-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.முன்னுரை
மானிடப்பிறவியில் மகத்துவம் வாய்ந்த பிறவியாகச் சிறப்புடன் கூறப்பட்டு,காலங்காலமாய் கண்ணைக்காக்கும் இமைபோல, இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் பெண்மை போற்றத்தக்கது. போற்றுதற்குரிய பெண்மையைச் செவ்விலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகமும் புறமும்

சங்ககால மக்களின் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாகச் சான்றோர் பாகுபடுத்தினர். இதில் அகமாக அமைவது வீடு; புறமாக அமைவது நாடு எனக் கொள்ளலாம். காதலும் வீரமும் எனக் குறிப்பிடினும் சாலப் பொருந்தும். வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்ற முதுமொழியை கூர்மதி கொண்டு காணும் போது, பெண்மை சிறந்தால் ஆண்மை சிறக்கும் என்பதை உணரலாம். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து, நன்மக்களைப் பெற்று, சுற்றந்தழுவி, அறம் பல செய்து வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கருதி வாழ்ந்தனர்.

“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை”
“ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்”

என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டால் அறியலாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரி, நிகர்,சமானம் என்ற மூன்று வார்த்தைகளில் ஆணித்தரமாக பதிவேற்றிய நிலை மனங்கொளத்தக்கது.

மனை விளக்கு
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெறினும் மனைக்குத் தேவையான மனைவியைப் பெறாதவனாயின் அவன் வாழ்வு சிறப்படையாது. இருளை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய விளக்குப் போல மனைக்குரியவளாக மனைவி திகழ்கின்றாள்.

“ மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை             
நடுகல் பிறங்கிய உவல்இடு……”
(புறம் - 314)

“ மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே…..”
(நான்மணிக்கடிகை- 105)

மேற்கூறிய பாடல்கள் வீட்டிற்குத் தேவையானவள் மனைவி என்பதைப் பெருமையுடன் கூறியுள்ளன. மனைவி இருந்தால்தான் அது மனை என்பதை செவ்விலக்கியங்கள் செம்மையாக உணர்த்தியுள்ளன. “தாயோடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
………………………………………………….
பொன்தாலியோடு  எல்லாம் போம்.”
(தனிப்பாடல் திரட்டு)

பாங்குடன் உணவு ஊட்டும் தாய் மறைந்ததும் அறுசுவை உணவு கிடைப்பது அரிதாகிவிடும், தந்தை மறைந்ததும் கல்விப்பயிற்சி இல்லாமல் போய்விடும், ஒருவன் பெற்ற செல்வம் பிள்ளைச் செல்வம் இல்லையாயின் நிலைபெறாது அழிந்து விடும், சிறப்பாக வாழும் வாழ்க்கை உறவுகள் இல்லாத போது விலகிவிடும், உடன் பிறந்தவர்கள் இல்லாத போது தோள்வலிமை இல்லாமல் போய்விடும், இவையனைத்தையும் விட மனைவி இறந்தால் எல்லாமே போய்விடும். இப்பாடலின் வழி தாய் முதலியோர் நீங்கின் ஒவ்வொரு நன்மைதான் நீங்கும், ஆனால் மனைவி இறப்பின் எல்லா நலங்களும் நீங்கும் என்னும் நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.

புறநானூற்றில் இடம்பெறும் பாடலொன்றில், புலவர் பிசிராந்தையார் ஆண்டுகள் பலவானாலும் தான் இளமையோடு வாழ்வதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
……………………………………………….”
(புறம் - 191)

தன் வாழ்வு செம்மையாக அமைவதற்கு மாட்சிமை மிகுந்த மனைவி, அறிவு நிரம்பிய மக்கள்;;;,சிறந்த ஏவலாளர்,அறத்தோடு ஆட்சி செய்யும் அரசன்… எனப் பல காரணங்களைக் கூறியுள்ளார். ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையாக அமைந்தது மாட்சிமையுடைய மனைவி எனப் புலவர் தெளிவுபடுத்தியுள்ள திறம் பெண்ணின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தனக்கென வாழாது  கணவன், பிள்ளைகள் என வாழும் பெண்மை மானிட சக்தியில் தனிப்பெறும் சக்தியாக விளங்குகிறது. பெண்ணின் பெருமை எனும் நூலில் “ அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும்.” என்ற திரு.வி.கல்யாணசுந்தரனாரின் கூற்று பெண்மைச் சக்திக்கு வலுசேர்க்கிறது. கட்டுக் கோப்பான ஆளுமைத் தன்மையுடன் முழுமனதோடு செயலாற்றும் பெண்ணின் திறம் அளவிட முடியாது.

பெண்ணறமே இல்லறம்
வினைசெய்து பொருள் பெற்று இல்லத்திற்குத் தரும் கடமை ஆணிற்கு உண்டு. பொருளை வரவிற்கேற்ற முறையில் பயன்படுத்தி இல்லத்தைக் காக்கும் பொறுப்புணர்ச்சி இல்லாளாகிய மனைவிக்கே உண்டு. இல்லத்தை முழுமையாக ஆளும் தன்மை கொண்டவள் பெண் என்னும் கருத்தை ஒளவையார் தன் பாடலில் பதிவு செய்துள்ளார்.

“ இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின்-------------------
(வாக்குண்டாம்-21)

வீட்டில் மனைவியிருக்கும்போது எப்பொருள் இல்லையாயினும் இருப்பதாகவே உணர்வு அமையும். மனைவி இல்லாத நிலையில் எல்லாப் பொருள்களும் இருந்தாலும் இல்லாததாகிவிடும் என்ற ஒளவையாரின் பாடல் கருத்து மனங்கொள்ளத்தக்கது.

“ தையலை உயர்வு செய்”
( புதிய ஆத்திச்சூடி)

மேற்கண்ட அடியின் வாயிலாக பெண்னை உயர்வுபடுத்த வேண்டுமென பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.

உடம்பின்றி உயிர் இயங்க முடியாது, அதே போன்று உயிரின்றி உடல் இயங்க இயலாது. இக்கூற்றை வள்ளுவப் பெருந்தகை வாழ்வியலோடு பொருத்திக் கூறியுள்ளார்.

“ உடம்பொடு உயிரிடை யென்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு”
(குறள்-1122;)

ஓர் ஆண் பெண்ணோடு கொள்ளும் நட்பானது , உடல் உயிரோடு கொள்ளும் நட்பு எனும் குறட்பாவின் வழி பெண்ணை ஆணின் உயிரெனக் கருதிய உளப்பாங்கினை உணர முடிகின்றது.

“  நீறு இல்லா நெற்றி பாழ் நெய் இல்லா உண்டி பாழ்
ஆறு இல்லா ஊருக்கு அழகுபாழ் பாழே மாறில்
உடன் பிறப்பு இல்லா உடம்பு பாழ்  பாழே
மடக்கொடி இல்லா மனை ”
( நல்வழி-24)

திருநீறு அணியாத நெற்றியும், நெய்யில்லாத உணவும், நதியில்லா ஊரும், உடன்பிறப்பு இல்லாத பிறப்பும், மனைவி இல்லாத வீடும் சிறப்படையாது என்னும் கருத்தில் அமைந்துள்ள பாடலின் மூலம் மனைவியெனும் மடந்தையின் மாண்பை உணரலாம்.

“ அவனியிலே ஒருவனுக்கு மனைவி யின்றேல்
அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
…………………………………………..
நானிலத்தில் மார்தட்டும் ஆட வர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்க தான
சூட்சமும் பெண்களிடம் அமைந்த தன்றோ!”
( பாவேந்தர் பாரதிதாசன்)

உலகத்தில் ஒருவனுக்கு மனைவியில்லாமல் போனால் , அவனடையும் தீமையை யாரும் அறியமாட்டார்கள். ஆண்களுக்கு ஏற்படும் துன்பங்களை விலக்குபவர்கள் பெண்கள். நல்ல வாழ்க்கையினை ஆண்கள் வாழ்வதற்கான சூட்சமம் பெண்களிடம் அமைந்துள்ளதாகப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார்.

பதர் வாழ்க்கை

தன் மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் பிறகு அவளைத் திரும்பிப் பாராதவன் பதராவான். அதேபோல், தன் மனைவியை வீட்டிலே வைத்துவிட்டு, பிறருடைய மனைவியை நாடி அடுத்தவர் வீட்டிற்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதரே எனப் பின்வரும் பாடல்கள் உணர்த்துகின்றன.

“ தன் மனையாளைத் தாய்மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே”
-    (வெற்றி வேற்கை-69)
“ தன் மனையாளைத் தனிமனை இருத்திப்
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே”
(வெற்றி வேற்கை-70)

மனைவியைப் பிரிந்து, அவள் வருந்த வாழ்பவன் எக்காலத்திலும் நன்னிலை எய்த முடியாது என்பதை பதர் என்ற உவமையின் வாயிலாக விளக்கியுள்ளதை உணரமுடிகின்றது.

“ வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம் ”
( உலகநீதி- 04)

மனைவியோடு கூடிவாழும் வாழ்க்கையே வளமான வாழ்க்கை. அவ்வாறு கூடி வாழாமல் பிற பெண்களை விரும்பி, தன் மனைவியின் மீது குற்றம் சுமத்தி வாழக்கூடாது எனச் சான்றோர் குறிப்பிட்டுள்ள திறம் ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆகும்.\

மக்கட்பேணல்
இல்லறவாழ்வில் இனிமையை உருவாக்கும் தன்மை பெண்களுக்கே உண்டு. படைப்பின் வாயிலாக உயிர்களைத் தோற்றுவிக்கும் இறைவன் தொழிலைப் பெண்ணினம் மேற்கொண்டு வருதல் கண்கூடு. ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு செல்வங்கள் இருப்பினும்,அஃது உண்மையான செல்வங்கள் ஆகா. பிள்ளைச் செல்வமே பெறற்கரிய செல்வம். இச்செல்வத்தை உருவாக்கித்தரும் தனித்தன்மை பெண்ணினத்திற்கே உண்டு.

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே”
( புறம்-312)

என்ற புலவர் பொன்முடியாரின் பாடல் பிள்ளையைப் பெற்றுத்தருதல் பெண்ணின் கடன் எனக் குறிப்பிட்டுள்ளது.

“ அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”
(குறள்- 64)

தம்முடைய மக்களின் சிறுகைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்த்தை விட இனிமையுடையதாகும். இத்தகைய பிள்ளைப்பேறு பெண்மையின் அடையாளமாக விளங்குகிறது. நம்நாட்டில் வறுமையும் வளமையும் ஒருங்கே இருந்தன. இருப்பினும் பொருட்செல்வம் பணக்காரனுக்கு வாய்க்கிறது, பிள்ளைச்செல்வம் ஏழைக்கு வாய்க்கிறது.
புலவர் பெருஞ்சித்திரனாரின் மனைவி பிள்ளைகளுக்கு உணவிட முடியாமல்  வருந்துகிறாள். வறுமையால் வாடிய புலவர் குமணனைச் சந்திக்கச் செல்கிறார்.குமணனிடம் வறுமையை எடுத்துக்கூறி பரிசில்பெற விழைகிறார்.அப்பாட்டில் பிள்ளைகளைப் பேண ஒருதாய் எவ்விதம் பரிதவிக்கிறாள் என்பது வெளிப்பட்டுள்ளது.

“புல்லுளைக் குடுமிப் புதல்வன்,பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன், பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ,ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து, அழக்கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியங்காட்டியும்,
நொந்தனள் ஆகி…………………”
(புறம்-160)

வறுமையால் தாயின் மார்பகம் வற்றியது. அறியாப்பிள்ளை சோற்றுக்காக அலைந்தது, சோறும் இல்லை. இந்நிலையில் குழந்தை பசியால் அழுதது. அழுகையை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதி முயற்சியாக மறப்புலி பற்றிக்கூறியும், நிலவைக்காட்டியும் பார்த்தாள். இம்முயற்சியும் தோல்வி. உன் தந்தை வந்தால் எப்படி கோபம் கொள்வாய் காட்டு என்கிறாள் தாய். வறுமையில் பிள்ளையின் பசியைப்போக்க ஒரு தாய் துயர்படும் நிலையை மேற்கண்ட பாடல் விளக்கியுள்ளது.

முடிவுரை
பெண்மை என்னும் பெரும்பேறு உலகிற்கு நல்வழி காட்டும் நற்பேறு என்னும் நற்செய்திகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. செவ்விலக்கியங்கள் பெண்களின் பெருமைகளைப் பாடியுள்ள திறத்தின் வழி பெண்மையின் உன்னதத்தை உணரலாம்.

குறிப்புதவி நூல்கள்
1. புறநானூறு- புலியூர்க்கேசிகன் உரை
2. நீதி நூல்கள் - துரை- தண்டபாணி உரை
3. திருக்குறள்- மு.வரதராசனார் உரை
4. பாரதியார் பாடல்கள்
5. பாரதிதாசன் பாடல்கள்
6. தனிப்பாடல் திரட்டு- கலைச்செல்வி (தொகுத்துரை ஆசிரியர்)
7. பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத்துணை- திரு.வி.கல்யாணசுந்தரனார்

Email Id: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - -  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R