ஜெயகாந்தன்எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்?' என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது' தொடக்கம், 'தினமணிக்கதிர்ர்' சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். 'தினமணிக்கதிர்' சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்திட்டாரு', 'பிணக்கு', 'டிரெடில்' என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. 'ரிஷி மூலம்' குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ''அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் 'காவல் தெய்வம்' என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து 'கருணையினால் அல்ல' குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து 'வாழ்க்கை அழைக்கிறது' நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.

இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான 'யாருக்காக அழுதான்?', 'உன்னைப்போல் ஒருவன்' ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'. கோபுலுவின் ஓவியங்களுடன் அது தொடராக வெளியானபோதே விரும்பி வாசித்து, முடிந்ததும் பைண்டு செய்து வைத்திருந்தேன். நாட்டுச் சூழலில் எல்லாவற்றையும் இழந்திருந்த நிலையில் , மீண்டும் அதே ஓவியங்களை உள்ளடக்கிய பதிப்பாகக் காலச்சுவடு வெளியிட்டிருந்தது வரபிரசாதமாக வந்தமைந்தது. அந்நாவலில் அனைத்துப் பாத்திரங்களும் நினைவில் நிற்கும் வகையில் அற்புதமாகப் படைத்திருப்பார் ஜெயகாந்தன். மானுட உணர்வுகளையெல்லாம் நன்கு அவதானித்து அந்நாவலில் வெளிப்படுத்தியிருப்பார் ஜெயகாந்தன். பொதுவாக ஊருக்கு ஹிப்பி போன்ற மனிதர் ஒருவர் வந்தால் சிறுவர்களாகிய நாம் வியப்புடன், விடுப்புப் பார்ப்போம். அவர்களுடன் உரையாடுகையில் பெருமிதப்பட்டுக்கொள்வோம். வெட்கப்பட்டுக்கொள்வோம். இவ்வகையான உணர்வுகளையெல்லாம் அந்நாவலில் ஹென்றியை முதன் முதலில் காணும் ஏனைய பாத்திரங்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள்.

அவற்றையெல்லாம் மிகவும் சிறப்பாக, உயிர்த்துடிப்புடன் படைத்திருப்பார் ஜெயகாந்தன். அவற்றை உயிரோவியங்களாகப் படைத்திருப்பார் ஓவியர் கோபுலு. மறக்க முடியாத நாவல். இப்பொழுதும் அவ்வப்போது நாவலையெடுத்துப் பிரித்துச் சில பக்கங்களை வாசித்தாலே, கோபுலுவின் ஓவியங்களைப் பார்த்தாலே இன்பமாகவிருக்கும்.

இன்று தற்செயலாக யு டியூப் காணொளியொன்றில் எழுத்தாளர் பவா செல்லத்தரையின் மேற்படி ' ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' காணொளியை பார்த்தேன்; கேட்டேன். சிறப்பாக, சுவையாக அந்நாவல் பற்றிய தனது கருத்துகளை, எண்ணங்களை, கூடவே ஜெயகாந்தனின் ஆளுமை பற்றித் தான் அறிந்த அனுபவங்களையெல்லாம் மேற்படி காணொளியில் பகிர்ந்து கொண்டிருக்கின்றார் பவா செல்லத்துரை. நாவலை வாசித்தவர்களுக்கு இக்காணொளி மீண்டும் அது பற்றி நனவிடை தோய வைக்கும். வாசிக்க விரும்பும் எவருக்கும் நல்லதோர் அறிமுகமாகவிருக்கும். சில இடங்களில் நாவலில் வரும் பாத்திரப்படைப்புகள் பற்றிக் குறிப்பிடுகையில் பவா செல்லத்துரையின் குரல் தளும்பியது அவர் எவ்வளவு தூரம் நாவலை நுண்மையாக, உள்ளாழ்ந்து வாசித்துள்ளார் என்பதை அறியத்தருகின்றது.

நாவல் பற்றிய அவரது விபரிப்பு எவ்விதம் ஜெயகாந்தனின் ஆளுமை அவரது இந் நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களிலும் பிரதிபலிக்கின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றது. இக்காணொளியில் அவர் கூறிய ஒரு விடயம் என் கவனத்தைக் கவர்ந்தது. ' தான் எவ்விதம் வாழ வேண்டுமென்று விரும்பினாரோ அப்பாத்திரமே ஹென்றி. தான் எவ்விதம் வாழ்ந்தாரோ அப்பாத்திரமே ஹென்றியின் உறவினனும், லாரி டிரைவருமான துரைக்கண்ணு' என்று பவா செல்லத்துரை கூறியதையே குறிப்பிடுகின்றேன். மேற்படி காணொளி மீண்டுமொருமுறை நாவலையெடுத்துப் புரட்டிப்பார்க்க வைத்துவிட்டதுடன், ஜெயகாந்தன் பற்றியும் சிந்திக்க வைத்துவிட்டது. உண்மையில் ஜெயகாந்தனின் மேற்படி நாவல் உலக இலக்கியத்துக்குள் வைத்து எண்ணப்படும் சிறந்ததொரு நாவல்.

மேற்படி காணொளியில் ஜெயகாந்தனுக்கும் , நடிகர் சந்திரபாபுவுக்குமிடையிலான நட்பு பற்றிக் குறிப்பிடுகையில் ஜெயகாந்தன் கூறியதாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுகின்றார் பவா செல்லத்துரை. அது சந்திரபாபுவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் அது. அதை ஜெயகாந்தனே கூறியதாகக் குறிப்பிடுகின்றார் பவா செல்லத்துரை. ஆனால் நடிகர் சந்திரபாபு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு பின்வருமாறு கூறுகின்றதே:

"சந்திரபாபுவின் தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார். "

கல்லூரிப் படிப்பு படித்த சந்திரபாபுவுக்கு எவ்விதம் எழுத, வாசிக்கத்தெரியாமலிருக்க முடியும்? அது ஜெயகாந்தன் வேடிக்கைக்காகக் கூறியதாகவிருக்க வேண்டும்?

எழுத்தாளர் பவா செல்லத்துரையின் காணொளிக்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=iZuiK19ciCo


ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலுக்காக, ஓவியர் கோபுலு வரைந்த ஓவியங்கள் சில:


 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R