முதல் காண்டு -700 MWe அணுமின்சக்தி நிலைய வெற்றி

2020 ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் கக்ரபாரா -3 என்னும் புதிய மாபெரும் 700 MWe அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம் புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு ஆயினும், இந்தியர் புதிய சாதன, நுணுக்கங்கள், இயக்கங்கள் புகுத்தி நவீனப் பாதுகாப்புச் சுய வடிவ [Indigenous] நிலையமாக டிசைன் செய்து கட்டியுள்ளார். இது பயன்படுத்தும் இயல் யுரேனிய உலோகம், கனநீர் எளிதாகக் கிடைப்பவை. இதே டிசைனில் மகாராஸ்டிரா தாராப்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டை யூனிட்டுகள் ஒவ்வொன்றும் 500 MWe மின்சாரத் திறம் உடையவை.
https://youtu.be/Rj7QkRMoeF8
வெற்றிகரமாக அதே முறையில் இயங்கப் போகும் 700 MWe காண்டு இரட்டை யூனிட்டுகள் ராஜஸ்தான் கோட்டாவில் கட்டப் படுகின்றன. கக்ரபாரா -4 உருவாகி வருகிறது. மற்ற சில மாநிலங்களிலும் சேர்ந்து 12 யூனிட்டுகள் 700 MWe அணுமின் நிலையங்கள் 2017 ஆண்டில் நிதி ஒதுக்குப் பெற்றுள்ளன.

பூரணத் தொடரியக்கம் [CRITICALITY] என்றால் என்ன ?
காண்டு அணு உலையில் இயல் யுரேனியம் -238 எரிக்கோலாய் கனநீர்த் தொட்டியில் எழுப்பும் நியூட்ரான்கள், சிறிதளவு உள்ள யுரேனியம் -235 உலோகத்தின் அணுக்களைப் பிளக்கின்றன. ஒரு நியூட்ரான் ஒரு யுரேனிய -235 அணுவைப் பிளந்து வெப்பசக்தியும்,இரு நியூட்ரான்கள் வெளியாகும். இரு நியூட்ரான்கள் இரண்டு யுரேனிய -235 அணுக்களைத் தாக்கி, வெப்ப சக்தியும் 4 நியூட்ரான்கள் உண்டாகும். 2, 4, 8,16, 32, 64 .... என்று பெருக்கு முறையில் நியூட்ரான்கள் பெருகும். அத்துடன் வெப்பசக்தி விரைவில் பெருகி, கதிரியக்கக் கழிவுகளும் மிகும். அதாவது நியூட்ரான்களின் எண்ணிக்கை வெப்பசக்தி பெருக்கத்துக்கு அளவு கோலாகிறது. உருவாகும் நியூட்ரான்கள் சில தப்பி ஓடும். சில கனநீரிலும், கவச உலோகத்திலும் விழுங்கப்படும். அத்துடன் அணு உலை நியூட்ரான்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த காட்பியம் கோல்களும் [Cadmium Rods] விழுங்கிக் கோல்களும், [Absorber Rods], உலை நிறுத்தக் கோள்களும் [Shutdown Rods] பயன்படுத்தப் படுகின்றன.
அணுப்பிளவுத் தொடரியக்கம் [Nuclear Fission Chain Reaction] பூரணத்தொடரி யக்கத்தில் [Criticality] துவங்குகிறது. அதாவது அணு உலைத் தொட்டியில் முதலில் தோன்றும் நியூட்ரான்களும், பிளவு செய்யும் நியூட்ரான்களும் சமாக இருக்கும்படி செய்வது.
அடுத்தது மீறும் தொடரியக்கம் [Super Critical]. உருவாகும் நியூட்ரான்கள் எண்ணிக்கை, பயன்பாட்டு எண்ணிக்கை விட அதிகமாகி வெப்ப சக்தி மிகுதி ஆவது. அதுபோல் உருவாகும் நியூட்ரான்கள் குறைந்தால் ஆறும் தொடரியக்கம் [Sub Critical Reaction] வெப்பசக்தி குன்றச் செய்யும்.
அணு உலையில் உருவாகும் பெரும்பான்மை நியூட்ரான்கள் விழுங்கப் பட்டால் உலை நின்று விடும். [Reactor Shutdown]
தற்போது இந்தியாவில் 23 அணுமின் நிலையங்கள் 6780 MWe உற்பத்தி செய்து வருகின்றன. இந்தியாவின் குறிக்கோள் 2031 ஆண்டுக்குள் 22,480 MWe தகுதியுள்ள அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்பதே. அவற்றுள் 12 நிலையங்கள் 700 MWe திறம் கொண்டவையாக இருக்கும். ஒரு 700 MWe யூனிட் கட்ட சுமார் 10 ஆண்டுகள் எடுக்கும். இரட்டை யூனிட் கட்ட நிதிச் செலவு சுமார் 11,500 கோடி ரூபாய். யூனிட் விலை வீதம் : 2.80 ரூ /kwh [2010 நாணய மதிப்பு] அணுமின் நிலையம் விலை : ரூ 8 கோடி/ MWe [2010 .நாணய மதிப்பு.].
https://youtu.be/_pY5HeZpNr8
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems