ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:
கால வெள்ளத்தில் கரையாமல் நிலைத்து நிற்கின்ற செம்மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்று.பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளம் உடையதாய் இருப்பதோடு புதுமைக்கும் புதுமையாய் காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தோடும் உள்ளடக்கத்தோடும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழி ஆகும்.

நிழற்புலி கனிச்சி மணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புழை சுழற்கடவுள் தான்தான்

என்று கம்பரும் 'ஆதிசிவன் பெற்றான் அகத்தியன் எனை வளர்த்தான் 'என்று பாரதியும் தமிழ் மொழியின் பிறப்பை அநாதியான இறைவனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். அத்தகு பேறு பெற்ற தமிழ் மொழியின் பக்திப் பனுவல்களான தேவார திருவாசக திவ்ய பிரபந்தப் பாடல்கள் தமிழோடு பக்தியும் மரபும் இசையும் ஒன்றுக்கொன்று விஞ்சும் அளவிற்குப் பாடப்பட்டுள்ளன.

ஆய்வு எல்லை:
பாவைப் பாடல்களில் மரபும் இசையும் என்ற இக்கட்டுரை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் ஆண்டாள் அருளிய திருப்பாவையையுமே ஆய்வு எல்லையாகக் கொண்டு அமைகிறது.

ஆய்வு நோக்கம் :
திராவிட மொழிகளில் தொன்மையானது தமிழ் மொழி. கால மாற்றத்தால் தம்மைப் புதுப்பிக்கும் வகையில் பல புத்திலக்கிய வடிவங்களைப் பெற்றது. அதில் பக்தி இலக்கிய வடிவமும் ஒன்றாகும். மனிதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடும் நிலை மாற்றமடைந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடிய பாடல்களே பக்திப் பாடல்கள். இவை நம் பழந்தமிழர்களின் நம்பிக்கையையும் வழிபடும் மரபையும் இறைவனை அடைவதற்கு இசை ஒரு ஊடகமாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பக்தி:
இறைவனின் மீது அடியவர்கள் கொண்டிருக்கிற திட விசுவாசமே பக்தி. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதும,; மனம், மொழி, மெய்களால் இறையை வழிபடுவதும் பக்தி என்று ஆழ்வார்களும் நாயன்மார்களும் தான் அருளிய செயல்பாடுகளிலே எடுத்துரைக்கின்றனர். சைவம், வைணவம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்று ஆதிசங்கரர் இறை வழிபாட்டிற்குரிய சமயங்களை ஆறு(6) வகையாகக் கூறுகிறார். அவற்;றில் சிவபெருமானை வழிபடக் கூடியவர்கள் சைவர்கள் என்றும், அவர்களின் வழிபாட்டு நூல் பன்னிரு திருமுறைகள் என்றும் திருமாலை வழிபடக் கூடியவர்கள் வைணவர்கள் என்றும் அவர்களின் வழிபடும் நூல் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு உயிர் அல்லது ஆன்மா இறைவனை அடைவதே அதன் இறுதி நிலையாகும். அதனை நாயன்மார்கள் பதியாகிய இறைவனை அடைய பசுவாகிய ஆன்மா பாசம் என்கிற ஆணவம், கன்மம,; மாயை என்பவற்றைக் கடந்தே அடைய முடியும் என்று கூறுகிறார்கள்.

செல்வமே சிவபெருமானே உன்னைச் சிக்கெனப் பிடித்;தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே

என்கிறது மாணிக்கவாசகம். ஆழ்வார்களோ பக்தி, பிரபத்தி என்பனவற்றை எடுத்துக்காட்டி சரணாகதி தர்மத்தை தம் பாசுரங்களில் போற்றியுள்ளனர். இறைவனை நாம் எவ்வாறு பக்தி செய்ய வேண்டும் என்பதை 'தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் என்றும் அவ்வாறு வழிபடுவதனால் கிடைக்கும் பலனை 'தீயினால் தூசாகும்' என்று நம் தீவினைகள் யாவும் தீயிலிட்ட தூசுகள் போல அழியும் என்கிறாள் ஆண்டாள்.

