ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.முன்னுரை

மாமூலனார் குறுந்தொகையில் (பாலைத்திணை - 11) ஒன்று, நற்றிணையில் (பாலைத்திணை -14, குறிஞ்சித்திணை - 75) இரண்டு, அகநானுாற்றில் (பாலைத்திணை - 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393) இருபத்தேழு என மொத்தம் 30 பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நற்றிணை 75 ஆம் பாடலைத் தவிர்த்த எஞ்சிய 29 பாடல்களிலும் புறச்செய்திகள் இடம்பெற்றுள்ளதுடன் அவை அனைத்தும் பாலைத்திணையில் இடம்பெற்றுள்ளன. பரணருக்கு அடுத்தபடியாக அகப்பாடலில் அதிக அளவிலான புறச்செய்திகளைக் கூறியிருக்கும் இவர் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை.

இக்குறிப்புகள், 29 அகப்பாடலில் புறச்செய்திகளைப் பாடியுள்ள இவர் ஏன் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை? இவரது அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் தனித்துவம் என்ன? இவரது வரலாற்றுப் பதிவுகளினால் அறியப்படும் பண்டைத் தமிழரின் மறைக்கப்பட்ட அடையாளங்கள் என்று ஏதேனும் உண்டா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புறச்செய்திகளும் அவற்றின் உள்ளடக்கங்களும்

மூவேந்தர்கள், நன்னன், ஆவி, அதிகன், புல்லி, மழவர்கள், கோசர்கள் முதலான மன்னர்களைப் பற்றிக் கூறும் இவர் வட இந்தியாவில் மகத நாட்டை ஆண்ட நந்தர்கள் பற்றியும், அவர்களுடைய தலை நகரமான பாடலிபுத்திரத்தின் செல்வ செழிப்பு பற்றியும் கூறியுள்ளார். அதை,

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ’ (அகம்.265)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றன.

மேலும், நந்தர்களை வெற்றி கொண்ட மௌரியர்கள் பெரியதோர் பேரரசை நிறுவினர். பெரிய படையெடுப்பாளர்களாக விளங்கிய அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். ஆனால் கோசருக்குப் பணியாத பாண்டி நாட்டு மோகூர் இவர்களுக்கும் பணியவில்லை (அகம்.251) என்ற வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.

இவரது பாடல்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புளைப் பற்றி ஆராய்ந்துள்ள நீலகண்ட சாத்திரி, ஆர். எஸ். சர்மா, அப்பாதுரையார், டி.டி. கோசாம்பி , மா.இராசமாணிக்கனார் போன்ற அறிஞர்களின் ஆய்வுரைகளையும் ஒப்பீட்டு ஆராய்ந்துள்ள கணியன்பாலன் பல புதிய ஆய்வு முடிவுகளைத் தருகிறார். அவற்றில்,   நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள்.  மாமூலனார், மற்றும் பரணர் கூறியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள மிகவும் துணைநிற்கின்றன.  கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் (30) மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265 ஆம் பாடலாகும் என்பன இங்கு நினைவு கூறத்தக்கன. இவை, இவரது பாடல்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள் தமிழ் நிலத்திற்கு உள்ளும் வெளியிலும் நடைபெற்றுள்ள நிகழ்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதுடன், அவை நிகழ்கால நிகழ்வுகளாக உள்ளன என்ற செய்தியை நமக்குத் தருகின்றன.

இந்தக் குறிப்புகள் ஒருபுறமிருக்க பாடல்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்கும் அவ்வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள பின்புலத்திற்குமான உறவும் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு நாம் பார்க்கும்போது, மாமூலனாரின் பாடலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகளை இருவகையாகப் பிரிக்கலாம். அவை, ஒன்று உவமைகளின் பின்புலத்தில் அமைந்த வரலாற்றுக் குறிப்புகள். இண்டு வெளிப்படையாக அமைந்த வரலாற்றுக் குறிப்புகள்.

உவமைகளின் பின்புலத்தில் அமைந்த வரலாற்றுக் குறிப்புகள்

அக மாந்தர்களான தலைவன், தலைவியின் உடல் மற்றும் உள்ளத்து உணர்வின் இயல்புகளை விளக்குமுகமாகப் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இந்த வரலாற்றுக் குறிப்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

தலைவியின் உடல் வளம் கெடல்

தலைவியின் அழகும் (அழகிய பெண்மை நலம்), தலைவியின் மார்பகமும் தலைவனின் பிரிவால் கெடுவதாகக் கூறப்படும் இடங்களில் முறையே “வானவரம்பன் என்பவனது வெளியம் என்னும் ஊர்” (அகம்.359:12-16), ‘எருமை என்பானது குடநாடு”
(அகம்.115:1-6), ‘நன்னன் வேண்மானது வயலைக் கொடிபடர்ந்த வேலிகளையுடைய வியலூர்” (அகம்.97:9-15) ஆகிய புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன.

