- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.Ed., (நெல்லை.,வீரவநல்லூர்) -

உ.வே.சா,   தமிழ்த்தாத்தா  ஆகும்  முன்பே
உயர்தொண்டு  நாவலரும்  தாமோ  தரரும்
தேவையென்று  அருந்தமிழில்  வளர்த்துக்  காத்த
செந்தமிழின்  நூலகத்தை  எரித்தார்  யாழில்..!
சோவாரித்  தமிங்கிலிசில்   சூறையிட்டார்
சுதந்திரமாய்  மொழிக்கொலையும்  செய்திட்  டாரே..!
நாவார  நாணமின்றி  தமிழில்  சொல்வார்
நம்தமிழ்க்கும்  அமுதென்று  பேரும்  உண்டே..!

காடுவெட்டி   நிலந்திருத்தி  வளத்தை  ஆக்கும்
கையுடைய  தமிழரின்று  கைகால்  அற்றார்
கூடுவிட்டு  உயிர்பிரிந்தார்  வலைஞர்  மக்கள்
கொண்டவழி  தப்பினோரைச்  சுட்டுக்  கொன்றார்
கேடுகெட்ட  இந்தியத்தில்  தமிழர்  தம்மை
கிறுக்கரென்றே  நினைக்கின்றார்  அவரை  மாற்ற
பாடுபடும்  கூட்டமின்று  சிதறிப்  போச்சே…                   
பைந்தமிழ்க்கு அமுதென்றுபேரும்ஆச்சே…!

கேரளத்தில்  ஆந்திரத்தில்  குடகில்  இன்று
கேடுதன்னைச்   செய்தார்கள்   தமிழர்  மீதே
யாருமிங்கு  கேட்பதற்கு  நாதி  யில்லை..,
யாவருமே  ஏமாந்தோம் ;   வா(ழ்)க்கை  விற்றோம்..!
ஓர்மையுடன்  ஒன்றுபட்டால்  உயர்வே  உண்டு…
ஓங்கிடும்பார்  தமிழுணர்வு   அயர்வை  வென்று...!
சீர்பெறவே  புத்துலகு  சமைப்போம்  நாளை….
செந்தமிழை  அமுது  என்போம்  அந்தவேளை..!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R