- சுப்ரபாரதிமணியன் -“ தாய்மொழி தாய்ப்பால் போன்றது. நல்ல சுயசிந்தனையை  உருவாக்கும், வாழக்கையை உயர்த்தும். இன்றைக்கு வளரினப்பருவத்தினரின் போக்கும் நடவடிக்கைகளும் கவலை அளிக்கின்றன. அவர்கள் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இலக்கியப்புத்தக வாசிப்பு இருக்கும் என்பதை இளையதலைமுறையினர் உணர வேண்டும். குழந்தைகளைத் தொழிலாளியாக மாற்றும் சமூகம் அநாகரீகமானது.திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலையை பின்னலாடைத்துறையில்  உருவாக்க வேண்டும். அது முக்கிய சமூகப்பணியாக இருக்கும்” என்று தி . வெ. விஜயகுமார் ( குழந்தைக் கல்வி இயக்குனர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இயக்குனர் ) பேசினார்  

* செப்டம்பர்     மாதக்கூட்டம் ...1/9/19 ஞாயிறு மாலை.5 மணி. பனியன்  தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல்  எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூர் நடந்தது.,

நூல்கள் வெளியீடு :
* சுப்ரபாரதிமணியன் தொகுத்த ” . ஓ.. சிங்கப்பூர்”  நூலை பேரா.கோகிலச்செல்வி வெளியிட குறும்பட இயக்குனர்கள் தீபன், ஜெயப்பிரகாஷ் பெற்றுக் கொண்டனர்.

* கோவை தெ.வி.விஜயகுமாரின் “ குழந்தைப்பருவத்து நினைவுகள் ‘’நூலை சேவ் பிரான்சிஸ் வெளியிட விஜயா பெற்றுக்கொண்டார்.

* சி.ந சந்திரசேகரனின் “  அம்பேத்கருடன் ஒரு நேர்காணல் “நூலை வேனில் கிருஷ்ணமூர்த்தி வெளியிட கோவை மாணிக்கம் பெற்றுக்கொண்டார்.

* பாராட்டு : வி டி சுப்ரமணியன் அவர்களுக்கு – (   திரைப்படசங்கம் , கலை இலக்கியச் செயல்பாடுகள் )
* வே.சுந்தரகணேசன் அவர்களுக்கு ( ஓலைச்சுவடி பாதுகாப்பும், அவற்றின் புத்தகப்பதிப்பித்தலும் ) அளிக்கப்பட்டது.
* திருப்பூர் குறும்பட விருதுகள் 2019 வழங்குதல் நடைபெற்றது

விருது பெற்றோர் : துசோ பிரபாகர், ரா.தீபன், தி. ஜெயப்பிரகாஷ், ரா.ரமேஷ், இரா.சின்ராசு.. கோவை முஸ்தபா உரை. எஸ்பிபி பாஸ்கரன் இயக்கி வெளிவரத் தயாராக உ்ள்ள பிள்ளையார்புரம் இன்ஷா அல்லா திரைப்படம். பற்றி. .இது தோப்பில் மீரான் அவர்களின் கதை

* மற்றும்...பாடல்கள்  , கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  துருவன் பாலா, துசோபிரபாகர், கதிர்வேல், அருணாசலம் வழங்கினர் ..

தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )

மாத செய்தி மடல் வெளியீடு : தோழர்  இரா.சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )

செய்தி : சண்முகம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488

புகைப்படம்  : குறும்பட பரிசளிப்பு : சுப்ரபாரதிமணீயன் பரிசு அளித்தார். பிஆர் நடராஜன் தலைமை .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R