கொரோனா காலகட்டத்தை பிரதிபலிக்கும் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு தொடர்பான ஓர் அறிவிப்பும், வேண்டுகோளும்!கொரோனா காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகள் ஏதோவொரு வகையில் அந்தக் காலகட்டத்தின் அக புற வெளிகளைப் படம்பிடித்துக்காட்டுகின்றன. அவ்வகையில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகின்றன. சாட்சியமாகின்றன.

தமிழ் கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து இதுவரை நான்கைந்து தொகுப்புகள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் (பாரதியார் கவிதைகளின் பெரும்பகுதியை மொழி பெயர்த்துள்ளார், சங்கத்தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்) தனி கவிஞர்களுடைய ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகளெனவும் 10க்கு மேல் வெளியாகி யுள்ளன - அவற்றில் சில இளம்பிறை, உமா மகேஸ் வரி, தமிழச்சி தங்கபாண்டியன்(நூல் வெளியாக உள்ளது), அ.வெண்ணிலா(நூல் வெளியாக உள்ளது, ) அவர்கள் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் குறைந்தபட்சம் 100ஐ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தொகுப்பிற்காக கவிதையை அனுப்ப விரும்பு கிறவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆளுக்கொரு கவிதை அனுப்பித் தரும்படி (டெமி ஸைஸ் தாளில் ஒன்று அல்லது இரண்டு பக்கங் களுக்கு மிகாமல்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கவிதைகள் அனுப்புவோர் தம்மைப் பற்றிய சிறு விவரக் குறிப்பு, புகைப்படம், விலாசம் மற்றும் தங்கள் கவிதையை மொழிபெயர்க்க அனுமதி ஆகியவற்றையும் அனுப்பித்தந்து உதவவும்.

கவிதை அனுப்பவேண்டிய கடைசி தேதி: இவ்வருடம் மே 15.

அனுப்பப்படும் அத்தனை கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பில் இடம்பெறும் என்று உறுதியளிக்க இயலாது. பல்வேறு காரணங்களால் சில கவிதைகள் மொழிபெயர்ப்புக்கு ஏற்றவையாக அமையாதுபோகலாம்.

தொகுப்பில் இடம்பெறும் இந்தியாவில் உள்ள கவிஞர்களுக்கு ஒரு அன்பளிப்புப் பிரதி அனுப்பிவைக்கப்படும். வெளிநாடுகளில் வாழ் கவிஞர்களைப் பொறுத்தவரையில் பிரதிகளுக்கான தபால் செலவு அதிகம். எனவே அவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் நட்பினர், உறவினர் முகவரியைத் தந்தால் அந்த விலாசத்திற்கு அன்பளிப்புப் பிரதி அனுப்பிவைக்கப்படும்.

இந்தத் தகவலை சக கவிஞர்களுக்கும் பகிர்ந்து உதவும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறது.

கவிதைகளை அனுப்பவேண்டிய [மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியனின்] மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Address: 2B, Athreya Apts
189, St.Mary's Road
Chennai - 600 018
Tamil Nadu _ INDIA

Mob: 9841017889


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R