கழுகும் குழந்தையும்அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள்  என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்:  "ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை" உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும்,  இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள்.  இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள்.  இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.

எழுத்தாளர் கற்சுறாகெவின்  கார்ட்டர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவரது 'கழுகும் , குழந்தையும்' புகைப்படம்தான். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் ஆபிரிக்கக் கண்டத்து வறுமையினை வெளிக்கொணர்வதற்காக அங்கு அனுப்பப்பட்டவர் அவரென்று அறிகின்றேன். உண்மையில் அவர் எடுத்த அந்தப் புகைப்படத்தின்  தாக்கத்தால் அப்புகைப்படமானது ஆபிரிக்கப் பஞ்சத்தின் நிலையினை உலகெங்கும் தெரியச்செய்தது. அது அந்தப்புகைப்படம் உருவாக்கிய ஆரோக்கிய விளைவு.  ஆனால் அதே புகைப்படம் இறுதியில் அவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ளவும் காரணமாயிற்று.

மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரான அவர் செய்தது என்ன? அந்தக் கலை அவருக்குத் தொழில். அப்புகைப்படத்தை அவர் நியூ யோர்க் டைம்ஸுக்கு விற்றார். அதுவே பின்னர் அவருக்கு அவ்வருடத்திய மிகச்சிறந்த புகைப்படத்துக்கான புலியட்சர் விருதினைப்பெற்றுத்தரக் காரணமாயிருந்தது. எழுத்தாளர் கற்சுறா கூறுவது போல் புகைப்படக்காரனுக்கு அவனது புகைப்படம் என்பது தொழில் அல்ல என்பது உண்மையானால் கெவின் கார்ட்டர் என்ன செய்திருக்க வேண்டும்? அப்புகைப்படத்தை இலாப, நோக்கற்று இயங்கும் அமைப்பொன்றுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அதன் மூலம் எவ்விதமான பணத்தையும் சம்பாதித்திருக்கக்கூடாது. அது மட்டுமல்ல அப்புகைப்படத்தை எடுக்கும்போது அந்தக் கழுகு அக்குழந்தைக்கு அருகில் வர மாட்டாதா என்று கெவின்  கார்ட்டர் காத்திருந்தாராம். அவ்விதம் வராதபடியால் இறுதியில் எடுத்த புகைப்படமே அந்தப்புகழ்பெற்ற புகைப்படம். புகைப்படம் எடுத்ததும் அவர் அந்தக் கழுகைத்  துரத்தி விட்டாராம். ஆனால் அவர் அந்தக் குழந்தைக்கும், அந்தக் குழந்தையின் குடும்பத்துக்கும் ஏதாவது பணம் கொடுத்து உதவி செய்தாரா? ஆனால் அந்தப் புகைப்படத்தை வைத்துத் தான் மட்டும் பணத்தையும், புகழையும் சம்பாதித்துக்கொண்டார். இறுதியில் உலகமே அவரது செயலுக்காகப் பலத்த விமர்சனங்களை முன் வைத்தது. அவற்றைத் தாங்க முடியாமல், அவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலினால் அவர் தன் வாழ்வையே முடித்துக்கொண்டார்.

கலைஞர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தால்  அவர்கள் மகோன்னதமான மானுடப்பிறவிகள் என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. அவர்களில் ஒரு சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். தாம் வாழும் சமுதாயம் ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்களுக்கு முகம் கொடுத்து , அவற்றை எதிர்த்து, தமக்கு மட்டுமல்ல தமது கலைக்கும் உண்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. ஆனால் எல்லாச் சிறந்த கலைஞர்களும் அப்படித்தானிருப்பார்கள் என்று கூற முடியாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R