நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறுஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.

எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.

ஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.

எனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன். பல நூல்களையும் சில பல்கலைக்கழக உரைகளையும் கேட்டு வரலாற்றை அறிந்துகொண்டாலும், அவை கைமண்ணளவு என்பது புரிந்தது. என் மனதில் எகிப்தை நினைவில் வைத்திருப்பதற்காக இருந்த ஒரே வழி நான் பார்த்த வரலாற்றுச் சின்னங்களையும் அவை எனக்குள் எழுப்பிய மனக்கிளர்ச்சிகளையும் பதிவுசெய்வதுதான். இது ஒரு வரலாற்று நூல் அல்ல. அத்துடன் வெறுமனே பயண அனுபவமும் இல்லை. இரண்டும் கலந்தது. திரைப்படங்களுக்கு படத்தின் சிறுபகுதியை காண்பிப்பதுபோல (Movie clips trailer). இந்த நூல் எகிப்திய வரலாற்றை அறிந்து கொள்ளவோ அல்லது எகிப்திற்கு செல்ல விரும்புபவரது ஆவலைத்துண்டும் விதமாக அமையவேண்டும் என்பதே எனது நோக்கம்.

நான் இணையத்தில் எழுதும்போது எழுத்துக்களை சரிபார்த்து ஆலோசனை தந்த எழுத்தாளர் முருகபூபதிக்கும், பதிவுகள் இணையத்தில் பிரசுரித்த நண்பர் கிரிதரனுக்கும் மேலும் எனது எகிப்திய அனுபவங்களை படித்து ஆலோசனைகள் தந்த எழுத்தாளர் P A கிருஸ்ணன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. இதைப் பதிப்பிக்க முன்வந்த எதிர் வெளியீட்டிற்கும் அதற்கு ஆவனசெய்த கவிஞர் கருணாகரனுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்

எகிப்தில் மிகவும் நெருக்கடி நிலைவரம் இருந்த காலகட்டத்தில் என்னுடன் பயணம் செய்த அன்பு நண்பன் துரைசிங்கம் இரவீந்திரராஜூக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R