விடியற்காலை எழுதல்:
இந்தியா ஒரு விவசாய நாடு. அதில் அதிகாலையில் எழுவதே பணி செய்வதற்கு ஏற்றதாகும். அதிகாலை எழுதல் நம் தமிழ் மரபு. 'கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறு வீடு மேய்வான் பறந்தன காண்' என்று ஆண்டாளும் 'கோழிச் சிலம்ப சிலம்பும் குருகும் எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்''என்று மாணிக்கவாசகரும் கதிரவன் கிழக்கு திசையில் உதிப்பதும்; கோழி, குருகு முதலிய பறவைகள் எழுப்பும் சத்தத்தையும் அதிகாலையில எழுப்பப்படும் சங்கின் ஒலியையும் குறிப்பிடுகிறார். தேவர்களின் விடியற்காலைப்பொழுதே நம் மார்கழி மாதம் ஆகும். அதனால் தான் மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்குரிய மாதமாகிறது. அறிவியல் கூற்றுப்படி அதிகாலை நேரம் உயிர் வாயு எங்கும் பரவி இருப்பதால் அந்நேரத்தில் மனிதர்கள் துயில் எழுந்து குளத்தில் நீராடி தம்; பணிகளை செவ்வெனே செய்வதற்கு உரியதாகிறது. ஆரோக்கியத்திற்கும் அடிகோலுகிறது.

பாவை நோன்பு:
நம் முன்னோர்கள் தாம் விரும்பிய கணவனை அடையும் பொருட்டும் நல்ல கணவனை அடையும் பொருட்டும் பாவை நோன்பு இருந்து வழிபட்டனர். சங்ககால தை நீராடல், தைப்பாவை நோன்பு என்ற மரபு சிறிது மாற்றம் பெற்று பக்தி இலக்கிய காலத்தில் மார்கழி நோன்பாக வழிபடப்பட்டது. மண்ணாலும், மரத்தாலும் பாவை உருவம் செய்து வழிபடுவது பாவை நோன்பு. அந்நோன்பு நடைபெற்ற இடம் பாவைக் களம் என்றழைக்கப்பட்டது. ஆனால் பக்தி இலக்கிய காலத்தில் இறைவனையே கணவனாக அடைய வேண்டும் என்று நோன்புகள் மேற்கொள்ளப்பட்டதை ஆழ்வார்; பாசுரங்களும், மாணிக்கவாசகர் பாசுரங்களும் தெரிவிக்கின்றன.

நாட்குறித்தல்:
எந்த ஒரு நற்செயலையும் செய்வதற்கு முன்பே அதற்கேற்ற நல்ல நாள் பார்ப்பது நம் மரபு. போருக்குச் செல்கின்ற அரசனும் பரணி நாளை உரியதாகப் பார்த்தலும் உன்னம் பார்த்தலும் நம் மரபாகப் புறத்தினை இலக்கியப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.  அவ்வகையில் பாவை நோன்புக்குரிய நாளான மார்கழி மாதப் பௌர்ணமி நாளைக்; குறிப்பிட்டு இந்நோன்பு யாரைக் குறித்துச் செய்யப்படுகிறது என்பதையும்

'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்
--------------------------------- ----------------------------------
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்''

என்றும் அவர்களின் மகனான கண்ணனைக் கொண்டு நோன்பு நிகழ்த்துவதாக ஆண்டாளும்   

'விண்ணுக்கு ஒரு மருந்தே
வேதவிழுப் பொருளே கண்ணுக்கு கினியானைப்பாடி
கசிந்து உள்ளுக்கு நின்று உருகு யாம் மாட்டோம்.''

என்று மாணிக்கவாசகரும் குறிப்பிடுகிறார்.

ஓளி மழை வழிபாடு:
கற்கால மனிதன் தான் எவற்றைக் கண்டெல்;லாம் அச்சமுற்றானோ அவற்றையெல்லாம் வழிபடு பொருளாக்கி வழிபாடு செய்தான். அவ்வகையில் தோன்றிய வழிபாடு தனக்கு வாழ்வாதாரத்தை அளித்த இயற்கையின் மீதும் நன்றி செலுத்தும் விதமாகவும் வளர்ச்சியுற்றது.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று சூரிய வழிபாடும்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று சந்திர வழிபாடும்
மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்  என்று மழை வழிபாடும்   

இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. மாணிக்கவாசகர் சிவபெருமானை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியாய்க் காண்கிறார். ஆண்டாள் ஆழியுள் புக்கு முகர்ந்து....ஊழி முதல்வன் போல் மெய் கருத்து வாழ....உலகினில் பெய்திடாய்; என்று மழையாக திருமாலைக் காண்கிறாள்.

அடியவர்க்கு எளியவன் :
வானே நிலனே பிறவே அறிவு அறிதல் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டு அருளும் என்று இறைவன் தேவர்களால் அறிய முடியாதவனாக இருப்பினும் அடியவர்களுக்கு எளிமையாய் அடையும் தன்மை உடையவனாய் இருக்கின்றான். அதனால் தான் சங்கப் புலவர்கள் அரசனைக் குறிப்பிடும் பொழுது 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்று இறை நிலைக்கு உயர்த்திப் பாடினர்.

