனத்துவத்திற்கு பிந்தைய விமர்சனக் கோட்பாடுகள், தனடோபாலிடிக்ஸ் (Thanatopolitics - மரண அரசியல்), இடவெளி அதிகாரக் கோட்பாடுகள் (Spatial Hegemony), மார்க்சிய அன்னியமாதல் (Alienation) மற்றும் உடலியல்-அழகியல் (Somatic Aesthetics) நுட்பங்களின் வழியே ‘வள்ளி’ சிறுகதையைச் சர்வதேச அளவிலான பேராய்விற்கு உட்படுத்துகிறது.




“எனது தந்தையிடம் ஒரு துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஒரு நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.


எங்கள் பயணத்தில், சேற்றுக் குழிகளிலிருந்து மீத்தேன் எரிவாயு வெளியேறும் இடத்தைப் பார்ப்பதற்காக, பாகுவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபுஸ்தானுக்கு (Gobustan) சென்றோம். இப்படியான சேற்று எரிமலைகள் உலகில் அரிதானவை. உலகிலுள்ள சேற்று எரிமலைகளில் பெரும் பகுதி அஜர்பைஜானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எங்கள் பயண அட்டவணையில் இப்படியொரு இடத்தைத் தவறவிட முடியுமா?

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நியமனமாகியிருக்கும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த பதிவை எழுதுகின்றேன். பேராசிரியர் சி.மௌனகுரு, கல்வி, கலை,இலக்கிய ஊடகத்துறையிலும் பங்காற்றி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்திருப்பவர். கடந்த காலங்களில் ஓய்வுநிலைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கும் சி. மௌனகுரு அவர்கள் தான்சார்ந்த கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலானவற்றில் சாதனைகள் புரிந்தவர்.



எதிர்வரும் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு, லெ.முருகபூபதியின் "ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்" என்னும், பவளவிழா மலரும், நோயல் நடேசனின், "சாந்தா குரூஸ் தேவதை", "நாலுகால் சுவடுகள்", தாத்தாவின் வீடு" ஆகிய மூன்று நூல்களும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது
கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு: பலதரப்புவாதம், சர்வதேச சட்டம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பு! - தமிழில் - கூகுள் நனோ பனான செயற்கை நுண்ணறிவு - [ செப்டம்பர் 21, 2026 நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்]







