Karl MarxSigmund Freud'அலை' சஞ்சிகையின் ஏழாவது இதழில் (2.1.77) 'பிராய்டின் பாலியல் நோக்கும் மாக்ஸிசமும்' என்னுமொரு ஒரு பக்கக் கட்டுரையை எழுத்தாளர் ஞானி எழுதியுள்ளார். சிறு கட்டுரையானாலும் நல்லதொரு கட்டுரை, ஏனென்றால் நவகால மார்க்சிய அறிஞர்களிலொருவரான ஹேபேட் மார்குஸ் என்பவரின் மார்க்சியச் சிந்தனைகளின் ஒரு பகுதியை அறிமுகம் செய்வதால் நல்லதொரு கட்டுரை. இவ்வறிஞர் செய்தது என்ன? சிக்மண்ட் பிராய்டின் பாலியல் நோக்கு பற்றிய சிந்தனைகளை மார்க்சியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவ்விரு கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் ஒரு முடிவுக்கு வருகின்றார் என்பதைக் கட்டுரை விபரிக்கின்றது. இதைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:

மார்க்சிய, பிராய்டிச சிந்தனைகளின் அடிப்படையில் இவர் இரண்டுக்குமிடையிலொரு தொடர்பினை ஏற்படுத்துகின்றார். இவரது கருத்துப்படி மனிதர் இரண்டு விதத்தாக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள். இன்பியற் போக்கு (Pleasure Principle) , யதார்த்தப்போக்கு (Reality Principle) ஆகியவையே இவை. ஆதியில் இன்பியற் போக்கினால் ஆட்பட்டிருந்த மனிதரை பின்னர் ஏற்பட்ட பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் அந்நிலையிலிருந்து நீக்கி விட்டன. மனிதரை இன்பியற்போக்கிலிருந்து நீக்கி, யதார்த்தப்போக்குக்குள் பொருளியற் சுரண்டல் சமுதாய அமைப்புகள் தள்ளி விட்டன. மீண்டும் மனிதரை முன்பிருந்த இன்பியற் நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும். மனிதரை வர்க்கபேதமற்ற சமுதாய நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மார்க்சியம் உதவுகின்றது. இவைதாம் மார்க்சிய அறிஞர் ஹேபேட் மார்குஸின் சிந்தனைப்போக்கு. இதுதான் ஞானியின் கட்டுரையின் சாரமும் கூட.

இதற்கோர் எதிர்வினையொன்று 'அலை' சஞ்சிகையின் எட்டாவ(4.3.77) து இதழில் வெளியாகியுள்ளது. 'பிராய்டிசமும் மாக்ஸிசமும்' என்னும் தலைப்பில் வெளியான ஒரு பக்கக் கட்டுரையை எழுதியவர் யாரென்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அவ்வெதிர்வினையில் "ஞானி தமது கட்டுரையில் பிராய்டும் ,மாக்சும் ஆதியில் புராதன மனிதன் இன்ப நிலையில் இருந்தான் என்ற கருத்தில் உடன்பாடு உடையவராய் இருந்தனர் என்ற பொருள்பட எழுதியுள்ளார். " என்று கூறப்பட்டுள்ளது. அப்படி எங்குமே ஞானியின் கட்டுரையில் கூறப்பட்டிருக்கவில்லை. அது ஹேபேட் மார்குஸ் என்னும் மார்க்சிய அறிஞரின் சிந்தனை. அவர் பிராய்டிசத்தையும் , மார்க்சியத்தையும் இணைத்துக்காணும் சிந்தனைப்போக்கில் அவ்விதம் காணுகின்றார் என்பதைத்தான் ஞானி அவர்கள் விபரிக்கின்றார். ஹெபேட் மார்குஸ் என்ன கருதுகிறாரென்றால் (ஞானியின் கட்டுரைப்படி) ஆதியில் மனிதர் இன்ப நிலையிலிருந்தார். பின்னர் பொருளியற் சுரண்டல் காரணமாக அந்நிலையிலிருந்து பொருளியற் பிரச்சினைக்குள் சென்று விட்டனர். மீண்டும் பழைய நிலையினை அடைவதற்கு மார்க்சிய தத்துவம் கூறும் வர்க்கமற்ற சமுதாய அமைப்பு தேவை. இவற்றைத்தாம் ஹேபேட் மார்குஸ் கூறுகின்றார்.

எதிர்வினைக் கட்டுரையில் முடிவில் "ஞானி இன்றைய மார்க்சிய அறிஞர்களில் ஒருவர் என வர்ணிக்கும் மார்குஸ் மார்க்சியத்தின் அடிப்படைகளையே நிராகரித்துள்ளார் என்பதையும் , அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. விரும்புகிறேன் என்று ஒருமையிலிருப்பதால் கட்டுரையாளர் ஒருவர் என்று புரிந்து கொள்ளலாம். அவர் ஆசிரியர் குழுவினரில் ஒருவரா அல்லது அலைக்கு அனுப்பிய எழுத்தாளர்களில் ஒருவரா என்பது தெரியவில்லை.

ஆனால் இவ்விதம் எதிர்வினையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல் ஹேபேட் மார்க்குஸ் ஒருபோதுமே மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுக்கவில்லை, அவ்விதம் ஞானியும் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை. ஹேபேட் மார்குஸ் மார்க்சியமே மானுடரை மீண்டும் இன்பநிலைக்குக் கொண்டு செல்லுமென்று கூறுகிறாரே தவிர மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுக்கவில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R