- நடேசன் -அக்கால செக்கோஸ்லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டேலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன் தனது பணத்தை அவர்களுக்குக் காட்டினான். அன்றிரவு தாயும் சகோதரியும் அவனைக் கொலை செய்து பணத்தைத் திருடினார்கள். அடுத்த நாள் கணவனைத்தேடி வந்த மனைவி அவனை அடையாளம் சொன்னபோது தாய் கயிற்றில் தொங்கி உயிர்விட்டார். சகோதரி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் வெளிவந்திருந்த பத்திரிகையைச் சிறையில் பல தடவை மீசோல்ட என்ற அல்பேட் காமுவின் (Albert Camus)) கதாநாயகன் படிப்பதாக The Stranger(அந்நியன்)என்ற நாவலில் வருகிறது. சாதாரணமான பத்திரிகை செய்தியாக ,
இந்தச் சம்பவம் சொல்லப்பட்டபோதும் பல கோணங்களில் மனிதர்களது உறவுகளை நமக்குச் சிந்திக்க வைக்கிறது.

இருத்தலியல் கோட்பாட்டின் குருவாகிய அல்பேட் காமுவின் இரு புத்தகங்களில் படிக்கக் கிடைத்தது. பிளேக் எனப்படும் கொள்ளை இருத்தலியலின் முன்னுதரணமாகதாகவும் அந்நியன் அதற்கு எதிராக எப்படியும் வாழமுடியும் என வாழ்வானது மனஓடையை நமக்குக் காட்டும் நாவலாக அமைந்துள்ளது.

இரண்டும் அல்ஜீரியாவின் கடற்கரை நகரத்தில் பிரான்சியக் காலனித்துவ காலத்தின் பகைப்புலத்தில் நடக்கும் கதைகளாகும்.

அந்நியனில் வரும் ஒரு ஆண்பாத்திரம் மீசோலட் – வயதோ உருவ அமைப்போ குறிப்பிடாத பாத்திரம். அந்த மனிதன் கொலை செய்த பின்பு அவனது மனஓடையாக நாவல் வளருகிறது. மீசோல்ட் என்பது கடலும் சூரியனும் சேர்ந்த ஒன்று. இயற்கையின் சக்திகளை ஒன்று சேர்த்த அந்தப் பெயரிலே இருந்து நமக்குக் கதையின் விதை உள்ளது.

தாய் முதியவர்கள் இல்லத்தில் இறந்தபோது அந்த மரணசடங்கில் செல்வதற்கு மேலதிகாரியிடம் குற்ற உணர்வுடன் விடுப்பு எடுக்கும் ஒருவனாகக் கதை தொடங்குகிறது. அங்கு சென்றதும் தாயின் பிரேத பெட்டியைத் திறந்து பார்க்கத் தேவையில்லை என்றபடி அந்த தாயின் பெட்டி அருகிலிருந்து காபி குடித்துத் தூங்கி எழுவதாகவும் அங்குள்ள வெப்பம் மற்றும் இலையான் தொல்லையளிப்பதாக மீசோலட் நினைத்துக் கொள்வதாக எமக்கு விவரிக்கப்படுகிறது. அதே நாளில் கடலில் குளிக்கும்போது சந்தித்த மாரி மீசோலட்டின் காதலியாகிறாள்.

 

மாரி ‘காதலிக்கிறாயா?‘ என்று மீசோல்ட்டிடம் கேட்டபோது அதற்குப் பதிலில்லை ஆனால் பின்பு ‘என்னைத் திருமணம் செய்கிறாயா? ‘ என்றபோது ‘உனக்கு விருப்பமென்றால்’ என உற்சாகமற்று பதில் கொடுக்கிறான். அல்ஜீரியாவில் உள்ள கிளை நிறுவனத்திலிருந்து பாரிஸ் தலைமை நிறுவனத்துக்குப் பதவி உயர்வு தருவதாக மேலதிகாரி சொன்னபோது ‘அது தனக்குத் தேவையில்லை எங்கு வாழ்ந்தாலும் ஒரு வாழ்க்கை ‘ எனப் பதவி உயர்வை மறுத்து விடுகிறான்.

