பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

பசுமை வியாபாரம்

E-mail Print PDF

 - சுப்ரபாரதிமணியன் -

கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.

கொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன்.

இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “

வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.

“ விசகாய்கறியெ  சாப்புடறம்ன்னுதானே இங்க  வர்ரம் . இது என்ன புதுசா “ என்றேன்

“ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு  விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே

உம்..

“ தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..

“ ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது “

அவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது  ஆறுதலாக இருந்தது. பசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்யம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் . இயற்கை வேளாண் விளை பொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது.  இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது, உபயோகிப்பது பேசனாக மாறிவிட்டது. அவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை  செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை  அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும்  தந்திருக்கின்றன.

பசுமைச்  சூழல் , அவற்றை மேம்படுத்தும்  நடவடிக்கைகள் என்பவை  உடனடியாக நினைவுக்கு வரும் . இது சார்ந்த வார்த்தைகள் சமீபமாய்   அதிகப் புழக்கத்தில் இருந்தாலும் 90கள் முதலே அதிகம்  பிரயோகிக்கப்பட்டன . கார்ப்பரேட் சமூகம்  பொறுப்புணர்வு பற்றிய பிரஸ்தாபங்களின் போது   பசுமை வியாபாரமும்  புழக்கத்தில் வந்துவிட்டது  எதிர்காலத்  தலைமுறையினரை  மனதில் கொண்டு இந்த வார்த்தை உச்சரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது.

பசுமை நுகர்வு   என்பது பல நாடுகளில்  ஓர்  இயக்கமாகவே  நடைபெற்று வருகிறது.  உலகில் வெப்பமாதல் பற்றிய   விவாதங்களின்போது இந்த வார்த்தையும் சூடாகிவிட்டது.  இந்த பூமியைச்  சுத்தமானதாக  வெப்பம் குறைக்கும் முயற்சியில் இவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது

4 P கள்   இதனூடே விவாதிக்கப்படுகின்றன. Product , Price , Place , Promotion என்பவை அவை. பொருள்  எனப்படும்போது  சுற்றுச்சூழலுக்கு  அபாயம் தராதது என்ற பொருளிலும்  விலை என்கிற போது சாதாரணப் பொருட்களுக்கு தரும் விலையைக் காட்டிலும்  கொஞ்சம் அதிகமானதாக இருக்கிறது . ,  இதை விற்க  தனி இடங்கள்  என்பதாகவும்,     தனி வியாபாரம்  எண்ணங்கள்,   செயல்கள் என்பதாகவும்  உணரப்பட்டிருக்கிறது

எல்லாவற்றிலும்  பிராண்ட்  அவசியமாகிவிட்டது  நிலைத்துவிட்ட பிராண்ட்டுகள்  லாபத்தை  அள்ளிக் கொடுக்கின்றன. பிராண்ட் இருக்கிறதா  என்று பார்த்து பொருட்களை   வாங்குவது  பேஷன்  என்று நிலை வந்து  விட்டது . வியாபார தந்திரங்களில்,  விளம்பரங்களில் பிராண்ட்டை நிலைநிறுத்துவதும் முக்கியமாகிவிட்டது  விளம்பர யுகத்தில்   இந்த பிராண்டட்  மோகத்தை  மீறி  இயற்கை விளைபொருள்களை  விற்பனை செய்வதும்  ஒரு சாசகமே .

பின்னலாடை தரப்படுத்தலில்  பிராண்ட் அமைப்பில் SA 8000, SA 14000 போன்றவை  பிரபலமானவை ,  இதுபோல் iso14040   என்பது  சுற்றுச்சூழல் குறித்து வரும்  போது  வாழ்நாள் சூழலில் மதிப்பீடுகள்  திட்டம் பற்றி பேசப்பட்டது. விளைந்து சந்தைக்கு வர இருக்கும்  பொருளின் சூழல், சக்தி,    சிக்கனமும்  வலியுறுத்தப்பட்டது

இவையெல்லாம்  பசுமைப் புரட்சியின் பின் விளைவுகளாகவும்  பார்க்கப்பட்டது .

