பெண்ணின் முதன்மைக் கடமைஇந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா? பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உருவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப்  பேணிப்பாதுகாக்க முடியும்.

ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.

சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.

பெண் தன் உடலை சரியாகப் பேணிக் காத்தால் மட்டுமே தன்னைச் சார்ந்தவர்களையும் அவள் வாழும் காலம் வரை பாதுகாக்க முடியும். அது மட்டுமல்ல, தன்னுடைய முதுமைக் காலத்தில் யாரையும் சிரமப்படுத்தாமல் தற்சார்பு கொண்டவளாக வாழ முடியும்.

மனித உடல் அமைப்பு

நம் முதுகெலும்பு ஒரே எலும்பால் ஆனதல்ல. அது 33 சிறு எலும்புகளின் கூட்டமைப்பு. இந்த எலும்புகள் கழுத்தில் இருந்து இடுப்புக்குக் கீழ் வரை நீண்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு நடுவில் மிருதுவான திசுவால் ஆன வட்டுக்கள் இருக்கும். இந்த வட்டுக்கள் தண்டுவடத்தில் இருந்து முதுகெலும்புகள் வழியாக மற்ற உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகள் அழுத்தம் அடையாமல் பாதுகாக்கின்றன.

மொத்த முதுகெலும்புகளில் பெண்களுக்கு அதிகப் பாதிப்பிற்கு ஆளாவது மார்புக் கூட்டுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையே உள்ள எலும்புகள் தான். ஏனெனில் வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளின் கணமும் நேரடியாக அந்த எலும்புகளைப் பாதிக்க அதிகமான வாய்ப்புள்ளது. பெண்களைப் பொருத்த வரை வயிற்றின் தசைகள் கர்ப்ப காலத்தில் மிகவும் தளர்ந்து விடுகின்றன. குழந்தை பெற்ற பின்னர் முறையான பராமரிப்பும் உடற்பயிற்சியும் உணவுப் பழக்கமும் இல்லாமல் போனால் வயிறு பெருத்து விடும். பெருத்த வயிற்றின் கனமும் அழுத்தமும் முதுகெலும்பில் தாக்கும். கர்ப்ப காலத்திலும் வயிறு விரிவடைகிறது. அப்போது வயிற்றின் தசைகளும் தசை நார்களும் வலுவிழந்தும் விடுகின்றன. கர்ப்ப வயிற்றின் கனமும் முதுகெலும்பை முன்னோக்கி இழுக்கும். அப்பொழுது முதுகெலும்பு வட்டுக்கள் அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. நரம்புகள் எலும்புகளுக்கு இடையில் நசுக்கப் படுகின்றன. இதனாலேயே முதுகு வலியும் நசுக்கப்படும் நரம்புகள் பாயும் கால்களிலும் வலி ஏற்படுகிறது.

இவ்வாறு பெண்ணின் உடல் நலம் புறக்கணிக்கப்படும்போது அவள் வாழ்க்கை முழுவதும் வலியுடன் வாழ நேரிடுகிறது. பெண் தனது நலத்தைக் குறித்து சிந்திப்பது சுயநலம் அன்று, அது அவளது உரிமை என்ற பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும். உலகமயமாதலின் விளைவாகப் பெண் உலகம் முழுவதும் பயணிக்கிறாள். கல்வி, வேலைவாய்ப்பு, அறிவு எனப் பல தளங்களிலும் அவளால் பிற நாட்டவரை விஞ்ச முடிகிறது. ஆனால் நூற்றாண்டுகளாக அவள் குருதியில் கலந்து விட்ட 'தன்னைப் புறக்கணிக்கும் குணம்' பெரிய அளவில் மாறவில்லை என்பதைக் கூறும்போது மனம் வருந்துகிறது. பெண்களே... தயவுசெய்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பெண்ணின் மூலமாகத் தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். தன்னைப் பராமரிப்பது அப்படி ஒன்றும் தேசியக் குற்றம் அல்ல.

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  
சொற் காத்துச் சோர்விலாள் பெண் "

என்றுதான் வள்ளுவரும் கூறி இருக்கிறார். பெண் காக்க வேண்டிய பொறுப்புகளில் அவர் முதன்மையாக வைப்பது அவளைத்தான். தனது நலம் குறித்துச் சிந்திப்பது, தன்னைக் காத்துக் கொள்வது தான் பெண்ணின் முதன்மைக் கடமை. பெண்ணே... செய்வாய் தானே???

கட்டுரையாளர் :

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R