தலைவனின் வாய்ச்சொல்

நின்னைப் பிரியேன் என்று தலைவன் அன்று சொல்லிய வாய்ச்சொல் என்பதற்கு பொதினி மலைக்குரிய ஆவி மழவரைப் புறங்காட்டி ஓடச் செய்தவன் (அகம்.1:1-7) என்ற புறச்செய்தி கூறுப்பட்டுள்ளது.

பொருளீட்டச் செல்லும் பாலை வழி

தலைவன் பொருளீட்டச் செல்லும் பாலை வழிக்கு பின்வரும் புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை,

திதியன் வேளிரொடு போர் செய்தற்கு உருவிய வாள் (அகம்.331:9-14).

அதியன் அள்ளன் என்பானுக்குத் தன் நாட்டினைப் பரிசிலாகக் கொடுத்துவிட்டு இறந்துபட்டான் (அகம்.325.7-11).

"வடதிசைக்கண் உள்ள வேற்படையைத் தாங்கிய பாணன் கொல்லும் தொழிலையுடைய யானையை உடையவனாக இருந்தான் (அகம்.325:14-18)

எவ்வி இறந்து வீழ்ந்த போர்க்களத்தே பாணர்கள் தாம் முன்பெல்லாம் முறைமையோடு கையால் தொழுது போற்றிப் புகழ்ந்த வளம் பொருந்திய ஒலியினையுடைய வளைந்த யாழின் கோட்டினை எடுத்து முறித்தனர். மிக்க வலிமையையும், தாவிச் செல்லும் ஆற்றலுடைய குதிரைகளையும் உடைய அஞ்சி என்பான், தான் வென்று கைப்பற்றிய பகைவரின் ஆனிரைகளை மறைத்து வைப்பதற்கு ஏற்ற தன்மையைக் கொண்டிருந்தது (அகம்.115:7-18)

மழவர்களின் பல்வேறு செயல்பாடுகள் (அகம்.101:4-11)

உதியஞ்சேரலாதன் துறக்கத்தினை அடைந்த கெடாத நல்ல புகழினையுடைய தன் முன்னோர்க்குச் செய்தற்கரிய தென்புலக் கடனைச் (பிண்டம்) செய்தான். (அகம்.233:6-11) ஆகியனவாகும்.

தலைவன் ஈட்டும் பொருளைக் காட்டிலும் தலைவி மீது அன்புடையவன்

தலைவன் ஈட்டும் பொருளைக் காட்டிலும் தலைவியின் மீது அன்புடையவன் என்று
கூறுமுகமாக பின்வரும் புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை,

தம் முன்னோரைப் போல் இமயத்தில் வளைந்த விற்பொறியைப் பொறித்த சேரலாதன் மரந்தை என்னும் ஊரில் குவித்த நிதியம் (அகம்.127:311).

நந்தன் என்பவன் தொகுத்துக் குவித்து வைத்துள்ள செல்வம் (அகம்.251:1-5).

சோழ மன்னரது வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாடு (அகம்.201.12-19).

வளமிக்க சிறப்பினையுடைய குடநாடு (அகம்.91:9-18).

“நந்தன் தொகுத்துக் குவித்து வைத்துள்ள செல்வம் (அகம்.251:5-6)

புல்லியின் திருவேங்கட மலை (அகம்.61: 5-18) ஆகியனவாகும்.

தலைவியின் உடன்போக்கு


தலைவி உடன் போக்கு சென்றமைக்கு உவமையாகப் பின்வரும் புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை,

கரிகால் வளவனோடு பெருஞ்சேரலாதன் வெண்ணிப் போர்களப் போரில் புறப்புண்பட்டமைக்கு நாணியவனாய்த் தான் போரிட்டுத் தோற்றழிந்த அந்தக் களத்தின் ஒரு புறத்தே வாளொடு வடக்கிருந்து தன் இன்னுயிர் நீத்தமை (அகம்.55:9-15).

நன்னனது பாழி என்னும் நகர் மிக்க காவல் உடையது. கோசர்களின் துளு நாடு தோகையினையுடைய மயில்கள் மிக்க சோலைகளையுடையது (அகம்.15:1-12).

உதியஞ்சேரலாதனைப் பாடிச்செல்லும் பரிசிலர் (அகம்.65:5-7) ஆகியனவாகும்.

