- ரவி அமிர்தனின் 'விழிப்பூ' -

கனடாவில் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக்கிளை வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகை) , தமிழ் எழில் ஆகியவற்றில் கவிதைகள் வெளியாகின.

இது பற்றி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்  (ஹம்ஸத்வனி) பின்வருமாறு கூறுவார்: "1984  இல் மொன்றியாலின் தமிழ்எழில் என்னும் மாதாந்த கைஎழுத்துப்பிரதி  வெளிவந்தது. முதல் தமிழர் ஒளி  வானொலிச்சேவையும் தொடங்கப்பட்டது. இரண்டிலும்  எனது பங்களிப்பு இருந்தது. நான் ஆசிரியர் குழு சார்பில் எழுதினேன்.  கவிதைகள் நாடகங்கள் வந்தன."

'புரட்சிப்பாதை' சஞ்சிகையிலும் வ.ந.கிரிதரன், ரவி அமிர்தன் , செங்கோடன், ஆ.சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

நூலாக வெளியான  ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள் என்று பார்த்தால் பின்வரும் கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன:

1. ரவி அமிர்தன் - விழிப்பூ. 11.5.1985  வெளியாகியுள்ளது. (இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அருண்மொழிவர்மனுக்கு நன்றி). இது  கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த நூலாகத் தெரிகின்றது.

2. வ.ந.கிரிதரன் - மண்ணின் குரல். இது மண்ணின் குரல் சிறு நாவல், கட்டுரைகள் & எட்டுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இவையனைத்தும் 84-85 காலகட்டத்தில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியானவை. 14.01.1987 அன்று மங்கை பதிப்பக வெளியீடாக வெளியானது. றிப்ளகஸ் அச்சகம் கணினி எழுத்துகள் கொண்டு அச்சடித்த கவிதைத்தொகுப்பு. இதில் அடங்கியுள்ள கவிதைகள்:

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்'

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

3.  சுதா குமாரசாமி - 'முடிவில் ஓர் ஆரம்பம்'.

Tamil Progress Publications' (Montreal, Canada) பதிப்பகத்தாரால்  வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு இது. றிப்ளக்ஸ் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. பதினைந்து கவிதைகளை உள்ளடக்கிய  தொகுப்பு இது. தொகுப்பிலுள்ள கவிதைகளின் பட்டியல் வருமாறு:

சுதா  குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' -

1. சமர்ப்பணம்
2. என்றும் வரும் வசந்தம்....
3. சின்னவளுக்குச் சித்தியின் தாலாட்டு
4. சாம்பலாகிய கனவு
5. பிரியாவிடை பெறும் அகதி
6. உரிமையா? சலுகையா?
7. எங்கே போகிறோம்?
8. காண்பேனா? உனை.
9. காற்றில் கலந்த, காதில் ஒலித்த
10. அருமை அகராதியே..!
11. புலம்பிப் பாயும் அந்த சென்ற் லோரன்ஸ்
12. வேண்டுகோள் கேளாய்
13. கனவாகிப்போன வாழ்வு.
14. உலகமென்பது எம் உடலடா!
15. அன்னிய மண்ணில் வெறுமை.

இந்தத்தொகுப்பு வெளியான ஆண்டு: ஆகஸ்ட் 1, 1988.

இதுவரையில் நானறிந்த வரையில் இவையே கனடாவில் வெளியான ஆரம்பக் கவிதைத்தொகுப்புகள். இவற்றில் மேலும் தகவல்கள் கிடைக்கும்போது மாற்றங்கள் வரலாம்.

றிப்ளக்ஸ் அச்சக உரிமையாளரின் தந்தையாரான ஈழத்துப் பூராடனாரின் நூல்கள் பலவற்றையும் வெளியாகியுள்ளன. அவை பற்றிய விபரங்களும் (வெளியான ஆண்டு , திகதி  போன்ற) அறியப்பட வேண்டும்.

டொராண்டோவில் 84ஆம் ஆண்டு நான் வருவதற்கு முன்னிருந்தே 'செந்தாமரை' என்னும் பெயரில் பத்திரிகையொன்று வெளியாகிக்கொண்டிருந்தது. அதில் வெளியான ஆக்கங்கள் பற்றியும் அறிய வேண்டும். அவற்றில் கவிதைகள் வெளியாகியுள்ளனவா? யார் யார் எழுதினார்கள் என்பவை போன்ற விபரங்கள் அறியப்பட வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R