முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -ஆதிகாலத்து மனிதன் நாகரிகம் அடைந்து நற்பண்பினைப் பெற்ற காலம் முதல் இசைக்கலை வளர்ந்து வருகிறது. உலகில் நெடுங்காலமாக வளர்ந்து வரும் கலைகளில் இசைக்கலையும் ஒன்று. மொழிக்கும் இசைக்கும் ஒலியே தாய். நம் தமிழ் மொழியில் இசைத்தமிழ், ஓர்அங்கம் ஆகும். தமிழ் இசைக்கு மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்ககாலம் தொட்டு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் இயற்றப்பட்ட கவிதைகள் அனைத்துமே இசையோடு பாடக்கூடிய தன்மையுடையன என்பர் ஆய்வாளர்கள். யாப்பில் அமைந்த செய்யுட்களுக்கு இசையின் தாக்கம் உண்டு எனலாம். பாரதியார்பாடல்கள் பெரும்பகுதி இசையோடு பாடக்கூடியது. கர்நாடக இசை, இந்துஸ்தான் இசை, தமிழ் இசை போன்ற இசை வகைகளில் பாரதி பாடல்களை இயற்றியுள்ளார்.

இசைத் தமிழ்

கலைகளுள் இசை தலைமைச் சிறப்புடையது. பேசத் தொடங்கிய மனிதனின் ஆசைகள், அவலங்கள் பாட்டாக எழுந்தன. பாடுவோர்பண் அமைத்துப் பாடும் போது பாடல் தரும் இன்பம் எல்லையற்றது ஆகும். இசை என்ற சொல்லிற்கு இசைய வைப்பது என்பது பொருள். இசை மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்றன. பணிய வைக்கின்ற ஒரு அரும் பெரும் சாதனம் இசை ஆகும். விலங்கினங்கள், குழந்தைகள் கூட இசைகேட்டு மயங்குவர். இதனையே பாரதி,

“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டில் சுவைதனைப் பாம்பறியும்” (பாரதியார்கவிதைகள், ப - 81)

என்கிறார். இசை உருப்படிகளை உருவாக்கும் பாவலர்களுக்கு இயல் தமிழ் அறிவு நிறைந்து இரக்க வேண்டும் என்பர். பாரதி வீர உணர்ச்சியை, நாட்டின் துயரங்களை வேதாந்த தத்துவங்களை, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இறைவழிபாபாட்டை, தேசிய விடுதலையை பண் அமைத்து இசையுடன் பாடும் அளவிற்கு இயற்றியிருப்பது உயர்வானதாகும்.

இசைத்தமிழும் பாரதியும்

இசைப்பாக்களில் நெடில்களும், மெல்லினங்களும் இடையினங்களும் மிகுதியாக அமைய வேண்டும்.

“தாளம் தாளம் தாளம்
தாளம் போயின் கூளம், கூளம்” (மேற்படி, ப - 94)

என்று தாளத்துடன் கூடிய இசைப்பாடல்களைப் பற்றி குறிப்பிடுகிறார்பாரதியார்.

நாட்டுப்புற இசை

நமது மண்ணுக்கான இசை, உலகில் பழமையாகக் கருதப்பட்டு இசைக்கருவிகளாகிய யாழ், குழல், மத்தளம் போன்றவை ஆதிமனிதன் தன் இனக்குழுவுடன் இருக்கும் போதுகண்டுபிடித்தது. தொழில் சார்ந்து, வாழ்க்கை முறை, அமையும் போது இசையும் அவ்வாறே வெளிப்படுகிறது. உழவு சார்ந்த பாடல்கள், வாழ்க்கை முறையோடு தொடர்புடைய பாடல்கள், நம்பிக்கை, சடங்குகள், பழக்கவழக்கங்கள், இவற்றின் சாரமான பாடல்கள் கிராமிய மணம் கமழும் நாட்டுப்புற இசையான மக்கள் இசை, இலக்கணம் உருவாகும் முன்பே இலக்கணத்துடன் எதுகை, மோனை, சந்தம் கொண்டு இயல்பாய் அமைந்தது. பாரதியார்பல்வேறு அனுபவங்களின் வாயிலாக இசை நுணுக்கங்களை அறிந்தவர்.

சிந்து

சிந்துக்கள் இலக்கணம் பற்றி தொல்காப்பியம், பஞ்சமரபு, யாப்பு நூல், அறுவகை இலக்கணம், தொடையதிகாரம் முதலிய நூல்களில் காணப்படுகிறது.

