1. சுந்தரின் 'கொரோனா' கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)

கொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று 'நூலகம்' தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'சிரித்திரன் சித்திரக்கொத்து' நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.

தற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.

இந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.

படத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் "தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்கின்றார்.

முதியவர் கூறுவதை ""தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்" என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்

சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்


2. சிரித்திரன் சுந்தரின் சிரிக்க சிந்திக்க வைக்கும் இன்னுமொரு கேலிச்சித்திரம்.

இங்குள்ள கேலிச்சித்திரத்தில் மணமக்களை வாழ்த்திப் பரிசு கொடுக்கும் முதியவர் "இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .பாலுக்குத் தட்டுப்பாடான காலமிது" என்கின்றார்.

இதற்குப் பதிலாக அந்த முதியவர் ""இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .'பாத்ரூம் டிஸ்யு'க்குத் தட்டுப்பாடான காலமிது" என்று கூறினால் எப்படியிருக்குமென்று சிந்தனையோடுகிறதே படத்திலிருப்பதும் தோற்றத்தில் 'பாத்ரூம் டிஸ்யு' மாதிரித்தான் தெரிகிறதே

சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்


3. சிரிக்க சிந்திக்க சுந்தரின் கேலிச்சித்திரமொன்று.

தற்போதுள்ள சூழலில் பரவி வரும் சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை நினைக்கையில் இன்றும் சூழலுக்கு பொருந்தும் சுந்தரின் கேலிச்சித்திரம் என் கவனத்தை ஈர்த்தது.

சிரிக்க சிந்திக்க சுந்தரின் கேலிச்சித்திரமொன்று.  தற்போதுள்ள சூழலில் பரவி வரும் சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை நினைக்கையில் இன்றும் சூழலுக்கு பொருந்தும் சுந்தரின் கேலிச்சித்திரம் என் கவனத்தை ஈர்த்தது.


4.  இங்குள்ள சுந்தரின் மைனர் மச்சான் கேலிச்சித்திர உரையாடலை இப்படி மாற்றினால் எப்படி?

லேடி: "வழக்கமாக் கை கொடுப்பீங்கள். இதென்ன கூத்து! மைனரும் எலெக்‌ஷன் கெண்டெஸ்ட் பண்றதா/"

மைனர் மச்சான்: "ஹி! ஹி! கண்டறியாத கொரோனா வந்தாலும் வந்துது. கைகளையும் தனிமைப்படுத்திட்டாங்களே."
இங்குள்ள சுந்தரின் மைனர் மச்சான் கேலிச்சித்திர உரையாடலை இப்படி மாற்றினால் எப்படி? :-)  லேடி: "வழக்கமாக் கை கொடுப்பீங்கள். இதென்ன கூத்து! மைனரும் எலெக்‌ஷன் கெண்டெஸ்ட் பண்றதா/"  மைனர் மச்சான்: "ஹி! ஹி! கண்டறியாத கொரோனா வந்தாலும் வந்துது. கைகளையும் தனிமைப்படுத்திட்டாங்களே."
5. மேலும் சில சுந்தரின் கேலிச்சித்திரங்கள்
சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்
சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்
சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R