1. 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு!

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?'இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என அவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. பத்திரிகையாசிரியராக, இதழாசிரியராகவும் அவரது பங்களிப்பைப் புறக்கணித்து விட முடியாது. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது படைப்புகளெல்லாம் பலவேறு பத்திரிகைம் சஞ்சிகைகளில் சிதறிப்போய்க் கிடப்பது துரதிருஷ்ட்டமானது. இவற்றை முழுமையாகச் சேகரித்து வெளியிடுவது மிகவும் அவசியமானதொன்று. 'பதிவுகள்' இணைய இதழ் ஏற்கனவே அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பலவற்றைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது ('மனக்கண்' நாவலுட்பட). தற்போது அவரது பதினான்கு கட்டுரைகள் அடங்கிய மின்னூற் தொகுதியினைக் கிண்டில் பதிப்பாக 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்நூல் அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அ.ந.க்.வின் ஏனைய படைப்புகளும் கிண்டில் பதிப்புகளாக வெளிவரவுள்ளன என்பதையும் அறியத்தருகின்றோம்.

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்' கட்டுரைத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. நான் ஏன் எழுதுகின்றேன்?
2. தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை!
3. நாடகத் தமிழ்
4. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு!
5. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!
6. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்!
7. நாடக விமர்சனம்: "மதமாற்றம்"
8.  சுதந்திரனில் (8.7.51) அ.ந..கந்தசாமி : கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? 'பெண்ணடிமையின் சிகரம்' என்பதே பொருந்தும். மன்னைன் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை! புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி!
9. சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - சஞ்சீவி மாமலையியே கண்டெடுத்த 'ரேடியோ டெலிவிஷன்' மூலிகைகள்!
10.  சுதந்திரனில் அ.ந.க: புதுமைத் தமிழ்ப் பூங்கா - காதலும் அறிவும் களிநடம் புரியும் 'சஞ்சீவி பார்வதத்தின் சாரல்' புதுவைப் பூங்குயிலின் மனோகரத் தமிழிசையின் மகத்துவம். கொஞ்சும் தமிழிலே கொட்டும் பாரதிதாசனின் பைந்தமிழ்க் காப்பியம்.
11. வெற்றியின் இரகசியங்கள்: அத்தியாயம் மூன்று - எமில்கூ காட்டிய வழி!
12. பாரதி இதழ்: புரட்சிப்படம்
13.  நூல் மதிப்புரை: "தீ"
14. சுயவசியம் செய்வதெப்படி? - 'வெற்றியின் இரகசியங்கள்' நூலிலிருந்து..

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...

அ.ந.க.வின் 'எதிர்காலச்சித்தன் பாடல்'

அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R