“அளவுற் சிந்தும் வெள்ளைக்குரிய” (தொல்காப்பியம் - பொருள், ப - 55)

எனத் தொல்ககாப்பியத்தில் வெண்பாவிற்குரிய அடியும் தளையும் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளப் பகுதியில் சிந்து என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது. இதில் சிந்து என்பது ஒரு எழுத்து முதல் ஒன்பது எழுத்து ஈறாகிய அடியைக் கொண்டு மூன்று சீர்களைப் பெற்று வரும் சிந்தனையைக் குறிக்கிறது. மூன்றுச் சீர்களைக் கொண்ட சிந்தனையாலான பாடல்கள் சிந்து என வழங்கப்பட்டன. சிந்து என்பது நாட்டுப்புறப்பாடல் வகையில் அடங்கும். சிந்து என்னும் இசைப்பாடலுக்கு இலக்கணம் கூறிய முதல் நூல்பஞ்சமரபேயாகும். அறுவகை இலக்கணம் என்னும் நூலில் பல்லவி, அனுபல்வலி, என்னும் இருவகை உறுப்புகள் இல்லாமலும், நடனத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு பாகுப் பொருளைக் கூறுவதாகவும் இரண்டு அல்லது நான்கடிகளைக் கொண்டதாகவும், அமைவது சிந்து என்று தண்டபாணி சுவாமிகள் கூறுகின்றனர்.

நொண்டிச்சிந்து

நாட்டுப்புறங்களில் நடைபெறும் ஆட்டங்கள், கூத்துக்கள் ஆகியவற்றில் வேடிக்கைச் செய்துக் காட்டுவதற்காக ஒருவன் ஒரு காலை நொண்டி போல கிந்திக்கிந்தி நடந்து ஒரு கம்பினை ஊன்றிக்கொண்டு சிற்றுப்பாடல்களைப் பாடுவான் அதற்கேற்ப ஆடிக்கொள்வதும் உண்டு. முதல் அடியில் ஓர்சீர்குறைத்தும், இரண்டாம் அடியில் ஒரு சீர்அதிகமாகவும் இருக்கும்.

“நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைக்கெட்ட மாந்தரை நினைத்துவிட்டார்
அஞ்சி யஞ்சி சாவார்- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார்- இந்த
மரத்தில் என்பார். அந்தன் இனத்தில் என்பார்” (பாரதியார்கவிதைகள், ப - 38.)

என்ற பாடல் பாரத மக்களின் நிலையினை எடுத்துக்கூறும் கருத்துச் செறிவுற்ற பாடலாகவும் நொண்டிச் சிந்திலும் அமைந்துள்ளது.

காவடிச்சிந்து

காவடி எடுத்துச் செல்லும் போது பாடப்படும் பாடல் காவடிச்சிந்து ஆகும். ஆனந்த பைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் பாரதியார்,

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவன்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியுள்ளார்” (மேற்படி, ப - 80.)

ஆனந்தக்களிப்பு

மகிழ்ந்து எழுகின்ற உள்ளக்கிளர்ச்சியினால் பாடுவதால் ஆனந்தக் களிப்பு என்றப்பெயர் பெற்றது. இந்தியத் திருநாட்டின் தேசீயக் கொடியைப் பார்த்து மனம் மகிழ்ந்த பாரதியார்எல்லையில்லாத ஆனந்தத்தின் தாயுமானவர் பாடிய மெட்டால்,

பல்லவி

“தாயின் மணிக்கொடி பாரிர்அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரிர்” (மேற்படி, ப - 39.)

சரணம்

“ஓங்கி வளர்ந்ததோர்கம்பர் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித்திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்என்றும்
காணரும் வீரர் பெருந்திருக்கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் தங்கள்
நல்லுயிர்ஈந்தும் கொடியினைக் காப்பார்” (மேற்படி, ப - 72.)

என்ற ஆனந்தக் களிப்புடன் பாடுகிறார்.

கண்ணி

கண்ணி என்பது சூடும்பாமாலை கலிவெண்பாவில் இரண்டில் வரும் உறுப்பு ஆகும்.

“ஆயிரத் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிளிகான் - பல்
லாபாரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
மாமெனல் கேளீரோ?” (மேற்படி, ப - 102.)