ஒருவனது வாழ்வில் எந்த விதமான பற்றோ, நீதியோ, அல்லது மனசாட்சியின் வழி நடத்தலின்றி வெறுமையாக, வாழ்க்கை சக்கரத்தில் ஒட்டியபடி செல்லும் ஒருவனது அபத்த வாழ்வைச் இங்கு சித்தரிக்கிறார். தனது நாயைத் துன்புறுத்திய ஒருவனோடு எந்த வெறுப்புமற்றுப் பழகுகிறான். பெண்களை விபசாரத்துக்குக் கொண்டு செல்லும் தரகரிடம் நட்பாகுவதும் அவன் அரபுப்பெண்ணை அடித்தபோது அதற்குத் துணை போகிறான்.

கதையின் கிளைமாக்ஸாக அடிபட்ட பெண்ணின் சகோதரனால் தரகன் தாக்கப்பட்டபோது அவனைக் கொலை செய்கிறான். அந்தக் கொலை எந்த கோப உணர்வுடனும் செய்யப்படவில்லை. துப்பாக்கியைக் கொண்டு கடற்கரைக்கு செல்லும்போது, அந்த அரபியின் கையில் உள்ள கத்தி சூரிய ஒளியில் மினுங்கி கண்ணிற்கு ஒளியை அடிக்கிறது. அத்துடன் கடுமையான வெயிலின் சூட்டால் மீசோல்ட் கஸ்டப்படுகிறான. அப்போது அவனது கையில் உள்ள துப்பாக்கியின் விசை தானாக இயங்கி வெடிக்கிறது என காமு எழுதுகிறார். ஒரு குண்டில் அந்த அரபி இறந்தபின்பு மேலும் மூன்று குண்டுகள் இறந்த சடலத்தில் மீது சுடப்படுகிறது.

கோபமோ வன்மமோ அற்று நடந்த கொலையாக வர்ணிக்கப்படுகிறது.இந்தக் கொலையையிட்டு மீசொல்ட் எதுவிதமான குற்ற உணர்வற்று இருப்பதாகவும் பின்பு பொலிசால் சிறையில் அடைக்கும்போது தனது சுதந்திரம் பறிபோவதாக மீசொட் குறைபடுகிறான். வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது அதையிட்டு கவலையே அல்லது குற்றத்திலிருந்து தப்பிக்க எந்த முயற்சியுமற்று வழக்கை எதிர் கொள்கிறான்.

வழக்கின் தீர்ப்பில் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. எந்த திட்டமிடலோ அல்லது பகையுமற்று கொலை மட்டுமல்ல, இங்கு செய்தது கொலை என்பதைப் புரிந்து கொள்ளாமல் செய்த கொலைக்கு, மரணதண்டனையா என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது.

மிகவும் சிறிய நாவல். இலகுவான மொழியுடன் ஆழமான கேள்விகளுடன் ஒரு தத்துவத்தைப் புரிவதற்காக எழுதப்பட்டுள்ளது.நாவல் கட்டுப்பாடற்ற சிந்தனையின் நிமித்தம் உருவானதல்ல. ஒரு தத்துவத்தைப் புரிய வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட நாவல். தனி ஒருவனது மனவோட்டத்தில் (stream of consciousness) பின்னோக்கி நகர்த்தப்படுகிறது. அபத்தம் என்ற வார்த்தையை உருவாக்கி, அதற்கு அர்த்தம் கொடுப்பதான நாவலிது. மொழி கூட நனவோடையில் பத்திரிகைச் செய்திக்கான வசன அமைப்பாகிறது. கதாநாயகன் உட்பட எல்லாப் பாத்திரங்களும் எல்லாம் தட்டையானவை. மீசோலட் மனித உணர்வுகள் இல்லாத வெறும் மனிதனாகக் காட்டப்பட்டபோதும் கோப்பியின் வாசனை மாரியின் தலைமயிரின் சம்போ வாசனை மற்றும் வெப்பம் இலையான் என்ற புற உணர்வுகளால் பாதிக்கப்படுவதாக வர்ணிக்கப்படுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R