பிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்பிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். இந்தி படவுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆளுமையை தேவ் ஆனந்த் செலுத்தியிருந்தார். அவரது திரைப்பட வாழ்க்கை 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் பல தசாப்தங்களுக்கு இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட நடிகர்-இயக்குநராக தேவ் ஆனந்த் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டு நவ்கேதன் எனும் தனது சொந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் 35 க்கும் மேலான படங்களை அவர் தயாரித்திருந்தார். இந்தி பட உலகில் இன்று பிரபலமாக இருக்கும் பலர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் திரைப்பட ஆய்வாளரும் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன். தேவ் ஆனந்த் அவர்களின் நடிப்பின் இலக்கணம், இந்தி சினிமா கதாநயகனுக்கே உரித்தான கவர்ச்சி மற்றும் இளமைத் துடிப்புடன் கூடிய நடிப்புதான் என்றும் கூறுகிறார் தியோடர் பாஸ்கரன்.

“ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” என்று நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் இணையதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“உங்களுக்கு பிரியாவிடை சொல்வது வருத்தமாகவுள்ளது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ரஷ்டி கூறியுள்ளார்.

சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

தேவ் ஆனந்த நடித்த, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன் கதையான தி கைட் மற்றும் டாக்ஸி டிரைவர் போன்ற படங்கள் அவரின் நடிப்புக்கு சான்றாக உள்ளன எனவும் திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தேவ் ஆனந்த நடித்த, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன் கதையான தி கைட் மற்றும் டாக்ஸி டிரைவர் போன்ற படங்கள் அவரின் நடிப்புக்கு சான்றாக உள்ளன எனவும் திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

1. Dev Anand: Forever & Ever 

2. Dev Anand - Madhubala

3. Dev Anand - Waheeda Rehman

4. Dev Anand - Waheeda Rehman - Guide

நன்றி: http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2011/12/111204_devanand_dead.shtm


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R