புதுமையாளான் பாரதி நாட்டுப்புற இசையின் தன்மை மாறாது, யாப்பிலக்கணத்தில் பல்வேறு கருத்துக்களை இனிமையான இசையாக எடுத்துக் கூறியுள்ளான்.

பாரதியார்கவிதைகளில் காணலாகும் பண் அமைப்பு முறை

இறைபக்தியையும், விடுதலையுணர்வையும் வெளிப்படுத்தும் வகையில், பல பாடல்களைக் கீர்த்தனை வடிவமாகவும், செய்யுள் வடிவமாகவும், கவிதை வடிவாகவும் படைத்து தமிழுலகிற்குத் தொண்டாற்றியவர் பலர். அவர்களுள் கலாச்சார வரலாற்றில் ஓர்உன்னத இடம் பெற்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவராவார். பாரதியார்தமிழ் நாடகக் கவி, தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் சிறந்த தேசபக்தர். இந்தியாவின் உயர்வைத் தித்திக்கும் தமிழிலே இசையோடு சேர்த்துப் பாடியவர். இசைக்கு உட்பட்டு பண் அமைப்போடு இவர்தம் விதைகள் படைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இவர் தம் கவிதைகளில் பண்கள் எவ்வகையில் அமைந்துள்ளது என்பதைக் குறித்து ஆய்வது அவசியம்.

பண்கள் - விளக்கம்

கேட்பார்க்கு இனிமை பயக்கும் ஒலியை இசை எனலாம். ஒழுங்கான முறைமையில் பயன்படுத்தப்படும் ஓசையே இசை எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் ஓசை ஒலிக்கப்படுமானால் அஃது இரைச்சல் எனப்படும். இசை ஓசை (நாதம்) யினின்றே கோவைகளும் (ஸ்வரங்கள்) அந்தக் கோவைகளைப் பின்னணியாகக் கொண்டே இசையும் அமைந்துள்ளது. காதுக்கு இனிமையைக் கொடுக்கும் வகையில் சேர்க்கப்பட்ட கோவைகள் (ஸ்வரக்கோவைகள்) குறிப்பிட்ட ஒரு வடிவத்தைப் பெற்றிருக்கும் படி நெறிவு சுளிவுகளம் (கமகங்கள்) இணைந்து அமைந்ததே பண்கள் (இராகங்கள்) ஆகும். ஒவ்வொரு பண்ணின் ஏறு நிலரும் (ஆரோகணம்) இறங்கு நிரலும் (அவரோகணம்) அந்தப் பண்ணின் அமைப்புக்கு அடிகோலும், கோவைகளைக் கோர்த்துச் சுவைகள் தோன்றப் பண்ணப்பட்டமையால் பண் எனப்பட்டது. வெறும் கோவைகளைக் கோத்து விடுவதால் பண் அமைந்து விடாது. மாறாக ஒவ்வொரு கோவையையும் நீட்டியோ, குறுக்கியோ, வழுக்கியோ அசைத்தோ ஒலிப்பதால் எண் சுவைகள் தோன்றும். இவ்வாறாகப் பண்ணப்பட்டவையேப் பண் ஆகும். பண் குறித்து சிலப்பதிகாரத்தில்,

“பாவோடு அணைதல் இசை என்றார்பண் என்றார்
மேவார்பெருந்தானம் எட்டானும் - பாவாய்
எடுத்தல் முதலாய் இரு நான்கும் பண்ணிப்
படுத்தமையால் பண் என்று பார்” (மேற்படி, ப - 121.)

என அடியார்க்கு நல்லார்உரை கூறுகின்றது. எனவே, எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலிப்பு, உருட்டு, தாக்கு என்னும் எட்டு வகை ஒலிச்செயல்கள் விளங்கி உணர்ச்சியும், சுவையும் ஊட்டுவதே பண் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தே பண்களைப் பெரும்பண் (ஜனகராகம்) திறப்பண் (ஜன்யராகம்) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். பெரும்பண்ணைத் தலைமைப்பண், தாய்ப்பண் எனவும் திறப்பண்ணை கிளைப்பண் எனவும் வழங்குவர். கர்நாடக இசையில் 72 வெரும்பண்களும், தமிழிசையில் 16 பெரும்பண்களும் சிறப்புற்று விளங்குகின்றன. தமிழிசையில் 16 பெரும்பண் மற்றும் 87 திறப்பண் ஆக 103 என மொத்தம் 103 தமிழ்ப்பண்கள் உள்ளன. கர்நாடக இசையில் கிளைப்(திற) பண்கள் கணக்கற்றவையாகத் திகழ்கின்றன.

