குணா ஷக்தியின் 'உண்மையான வணக்கம்' (The Real Salute) என்னும் குறும்படத்தை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் . கிரண்பேடி I.P.Sஇன் நடிப்பில் குணா ஷக்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம் இதுவரையில் 17 விருதுகளை வாங்கியிருக்கிறது குணா ஷக்தியின் 'உண்மையான வணக்கம்' (The Real Salute) என்னும் குறும்படத்தை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் . கிரண்பேடி I.P.Sஇன் நடிப்பில் குணா ஷக்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம் இதுவரையில் 17 விருதுகளை வாங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. கூறவந்த விடயத்தை மிகவும் வீரியத்துடன் வெளிப்படுத்தும் குறும்படம். அத்துடன் படம் முழுவதும் Grayscaleஎஇல் இருக்க ,  தேசத்தின் கொடி மட்டும் வர்ணத்தில் துலங்கும் உத்தியானது குறும்படத்தின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது. குப்பையோடு குப்பையாகக் கிடக்கும் கொடியினைக் காணும் ஒவ்வொருவருக்கும் நெற்றிப்பொட்டில் அறைந்ததுமாதிரியிருந்திருக்கும்.  'தாயின் மணிக்கொடி பாரீர்! நெஞ்சு பொறுக்குதில்லையே! என்னும் பாரதியின் வரிகள்தான் உடனடியாக நினைவுக்கு வந்தன. கொடி இந்தியாவினுடையதாகவிருந்தாலும் இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தத்தமது தேசத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாது.  தேசப்பற்றினை இவ்வளவு அழகாக வலியுறுத்தும் இக்குறும்படத்திற்குப் பல்விருதுகள் கிடைக்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியம். தற்போது தமிழ்த் திரைப்படமொன்றினையும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் குணா ஷக்தி. குறும்படத்தின் இவரது வெற்றி பெரும்படத்திலும் தொடர வாழ்த்துகள். மேற்படி 'உண்மையான வணக்கம்' குறும்படத்தைப் பார்க்க விரும்பினால் இங்கே அழுத்தவும்.  இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . 'செல்' பேசி இலக்கம்: 09884571566   [ தகவல்: குணா ஷக்தி;  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R