கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.1. அனாதையாகி விடுவேன்......

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!

வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......

நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்

2. அவள் என் எழில் அழகி

அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!

இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!

ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!

உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!

ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!

எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!

3. நகை சுவை

நான் அருகில் வரும்போது
வல்லினம் -போல்
முறைத்துப்பார்க்கிறாய்

தூரச்சென்றதும் திரும்பி பார்த்து
மெல்லினம் -போல்
கையை அசைக்கிறாய்.

நானோ....
அந்த இரண்டுக்கும் நடுவில்
இடையினமாக.......
திணறிக்கொண்டு இருக்கிறேன் ..!

4.ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R