பாரதியாரும் தமிழ்ப்பண்களும்

பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழில் கீர்த்தனை இலக்கியங்கள் தோன்றின என்பர். நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்தக் காலத்தில் மேற்கத்திய இசையும் வளரத் தொடங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்கத்திய இசையும் வளரத் தொடங்கியது. பாரதியார்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் பல பாடல்களைப் பாடி மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டினார். பாரதியார்இசையோடு பாடியிருக்கும் பாடல்களின் ஆரம்பத்தில் பல்லவி என்று எழுதப்படுவதற்கு முன் ராகம் (பண்) என்ன என்பதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். “பண்கள் 103’ என் ஆபிரகாம் பண்டிதர் கருணாம்ருதசாகரத்தில் கூறியுள்ளார். விபுலானந்தர் தமது யாழ் நூலில் பண்ணின் வகைகளை விளக்குகிறார். தேவாரத்தில் பயன்பட்டுள்ளப் பண்கள் இருபத்து மூன்று. தமிழிசைச் சங்கத்தின் சார்பாக அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழு தேவாரப் பண்களுக்கு இணையான இராகங்களைக் கண்டு குறித்துள்ளது. பாரதியார்கவிதைத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இராகவகைகள் 29 ஆகும். இதில் தமிழ்ப்பண்களுக்கு இணையான இராகங்களும், கர்நாடக இசையின் இராகங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் பதிமூன்று பண்கள் தமிழ்ப்பண்களுக்கு இணையான இராகங்களும், கர்நாடக இசையின் இராகங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் பதிமூன்று பண்கள் தமிழ்ப்பண்களுக்குரிய இராகங்களாக் காணப்படுகிறது. தமிழ்ப் பண்களின் பெயர்கள் கர்நாடக இசையின் இராகப் பெயரால் பாரதியார்கவிதைகளில் குறிக்கப்பட்டுள்ளது. பதிமூன்று விதமான தமிழ்ப்பண்களாவன,

1. பஞ்சமம் (பிலஹரி) - 4 பாடல்கள்
2. இந்தளம் (ஆனந்த பைரவி) - 3 பாடல்கள்
3. நட்டப்பாடை (நாடடைக்குறிஞ்சி) - 1 பாடல்;
4. முதிர்ந்தக் குறிஞ்சி (செஞ்சுருட்டி) - 5 பாடல்கள்
5. புறநீர்மை (பூபாளம்) - 4 பாடல்கள்
6. சீகாமரம் (நாதநாமக்ரியை) - 6 பாடல்கள்
7. தக்கேசி (காம்போதி) - 3 பாடல்கள்
8. முதிர்ந்தவிந்தளம் (காமஸ்) - 3 பாடல்கள்
9. தக்கராகம் (சுருட்டி) - 1 பாடல்
10. பாலையாழ் (முகாரி) - 1 பாடல்
11. கௌசிகம் (பைரவி) - 1 பாடல்
12. கோடிப்பாலை (கரஹரப்பரியா) - 1 பாடல்
13. அரும்பாலை (சங்கராபரணம்) - 1 பாடல்

என பதிமூன்று தமிழ்ப்பண்களிலுமாக முப்பத்து நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். பாரதியார் ஏழ்பெரும் பாலைகளில் (கோடிப்பாவை) (கரஹரப்பிரியா) அரும்பாலை (சங்கராபரணம்) என்ற இருபாலைப் பண்களிலும் பாடியுள்ளார். கோடிப்பாலை (கரஹப்பிரியா) என்ற பண் நாற்பெரும் பண்களில் மருதப்பண்ணிற்குள்ளான பண்ணாகவும் வரும்.

பாரதியார் கையாண்ட கர்நாடகப் பண்கள்

கவிதை இயற்றுவதிலும். இசையிலும் தேர்ச்சிப் பெற்ற பாரதியார்கர்நாடக இசையில் அதிக ஈடுபாடும், திறமையும் கொண்டவராக விளங்கினார். கர்நாடக இசைக்குத் தங்கள் பாடல்கள் மூலம் அழிவில்லா பெருமைகளை ஈட்டித் தந்த மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராசர், ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமாசாத்திரி ஆகியோர்இயற்றிய கீர்த்தனைகளைக் கேட்டு இரசித்து அவற்றின் இசைத்திறனை உணர்ந்து அனுபவித்தவர் பாரதியார். இவர் தம் பாடல்களில் இசை வெள்ளமாகப் பெருக்கெடுத்து சந்தம் நிறைந்த கவிதையோடு கணீரென்ற குரலில் வடிவம் பெற்றது என்றால் மிகையாகாது. பாரதியார்பாடியுள்ள இருபத்து ஒன்பது விதமான கர்நாடகப் பண்களில் பதிமூன்று பண்கள் தமிழ்ப்பண்களாகக் கொள்ளப்பட்டது. ஏனை பதினாறு பண்களாவன,