வேளாண்மை  உற்பத்தியைப் பெருக்க பயிர்செய்கை நுட்பங்கள்  இந்திய சுதந்திரத்திற்கு பின் வெகுவாக நடைமுறைக்கு வந்தன. அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது. பல மூன்றாம் உலக நாடுகளில் வறுமை, பட்டினி சாவு நாட்களில் புதுமைப் புரட்சி முன்நின்றது .

உயர் மகசூல் வகைகள் உருவாயின . தீவிர விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லிகள் தந்த உபாயம் பூச்சி மேலாண்மை வரைக்கும் சென்றது . பசுமைப் புரட்சி,  பூச்சிக்கொல்லி,  கலப்பு நைட்ரஜன் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு  பாரங்களை ஏற்றின ஐம்பெரும் பூதங்களும் கேடுகள் என  வந்துவிட்டன.இயகை விவசாய் இடுபொருட்கள், உரங்கள் போன்றவை ரசாயன உரங்களை விட விலையில் குறைவே . ஆனால் உழைப்பு சற்று அதிகமே. சரியான இயற்கை  வேளாண்மை சார்ந்த புரிதல் இருந்தால் வேளாண்மைத் தொழிலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.. பல விவசாயிகள் இரசாயனஉரங்களால் வரும்  புற்று நோயால் அவதிப்பட்டு கொண்டே அத்தொழிலைச் செய்வதும் ஒரு முக்கிய கோணம்

நுகர்வோர் அணுகுமுறைக்குச் சவாலாய் தினப்படி வாழ்க்கை அமைந்துவிட்டது.  நுகர்வோரின் வாங்கும் சக்தி என்பது அவரின் பொ ருளாதார நிலை,  சமூகநிலை,  அவரின் மனநிலை சார்ந்த விவசாயிகளால் கட்டமைக்கப்பட்டது.

பசுமை வியாபாரம் என்பது இன்று உலக அளவிலான  ஒரு விசயமாகி ஆகிவிட்டது. இதை  வற்புறுத்தும்,  கடைபிடிக்கும் நாடுகளில் இந்தியா,  இங்கிலாந்து,  தாய்லாந்து ஆஸ்திரேலியா,  கனடா,  சீனா போன்றவை முன்னிலையில் உள்ளன .

அவை முத்திரையிடப்படுதல்  அல்லது எக்கோ லேபிளிங்கில்  கவனம் செலுத்துகின்றன. இந்த முத்திரை பசுமை வியாபாரத்திற்கு முக்கியம் தவறாத்தாகிவிட்டது .முத்திரைகள் மூலம் பலரின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது.  சுற்றுச்சூழல்,  உடல்நிலை, இயற்கை விடயங்களை கவனத்தில் கொண்டு பசுமை வியாபாரம் நுகர்வோருக்கும் முக்கியமானதாகி விட்டது.

மாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டில் உள்ள காலி இடங்களில் காய்கறிகளை விளைவித்தல் என்பது எளிமையான இதன் செயல் வடிவங்கள்தான்.. நேரம் வசதி உள்ளவர்களுக்கு இவையெல்லாம் கை கூடும். கொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்று நோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது. ஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும் அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன. எங்கள் வீட்டு மாடிவீட்டுத்தோட்டக்காய்கறிகள் இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு மாற்றாக பலரின் பார்வையில் படுவது குறித்த மகிழ்ச்சி எனக்குண்டு.

கறி திங்கறது சைனாக்காரன் கைகழுவறது நாம “

என்று வசவு பாடி நழுவாமல் மாடி வீட்டுத்தோட்டம் பற்றி விசாலமாய் நினைத்துப் பார்க்கலாம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 05 April 2020 23:43  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


 

பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can




வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி