இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988  ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019)  சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House - Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின்  தலைமையில் நடைபெறும்.

இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.

2018 – 2019  காலப்பகுதிக்கான ஆண்டறிக்கை - நிதியறிக்கை என்பனவும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கை மலையகத்தில்  வறுமைக்கோட்டில் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், அவர்கள் தொடர்பான தகவல் அமர்வும்  காணொளிக்காட்சியும் இக்கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் வருகை தருமாறு கல்வி நிதியம் அன்புடன் அழைக்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு:

முருகபூபதி ( தலைவர் )0416 625 766
திவானா கிருஷ்ணமூர்த்தி    ( செயலாளர்)          0402 034 152
வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா ( நிதிச்செயலாளர்)   0404 808 250
விமல் அரவிந்தன் ( துணை நிதிச்செயலாளர் ) 0414 446 796

இணையத்தளம்: www.csefund.org
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R