1. நாட்டை - 2 பாடல்கள்
2. சக்கரவாகம் - 1 பாடல்
3. ஸரஸ்வதி மனோகரி - 1 பாடல்
4. ஸ்ரீராகம் - 2 பாடல்கள்
5. புன்னாகவராளி - 8 பாடல்கள்
6. தன்யாஸி - 3 பாடல்கள்
7. பியாக் - 1 பாடல்
8. யதுகுலகாம்போதி - 1 பாடல்
9. ஹிந்துஸ்தானி பியாக் - 1 பாடல்
10. ஹிந்துஸ்தானி தோடி - 3 பாடல்கள்
11. கானடா - 1 பாடல்
12. மணிரங்கு - 1 பாடல்
13. வஸந்தம் - 1 பாடல்
14. கேதாரம் - 2 பாடல்கள்
15. வராளி - 2 பாடல்கள்
16. ஸைந்தவி - 1 பாடல்

ஆகிய பதினாறு பண்களிலுமாகப் பாரதியார்முப்பத்தொன்று (31) பாடல்களைப் பாடியுள்ளார்.

நாட்டுப்புற மெட்டுக்களைப் பொறுத்த மட்டில் பாரதியார் தம் கவிதைகளில் பதினாறு வகையான நாட்டுப்புறமெட்டு வடிவங்களைத் தம் கவிதைகளில் கையாண்டுள்ளார். அவையாவன,

1. நொண்டிச்சிந்து - 4 பாடல்கள்
2. காவடிச்சிந்து - 5 பாடல்கள்
3. ஆனந்தக் களிப்பு - 9 பாடல்கள்
4. தாண்டகம் - 1 பாடல்
5. மறவன் பாட்டு - 1 பாடல்
6. பண்டாரப்பாட்டு - 1 பாடல்
7. புதியகோணங்கி - 1 பாடல்
8. ஆனந்தக் களிப்பு - 3 பாடல்கள்
9. கும்மிப்பாட்டு - 1 பாடல்
10. வண்டிக்காரன் பாட்டு - 1 பாடல்
11. அம்மாக் கண்ணுப்பாட்டு - 1 பாடல்
12. தங்கப்பாட்டு - 1 பாடல்
13. வேலன்பாட்டு - 1 பாடல்
14. நிலவுப்பாட்டு - 1 பாடல்
15. வேள்விப்பாட்டு - 1 பாடல்
16. முரசுப்பாட்டு - 1 பாடல்

என பதினாறு வகை நாட்டுப்புற மெட்டுக்களிலுமாக 31 நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதியார்இசையின் மீதும், தமிழின் மீதும் கொண்டிருந்த ஆர்வத்தால் இன்னிசையால் தமிழ் பரப்பினார். மதம், மொழி, இனம் இவகைளைக் கடந்து சுதந்திர ஆன்மீக உணர்வோடு திகழும் இந்தியாவைத் தம் பாடல்களில் கற்பனைச் செய்து பண்ணோடு பாடியுள்ள தன்மை சிறப்பானதாகும். தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட தமிழ்நாட்டுக் கவியின் இசைப்புலமையை இவர்தம் கவிதைகளில் காணலாகும். பண்களின் மூலம் அறிய முடிகிறது. இருபத்தொன்பது தமிழ் பண்களுக்குரியதாக விளங்குகிறது. மேலும் பதினாறு வகையான நாட்டுப்புற மெட்டுக்களும் பாரதியார்கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவைகள் பாரதியாரின் இசைப்புலமையையும், இசையின் மீது கொண்டுள்ள பற்றையும் விளக்குவதாய் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