ஊரார் கூறும் அலர்

தலைவன் தலைவிக்கு இடையிலான காதல் பற்றி ஊரா் கூறும் அலருக்கு உவமையகப் பின்வரும் புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை,

சேரலாதன் பெரிய கடலின்கண் வந்தெதிர்த்த பகைவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்து அவருடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டிச் செய்த ஓசையமைந்த முரசின்கண் முழங்கினான் (அகம்.347:1-9).

பகை உணர்வுமிக்க வடுகர்கள், முன்னே செல்ல, தென் திசையின்கண் உள்ள நாடுகளைக் கைப்பற்றக் கருதிய மோரியர் ஆரங்களைக் கொண்ட ஆழியானது தடையின்றிச் செல்லும் பொருட்டுப் பனிதங்கும் வானளாவிய பெரிய மலையினைப் பிளந்தனர் (அகம்.281:4-13).

கொற்கைப் பட்டினம் வெற்றி மிக்க போரினையும் உடைய பாண்டியனுக்கு உரியது (அகம்.201: 1-12)
கன்றுகளையும் பிடிகளையும் உடைய யானைக் கூட்டம் பள்ளத்தில் அகப்பட்டுக் கொள்ள, அவற்றைப் படிப்பதற்கு எழினி என்பவன் வராமல் போயினன். அதனை அறிந்த சோழமன்னன் மிக்க சினம் கொண்டான். அவனைப் பிடித்துவர மத்தி என்பானை ஏவினான் அவனும் தொலை தூர நாட்டிற் சென்று போரில் முதற்படையிலேயே அவ்வெழினியை அகப்படுத்தி அவன் பல்லைப் பறித்து வந்து வெண்மணி என்னும் ஊரினது வலிமை பொருந்திய வாயிற் கதவிலே பதித்தான் (அகம்.211:9-17)
என்பனவாகும்.

இவ்வாறு தலைவியின் உடல் வளம் கெடல், தலைவனின் வாய்ச்சொல், பொருளீட்டச் செல்லும் பாலை வழி, தலைவன் ஈட்டும் பொருளைக் காட்டிலும் தலைவி மீது அன்புடையவன், தலைவியின் உடன்போக்கு, ஊரார் கூறும் அலர் ஆகியவற்றிற்கு உவமையாக மேற்கண்ட புறச்செய்திகள் கூறப்பட்டுள்ளன. இவை மன்னர்களின் போர் கொடை உள்ளிட்ட சிறப்புகளாக உள்ளன. மேலும், உவமைகளாக இடம்பெற்றுள்ள மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களுடன் தொடர்புடையவையாக உள்ளன. ஆனால் பாடல்களில் வெளிப்படையாக இடம்பெற்றுள்ள சில மக்களுடன் தொடர்புடவையாக உள்ளன. அவை குறித்து இனிக்காண்போம்.

வெளிப்படையாக அமைந்த வரலாற்றுக் குறிப்புகள்

தலைவன் பொருளீட்டச் சென்றுள்ள இடம் வேங்கடமலைக்கு அப்பால் அல்லது மொழிபெயர் தேயத்திற்கு அப்பால் உள்ளது என்னும் குறிப்பு மாமூலனாரின் பாடல்களில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

வேங்கடமலைக்கு அப்பால் / மொழிபெயர் தேயத்திற்கு அப்பால்

“தோழி நம் தலைவர் கரிய நிறப் பெண் யானையினைப் பரிசிலாகப் பெறும் பாணர் போல் நமது வீட்டின் வாயிலில் வந்து நின்று, அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த மனையின் ஒரு பக்கத்தேயுள்ள ஓவியத்தில் எழுதிவைத்தாற் போன்ற திண்ணிய
நிலையையுடைய கதவினைப் பேய்கள் திரியும் நள்ளிரவில் காவலர் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து திறந்து வந்து நம்மைப் புணர்ந்தார். நம்மைக் காட்டிலும் அன்பிற் சிறந்தார் இவ்வுலகத்து யாரும் இல்லை என்று கூறினார். பொலிவு பெற்ற நம் கூந்தலைத் தடவி மகிழ்ந்தார். இரக்கம் தோன்ற அன்புமொழி பேசி நம்மைவிட்டு அகன்று சென்றுவிட்டார். மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற ஆயர்கள், இளைய எருதுகளின் கழுத்தில் கட்டிய மூங்கிற்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினைத் தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தனர். அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்” (அகம்.311.1-14) நீ வருத்தம் கொள்ளாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகின்றாள். இவ்வாறு வேங்கடமலைக்கு
அப்பால் / மொழிபெயர் தேயம் நோக்கித் தலைவன் சென்றான் என்று,

செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர் (அகம்.265:21, 22)

மற்றும்,

‘........................ நெடுமொழி புல்லி
தேன் தூங்கு உயர்வரை நல நாட்டு உம்ம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும்........’ (அகம்.393:18-20)

மற்றும்,

‘தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்தே’ (அகம்.31:13-15)

மற்றும்,

‘கல்லா மழவர் வில்இடம் தழீஇ
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்’ (அகம்.127:15-17)

மற்றும்,

‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்’ (அகம்.211:7,8)

மற்றும்,

தொடைரமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழி பெயர்தே எம் இறந்தனர் ஆயினும்’ (அகம்.295:15 - 17)

மற்றும்,

‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நலநாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்’ (குறுந்.11:5 -7)

மற்றும்,

‘பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்

பெரு வரை அத்தம் இயங்கியோரே!’ (அகம்.359:11-15)

மற்றும்,

‘..................... நன்னன் நல் நாட்டு,
ஏழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே’ (அகம்.349:8-15)

என ஒன்பது பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவையன்றி, பொருளீட்ட செல்லும் இடம் கண்ணன் எழினியின் முதுகுன்றத்திற்கு அப்பால் உள்ளது (அகம்.197: 5-9) என்று ஒரு பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

மாமூலனாரைப் போலவே கல்லாடனார்,

‘கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நலநாட்டு வேங்கடம் கழியினும்’ (அகம்.83:9,10)

மற்றும்,

மாஅல் யஅனை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும்........’ (அகம்.209:7-10)

என இரு பாடல்களிலும் தாயங்கண்ணனார்,

வினை நவில் யஅனை விறற்போர் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றுஅரு நெடுங்கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்’ (அகம்.213:1-3)

என ஒரு பாடலிலும் தலைவன் பொருளீட்டச் சென்ற இடம் வேங்கடமலைக்கு அப்பால் / மொழிபெயர் தேயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மூவேந்தர்கள் தமிழகத்தை ஆண்டதாகக் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் மாமூலனார்,
தாயங்கண்ணனார் மற்றும் கல்லாடனாரின் இந்தக் குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏனெனில் மதுரை, வஞ்சி, முசிறி, தொண்டி, உரையூர், கொற்கை, பூம்புகார் எனப் பல பெருநகரங்கள் செல்வச்செழிப்புடன் விளங்கிய காலகட்டத்தில் இவை நடந்துள்ளன. அதனால் இந்தப் பதிவுகள் கவனம் கொள்ளவேண்டிவனாக உள்ளன. ஏனெனில் இக்கால கட்டத்தில் மேற்கண்ட நகரங்களை நோக்கி யாரும் சென்றதாகப் பதிவுகள் இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

ஆக, இந்தக் குறிப்புகளை வத்துப் பார்க்கும் போது பின்வரும் முடிவுகளைப் பெறமுடிகின்றன. தன்னுடைய கால வரலாற்றை உள்ளவாறே பதிவு செய்துள்ள மாமூலனார் அவற்றை உவமைகளாகவும், நேரடியாகவும் பதிவுசெய்துள்ளார். உவமைகளாகப் பதிவுசெய்துள்ளவை மிகத்துள்ளியமாக உள்ளதாகவே படுகின்றன. ஆனால் வெளிப்படையாக உள்ள வரலாற்றுக் குறிப்பான ‘தலைவன் பொருளீட்டச் சென்ற இடம் வேங்கடமலைக்கு அப்பால் / மொழிபெயர் தேயம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் தெளிவற்றுக் காணப்படுகின்றன. அதாவது பொருளீட்டச் சென்றவன் யார் என்றோ? அவன் என்ன தொழில் செய்தான் என்றோ? பாடல்களின் பின்புலத்தில் இருந்து அறிய இயலவில்லை. ஏனெனில் பாடல்களில் அதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை.

“தோழி நம் தலைவர் கரிய நிறப் பெண் யானையினைப் பரிசிலாகப் பெறும் பாணர் போல் நமது வீட்டின் வாயிலில் வந்து நின்று, அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த மனையின் ஒரு பக்கத்தேயுள்ள ஓவியத்தில் எழுதிவைத்தாற் போன்ற திண்ணிய
நிலையையுடைய கதவினைப் பேய்கள் திரியும் நள்ளிரவில் காவலர் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து திறந்து வந்து நம்மைப் புணர்ந்தார். நம்மைக் காட்டிலும் அன்பிற் சிறந்தார் இவ்வுலகத்து யாரும் இல்லை என்று கூறினார். பொலிவு பெற்ற நம்
கூந்தலைத் தடவி மகிழ்ந்தார். இரக்கம் தோன்ற அன்புமொழி பேசி நம்மைவிட்டு அகன்று சென்றுவிட்டார். மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற ஆயர்கள், இளைய எருதுகளின் கழுத்தில் கட்டிய மூங்கிற்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினைத் தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தனர். அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாலுள்ள
கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்” (அகம்.311.1-14) நீ வருத்தம் கொள்ளாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகின்றாள். இவ்வாறு வேங்கடமலைக்கு
அப்பால் / மொழிபெயர் தேயம் நோக்கித் தலைவன் சென்றான் என்று,

செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர் (அகம்.265:21, 22)

மற்றும்,

‘........................ நெடுமொழி புல்லி
தேன் தூங்கு உயர்வரை நல நாட்டு உம்ம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும்........’ (அகம்.393:18-20)

மற்றும்,

‘தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்தே’ (அகம்.31:13-15)

மற்றும்,

‘கல்லா மழவர் வில்இடம் தழீஇ
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்’ (அகம்.127:15-17)

மற்றும்,

‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்’ (அகம்.211:7,8)

மற்றும்,

தொடைரமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழி பெயர்தே எம் இறந்தனர் ஆயினும்’ (அகம்.295:15 - 17)

மற்றும்,

‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நலநாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்’ (குறுந்.11:5 -7)

மற்றும்,

‘பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்

பெரு வரை அத்தம் இயங்கியோரே!’ (அகம்.359:11-15)

மற்றும்,

‘..................... நன்னன் நல் நாட்டு,

ஏழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை 10
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே’ (அகம்.349:8-15)

என ஒன்பது பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவையன்றி, பொருளீட்ட செல்லும் இடம் கண்ணன் எழினியின் முதுகுன்றத்திற்கு அப்பால் உள்ளது (அகம்.197: 5-9) என்று ஒரு பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

மாமூலனாரைப் போலவே கல்லாடனார்,

‘கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நலநாட்டு வேங்கடம் கழியினும்’ (அகம்.83:9,10)

மற்றும்,

மாஅல் யஅனை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும்........’ (அகம்.209:7-10)

என இரு பாடல்களிலும் தாயங்கண்ணனார்,

வினை நவில் யஅனை விறற்போர் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றுஅரு நெடுங்கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்’ (அகம்.213:1-3)

என ஒரு பாடலிலும் தலைவன் பொருளீட்டச் சென்ற இடம் வேங்கடமலைக்கு அப்பால் / மொழிபெயர் தேயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மூவேந்தர்கள் தமிழகத்தை ஆண்டதாகக் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் மாமூலனார், தாயங்கண்ணனார் மற்றும் கல்லாடனாரின் இந்தக் குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் மதுரை, வஞ்சி, முசிறி, தொண்டி, உரையூர், கொற்கை, பூம்புகார் எனப் பல பெருநகரங்கள் செல்வச்செழிப்புடன் விளங்கிய காலகட்டத்தில் இவை நடந்துள்ளன. அதனால் இந்தப் பதிவுகள் கவனம் கொள்ளவேண்டிவனாக உள்ளன. ஏனெனில் இக்கால கட்டத்தில் மேற்கண்ட நகரங்களை நோக்கி யாரும் சென்றதாகப் பதிவுகள் இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

துணை நின்றவை

கணியன்பாலன், பழந்தமிழக வரலாறு – 10, மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும், வல்லமை மின்னிதழ், https://www.vallamai.com/?p=86115
கைலாசபதி, க., 2006, (முதல் பதிப்பு), தமிழ் வீரநிலைக் கவிதைகள், குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 26.
செயபால், முனைவர் இரா., (உ.ஆ), 2004 (மூன்றாம் பதிப்பு), அகநானூறு (தொகுதி1,2), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.
நாகராசன், முனைவர் வி., (உ.ஆ) 2004 (மூன்றாம் பதிப்பு), குறுந்தொகை (தொகுதி1,2), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.
பாலசுப்பிலமணியன், முனைவர் கு.வெ., (உ.ஆ), 2004 (மூன்றாம் பதிப்பு), நற்றிணை, (தொகுதி1), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.
பாலசுப்பிலமணியன், முனைவர் கு.வெ., (உ.ஆ.கு), 2004 (மூன்றாம் பதிப்பு), புறநானூறு(தொகுதி-1,2), நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.
வேங்கடராஜுலு ரெட்டியார், 1998 (மறு.பதி), பரணர், உலகத்தமிழாராழ்ச்சி நிறுவனம், சென்னை - 600 113.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

* கட்டுரையாளர் - முனைவர் ஆ. சந்திரன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R