ஈகை:
நம் தமிழ் விழுமியங்களுள் அறமும் , ஈகையும், விருந்தோம்;பலும் தலைசார்ந்தது. பக்தியிலே ஈடுபட்டவர்கள் தாம் விரதம் இருப்பினும் அடுத்தவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வெனே செய்ய வேண்டும். ஐயமும் பிச்சையும் அந்தனையும் கைகாட்டி என்று தான தர்மங்களைச் செய்வதையும் மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்;ந்தேலோர் என்று இறைவனை அடைந்த பிறகு நோன்பின் நோக்கம் நிறைவேறிய உடன் கூடியிருந்து உண்டதனைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். இவை

காக்கைக் கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.

என்ற திருக்குறள் கருத்துக்கு செயல் வடிவம் பெற்றுள்ளன.

இசை:
இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மிக நேர்த்தியான அழகு பொருந்திய ஒலி ஆகும். இசை என்ற சொல்லுக்கு 'இசையவைப்பது, வயப்படுத்துவது, ஆட்கொள்வது என்று பல பொருள்களைக் குறிப்பிடுகிறார் தண்டபாணி தேசிகர்.'இசை என்பது ஒலி. ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது அறுவகைச் சமயங்களும் உணர்த்துகின்ற மெய்ஞானம் ஆகும். இவ் உலகமே ஒங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பது இந்து மத தத்துவங்களில் ஒன்று, இசை என்ற சொல்லுக்கு பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், அறிஞர்களும் பல பொருள்களைத் தந்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது ஒலியும் ஒசையும் ஒன்றா என்று பார்த்தோமேயானால் இரண்டும் வௌ;வேறு என்பதற்கு, 'ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே' என சிவபெருமானைப் பற்றிக் குறிப்பிடும் திருநாவுக்கரசரின் தேவார வரிகள் சான்றாகின்றன.

இசை பல்வேறு வகையான பரிணாமங்களைக் கொண்டு மிகச்சிறந்த வளர்ச்சியை உலகெங்கிலும் அடைந்திருக்கின்றது. இருப்பினும் இந்திய இசை காலத்தால் மிகப் பழமையானது. இந்திய இசை தனி இசையை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது. இந்திய இசையின் இராக அமைப்பு பகைச் சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம் பகைச் சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப்பண்கள். தேவாரத்திற்கு இசையமைத்த பெருமை திருநீலகண்ட யாழ்ப்பாணரையேச் சாரும். அவையே எண்ணற்ற இராகங்களுக்கு ஆதாரமாய் இருந்திருக்கின்றன என்றால் மிகையில்லை.   ;ஆய கலை அறுபத்து நான்கனுள் இசைக்கலை மக்கள் உள்ளத்தில் கால எல்லையைக் கடந்து அழியாத நிலைபெற்று சமுதாயத்தை உயர்த்துவது ஆகும்.

திருவெம்பாவையில் மிடற்று இசையை
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் என்றும்

சித்தம் அழகியார் பாடரோ நான் நாம் சிவனை என்றும்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உருகி உள்ளம். என்றும்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும் என்றும்
சீலமும் பாடி சிவனே சிவனே

என்றும் பாடல்; தொழிலைக் குறிப்பிடுவதிலிருந்து இறைவனை அடையும் நெறியாக இசை இருந்திருப்பது புலனாகிறது. மிடற்று இசை மட்டும் அல்லாமல் யாழ், பறை, வீணை ,தண்ணும்மை போன்ற இசைக்கருவிகளும் சங்கு ஊதுதலும் இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது. இறைவன் ஏழிசையாய் இசைப்பயனாய் இருக்கிறான் என்ற சமயக் குரவர்கள்; மற்றும் ஆழ்வார்களின் கூற்று மிகவும் பொருத்தமுடையது என்பது வெள்ளிடை மலை.

முடிவுரை:
தமிழர்களின் வாழ்வியல் முறை சார்ந்த மதிப்புகள் எண்ணற்றவையாக இருப்பினும் பக்திப் பனுவல்களான திருப்பாவை, திருவெம்பாவையில் காணப்படும் தமிழர்தம் பக்தியையும் அதை அடியொற்றிய மரபுசார் வழிபாட்டையும் இசைச் சிறப்பையும் மேற்கண்ட இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

பார்வை நூல்கள்:
ஆண்டாள் - திருப்பாவை
மாணிக்கவாசகர் - திருவெம்பாவை
சி. சுப்பிரமணியம் -  சங்க இலக்கியம் சில பார்வைகள்;
டாக்டர் மு.வரதராசனார் - இலக்கிய வரலாறு      

* கட்டுரையாளர்: முனைவர் க. ராஜேஷ்,  பேராசிரியர்; குரலிசை, இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R