பாரதியின் இசைநெறி

தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இயற்கையாகவே இசையறிவு இருந்தது. சென்ற சில நூற்றாண்டுகளில் கீர்த்தனை எனும் இசைப்பாட்டு பெருவழக்கமாக இருந்தது. இன்றும் ஓரளவிற்கு இருந்து வருகிறது. கீர்த்தனை மரபு ஆந்திர நாட்டில் தோன்றி, தமிழகத்தில் தழைத்து வளர்ந்தது. இதனாலேயே சுந்தரத் தெலுங்கு எனப் போற்றுகிறார். இவர் தம்முடைய பெரும்பாலான கவிதைகளுக்கு இராகமும், தாளமும், மெட்டும், சந்தக்குறிப்பும் கொடுத்துள்ளார். பராசக்தியிடம் வரம் கேட்கும் பொழுது,

“நண்ணும் பாட்டினொடு தாளம் - சுவைமிகு
நன்றா வுளந்தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்

பாடத் திறனடைதல் வேண்டும்” (பாரதியார்கவிதைகள், ப - 79.)

என வேண்டுகிறார். ஐம்பத்தெட்டு தலைப்புகளில் உள்ளது. கவிதைகளுக்கு வெவ்வேறு இராக, தாளக் குறிப்புகளையும் பாடல்களின் தலைப்புகளிலே அவர் கொடுத்துள்ளார். இவற்றுள் நாத, நாமக்கிரியை, ஹிந்துஸ்தான் பியாக், காம்போதி, இந்துஸ்தான், தோடி, புன்னாகவராளி, பூபாளம், ஆபோகி, வசந்தா, மணிரங்கு, சுருட்டி, கானடா, தன்யாசி, வராளி, முகாரி செஞ்சுருட்டி, பிலகரி, கேதாரம், பியாக்கமாஸ், தாண்டகம், ஸைந்தவி, நாட்டைக் குறிஞ்சி, கரஹரப்பிரியா, ஆனந்த பைரவி, யதுகுல காம்போதி, சக்ரவாகம், சரஸ்வதி மனோகரி, ஸ்ரீராகம் சங்கராபரணம் என்னும் 29 இராகங்கள் வெவ்வேறு பாடல்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்னும் மூன்று உறுப்புக்குள் அடங்கிய பாடல்களையும், பல்லவி சரணம் என்னும் உறுப்புகள் மட்டும் கொண்ட பாடல்களையும் முதலிரண்டு கூறுகளும் இல்லாமல் சரணங்கள் மட்டுமே அமைந்த பாடல்களையும் பாரதியார்இயற்றியுள்ளார். சிறந்த மனித வாழ்க்கையை நல்லதோர்வீணை என்கிறார். கேட்போரின் செவி, சிந்தனை, உள்ளம், உணர்ச்சி ஆகியவற்றைப் பாட்டுடன் ஒன்றச் செய்து, இசைய வைப்பதே இசையாகும்.

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேடா - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா” (மேற்படி, ப - 102.)

என்றார் கவிமணி. பாரதியாரின் பாடற் சிறப்பைப் பாங்காக எடுத்தியம்புகிறார்.

“பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற்கே ஓர்பழுதுண்டாயின்
மண்ணே மண்ணே மண்ணே” (மேற்படி, ப - 210.)

என்பதில் குயில் பாட்டில் பண்ணின் சிறப்பினையும் தாளத்தின் சிறப்பினையும், நாதத்தின் மேன்மையையும் சுட்டிக் காட்டியுள்ளார். குழலும், வீணையும், தம்பூரும் அவரால் பாராட்டப்படுகின்ற இசைக்கருவிகளாகின்றன. இசை என்பது சக்தியின் லீலை என்பதைப் பாரதியார்மிக அருமையாகக் கூறியுள்ளார். உரைநடையில் பாம்புப்பிடாரன் என்ற தலைப்பில் குழலிசைப்பற்றி பாம்புப்பிராடன் குழல் ஊதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? துளையிலே பிறந்ததா? பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவன் உள்ளத்திலே பிறந்தது. குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக்குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் லீலை. அவன் உள்ளத்திலே பாடுகிறான். அது குழலின் துளையிலே கேட்கிறது என்று இவர் கூறும் கருத்துக்கள் அவர்தம் இசைப்புலமையைக் காட்டும்.

நாட்டுப்புறப்பாடலில் ஈடுபாடு

‘குயில் பாட்டில் நாட்டுப்புறப் பாடல்களின் மயக்கும் இயல்பை ஏற்ற நீர்ப்பாட்டின் இசையிலும், நெல்லிடிக்கும் கோல் தொடியார்குக்குவெனக் கொஞ்சும் மொழியினிலும், கண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும், பண்ணை மடவார்பழகுபல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்ட முதப்பாட்டினிலும் நெஞ்சைப் பறிக்கொடுத்தேன் பாவியேன்’ என்று பாரதியார் எடுத்தியம்புகிறார். நம் ஊர்களில் வீடு வீடாக வரும் குடுகுடுப்பைக்காரன் பாடும் பாட்டே புதிய கோணங்கி எனும் தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தைத் தானம் வாழ்ந்த கடையத்திற்குரிய எதிர்காலமாகப் பாவித்து, அந்த ஊரினை வேதபுரம் எனச் சிறப்பித்துள்ளார்.

“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!
நல்லகாலம் வருகுது! நல்லகாலம் வருகுது!
சாதிகள் சேருது! சண்டைகள் தொலையுது!
வேதபுரத் தாருக்கு நல்லகுறி சொல்லு!
தரித்திரம் போகுது! செல்வம் வருகுது!
படிப்பு வளருது! பாவம் தொலையுது!” (மேற்படி, ப - 171.)

என்ற இப்பாடல் நாட்டுப்புறப்பாடல் வடிவில் இயற்றப்பட்டுள்ள பாரதி கவிதைகளுக்குச் சிறந்ததோர்எடுத்துக்காட்டாகும்.

நாட்டுப்புற மக்களிடையே சிறப்புற்று விளங்கும் பாடல்களில் கும்மிப்பாடல்கள் முதன்மையானவை. இதனைப் பாரதியார்பெண்கள் விடுதலைக்கும்மி என்ற அமைப்பில் கீழ்க்காணுமாறு பாடியுள்ளார்.

“கும்மி யடிதமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
தம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி” (மேற்படி, ப - 200.)

பாரதியார் நாடோடி மெட்டுக்களை எளிதாகத் தமிழ்ப் பாடல்களுக்குள் நுழைத்து விட்டார். ரயிலில் போகும் போது பிச்சைக்காரப் பெண்ணின் பாடலைக் கேட்டுக் கொண்டு இருப்பார். உடனே அதே மெட்டில் தேசிய கீதம் உருவாகிவிடும் விறகு வெட்டியின் பெருமூச்சினை ஒரு பாட்டில் கேட்கலாம். பறையர் தம் வீதி முரசொலி சாதி, மத பேதங்களைத் தவிர்க்கும் ஒலியாக முரசு என்ற தலைப்பில்,

“வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” (மேற்படி, ப - 70.)

என்று முரசுக் கொட்டுகிறார். தெருவிலே ஊசிகளும், பாசி மணிகளும் விற்று பிச்சையெடுக்கின்ற பெண்கள் பாடும் நடையை ஒத்து,

“மாயச் சூதினுக்கே - ஐயன்
மனம் இணங்கி விட்டான்
தாயம் உருட்டலானர்- அங்கே
சகுனி ஆர்ப்பரித்தான்” (மேற்படி, ப - 70.)

எனச் சூதாட்டத்தை வருணிக்கிறார். இங்ஙனம் சூதாட்டப் பாடல்கள் அனைத்தும் பாமர மெட்டில் அமைந்தச் சிந்துப் பாடல்களாக விளங்குகின்றன. இந்த சிந்து எனும் இசைப்பா, பாரதியாரின் கைகளில் பாய்ந்துச் செல்லும் பந்தாகத் துள்ளி விளையாடுகிறது.

பாரதியாருடைய கவிதைகளில் ஆறுமுக வடிவேலனே எனும் காவடிச் சிந்து அமைப்பில் எங்கள் தாய் என்னும் தலைப்பில் அமைந்துள்ள,

“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்” (மேற்படி, ப - 101.)

என்ற பாடல் சிறப்பானதாகும். சமனிலைச்சிந்து, வியனிலைச் சிந்து, நொண்டிச்சிந்து எனச் சிந்துப் பலவகைப்படும்.

“ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா” (மேற்படி, ப - 211.)

என்ற பாரதியின் பாப்பாப்பாட்டு சமனிலைச் சிந்து வடிவில் அமைந்ததாகும். பாரதியாரின் கவிதைகளில் நொண்டிச்சிந்து முதன்மை இடத்தைப் பெறுகிறது. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை எனும் தலைப்பில் அமைந்த,

“நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார்- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே” (மேற்படி, ப - 64.)

என்ற பாடலை அனைவரும் அறிவர் மற்றும் கலைமகளை வேண்டுதல், கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, பாஞ்சாலி சபத்தில் சில பாடல்கள் நொண்டிச்சிந்தில் இயற்றப்பட்டுள்ளன.

“தண்ணீர்விட்டா வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ”(மேற்படி, ப - 113.)

என்ற வரிகள் சுதந்திரப்பயிர்எனும் தலைப்பில் கண்ணிகளால் அமைந்ததாகும். பெண்களைக் கிளியே கிளியே என விளிக்கும் தனிச் சொல்லைப் பெற்று வருவது கிளிக்கண்ணி எனப்படும். தேசிய கீதங்களுள் முதல் கவிதையாக இருக்கும் வந்தே மாதரம் எனும் தலைப்புடைய பாடல் ஆனந்த களிப்பு மெட்டில் அமைந்த கீர்த்தனைப் பாடலாகும்.

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” (மேற்படி, ப - 80.)

என்ற பாடல் சுதந்திரப்பள்ளு என்ற அமைப்பில் அமைந்த கீர்த்தனையாகும். பாரதியார்காலத்தில் எழுத்து வடிவம் பெறாமல் மக்கள் இதழ்களில் நடமாடிய பாடல் மரபுகள் கல்லாதார்காவியங்களாகக் கருத்தோவியங்களாகப் போற்றப்பட்டன.

முடிவுரை

பாரதி பண் அமைத்து, பாடல்களை இயற்றினார். இசையென்பது ஒலியணுக்களின் திரட்சி ஆகும். இசைகள் ஒத்து ஒலிக்கப்பெறுவது பண் ஆகும். ஒரு இராகத்தில் ஏழு சுரம் இருந்தால் அது ஒரு பண் ஆகும் என்பார். சாம்பமூர்த்தி தாரப்பண் இசைத்தமிழுக்கே அடித்தளமாவதை இக்கட்டுரை உணர்த்துகிறது. இறைபக்தியையும், விடுதலையுணர்வையும் வெளிப்படுத்தும் வகையில், பல பாடல்களைக் கீர்த்தனை வடிவமாகவும், செய்யுள் வடிவமாகவும், கவிதை வடிவாகவும் படைத்து தமிழுலகிற்குத் தொண்டாற்றியவர்களுள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவராவார். பாரதியார்தமிழ் நாடகக் கவி, தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் சிறந்த தேசபக்தர். இந்தியாவின் உயர்வைத் தித்திக்கும் தமிழிலே இசையோடு சேர்த்துப் பாடியவர். இசைக்கு உட்பட்டு பண் அமைப்போடு இவர்தம் விதைகள் படைக்கப்பட்டுள்ளமையை இக்கட்டுரைஆராய்கிறது. தமிழில் பதினாறாம் நூற்றாண்டில் முதலில் கீர்த்தனை இலக்கியங்கள் தோன்றின என்பர்.

பாரதியார்கவிதைகளில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தை படிமம், நடை, பொருள் என்னும் மூவகையாகத் திறனாய்வாளர் பாகுப்படுத்துவர். அம்மாக்கண்ணுப் பாட்டு, மறவன் பாட்டு என்பன சிறப்புமிக்க நாட்டுப் பாடல் பாணியில் அமைந்துள்ளமையை இக்கட்டுரைஆராய்ந்துள்ளது. நாட்டுப்புறப்பாடல் வடிவில் இயற்றப்பட்டுள்ள பாரதி கவிதைகளுக்குச் சிறந்ததோர்எடுத்துக்காட்டாகும். கிராமிய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் இயல்புகள் பலவற்றை தம்முடைய கவிதைகளின் பாடுப்பொருளாகக் கொண்டு பாடியதை இக்கட்டுரைதெள்ளிதின் விளக்கியுள்ளது. பாராட்டும் பாரதமும் அவருடைய கணிப்பில் இருந்துத்தப்பவில்லை என்பது அவருடைய பல இன்னிசைப் பாடல்களிலிருந்துப் புலப்படுகின்றது. அதுதவிர வீர உணர்ச்சியை தட்டி எழுப்பி நடமாட வைக்கும் இசைப்பாடல்களையும் அவருடைய இசைக்கலை மூலம் மக்களுக்கு வழங்கியுள்ளமையை இக்கட்டுரைஉணர்த்துகிறது.

துணைநின்ற நூல்கள்

1. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பதிப்பு - 1999.
2. பாரதியார்கவிதைகள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு - 1975.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R