- *நம்மாழ்வார் ஐயா இயற்கை எய்துவதற்கு சில நாட்கள் முன்பு அவரைப் பற்றி முகம் இதழின் பொங்கல் மலரில் – ஜனவரி 2014 - எழுதப்பட்ட கட்டுரை. இக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். அவருக்கு எமது நன்றி. - பதிவுகள்- 
 
நம்மாழ்வார் இயற்கையை நேசிக்கிற, இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகிற, இயற்கை விவசாய விஞ்ஞானி. இவரைத் தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் நன்கறியும். தமிழகத்தில் இயற்கை விவசாய இயக்கத்தைத் தோற்றுவித்தல்; பிற மாநிலங்களுக் கும் சென்று இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் இருக்கின்ற இயற்கை விவசாய அமைப்புகளும் இவரை நன்கறியும். இவர் தனி மனிதரல்லர். இவர் ஓர் இயக்கம். தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரின் கால் படாத இடமில்லை. அவ்வாறே கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்!பசுமைக்குமார்நம்மாழ்வார் இயற்கையை நேசிக்கிற, இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகிற, இயற்கை விவசாய விஞ்ஞானி. இவரைத் தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் நன்கறியும். தமிழகத்தில் இயற்கை விவசாய இயக்கத்தைத் தோற்றுவித்தல்; பிற மாநிலங்களுக் கும் சென்று இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் இருக்கின்ற இயற்கை விவசாய அமைப்புகளும் இவரை நன்கறியும். இவர் தனி மனிதரல்லர். இவர் ஓர் இயக்கம். தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரின் கால் படாத இடமில்லை. அவ்வாறே கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்!  விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை என்று கிராம மக்களி டம் எடுத்துக்கூறுகிறார். ஆண்டு முழுவதும் விவசாய நிலங்களைப் பார்வையிடுவது, ஆலோசனைகளை வழங்கு வது, விவசாயக் கூட்டங்களில் பங்கு பெறுவது, இயற்கை விவசாயத் தொண்டு நிறுவனங் களுக்கு வழிகாட்டுவது, அவற்றை ஓரணியில் திரட்டுவது, மாநகரங்களிலும் பிற மாநிலங்க ளிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது என ஓய்வ றியா உழைப்பு இவருக்குச் சொந்தமானது.

‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலின் மூலம் உலக விவசாயிகள், விவசாய அறிஞர்கள் மத்தியில் புரட்சிகர விவசாய சிந்தனையை உருவாக்கிய ஜப்பானிய விவசாய அறிஞர்கள் மசானோபு ஃபுகுவோக்கா, இந்திய நெல் வேளாண் விஞ்ஞானி டாக்டர் ரிச்சாரியா, பாஸ்கர் சாவே, கால்காணி வேளாண்மை என்ற கருத்தைத் தந்த தபோல்கர், சுரேஷ் தேசாய், பெங்களூர் நாராயண ரெட்டி எனப் பல இயற்கை விவசாய விஞ்ஞானி களை தமிழ் மக்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர் கோ.நம்மாழ்வார். இவரது வழி காட்டலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை விவசாயிகள் உருவாகி, வெற்றிகரமாக இயற்கை விவசாயம் நடத்திவருகின்றனர். இயற்கை விவசாயிகள் இலாபகரமாக, நஷ்டமின்றி விவசாயம் செய்ய முடிகிறது. இரசாயனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மட்டுமே கடன் வலைக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கின்றனர்.
 
தஞ்சை மாவட்டத்தில் இளங்காடு என்னும் ஊரில் திருவாளர் கோவிந்தசாமி-திருவாட்டி ரெங்கநாயகி இணையோருக்குப் பிறந்தவர். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அண்ணாமலை பல்கலை [சிதம்பரம்] வேளாண் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டுகளில் பி.எஸ். சி விவசாயம் பயின்றவர். கோவில்பட்டியில் ஓர் ஆய்வுப் பண்ணையில் இவருக்கு வேலை கிடைத்தது. அது ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆய்வுப்பண்ணை. 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாயப் பண்ணை அது. அங்கே பணியாற்றிய போது இவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. 1969ஆம் ஆண்டுவரை ஆறு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தார். அங்கே நடைபெற்ற ஆய்வுகளால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

இரசாயன நஞ்சுகளை விவசாயத்துறையில் பயன்படுத்துவதால் ஏற்படும் சீரழிவுகளைக் கண்டு இவரால் தொடர்ந்து அங்கே பணியில் ஈடுபட இயலவில்லை. பின்னர், அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்தார்.

இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி மேடைகளில் கூறுவார். தருமபுரி மாவட்ட மக்கள் விடுகதை போடுவதில் வல்லவர்கள். இவரிடமும் ஒரு விடுகதை போட்டார்களாம்!

காயான பிறகு பூவாவது எது?

பழமான பிறகு காயாவது எது?

இரண்டாவது கேள்விக்கு எலுமிச்சை என்பதே விடை!

எலுமிச்சம் பழத்தை உப்புச் சேர்த்து விஅத்தால் காயாகிறது. ஊறுகாய் கெட்டியாக இருப்ப தனால் தான் அது காய். பழம் எப்படி கெட்டியாகிறது? உப்பைப் போட்டு வைத்தால் நுண் ணுயிர் செயல்படாமல் தடுத்துவிடுகிறது. அவ்வாறே உப்பை நிலத்தில் கொட்டக் கொட்ட விவசாய நிலத்தில் நுண்ணுயிரோட்டம் இல்லாமல் போகிறது. இந்த விடுகதை தந்த சிந்தனை இவர் உள்ளத்தில் தீப்பொறியாகி இன்று தீப்பிழம்பாகி சுடர்நீட்டம் பெற்றுள்ளது.

உலகப்போர் காலத்தில் துப்பாக்கியில் பயன்படுத்தக் கண்டறியப்பட்ட வெடியுப்பு, பின்னர் போர் முடிந்த பிறகு பல்வேறு இரசாயன உரங்களாக வடிவம் எடுத்து உண்மையில் வயலில் உள்ள அனைத்து நுண்ணுயிர்களையும் கொல்லும் ‘பூச்சிக்கொல்லி ஆகிவிட்டது!. பூச்சி மருந்து என்பது வியாபாரத் தந்திரம்! விஷத்தை மருந்தென்று கூறி, இந்திய விவசாயிகளின் மூளையை சலவை செய்துவிட்டார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருபவர் நம்மாழ்வார்!

இவர் காட்சிக்கு எளியவர். கடுஞ்சொல் பேசாதவர். ஓதுவார், தொழுவார் எல்லாம் உழுவார் தலைகடையிலே. உலகம் நடப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே எனும் வள்ளுவர் பொன்மொழியை விவசாயிகளுக்கும் பிறருக்கும் உணர்த்துவதில் முன்னணியில் இருக்கிறார்.
’ஏரோட்டும் ஏழை இதயம் குமுறினால், போராட்டம் எழும்’ எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் குரலைப் புரிந்துகொண்டு, விவசாயிகளைத் திரட்டி, போராட்டக் களம் பல கண்டவர் நம்மாழ்வார்.

2000ஆவது ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் வேப்பமர உரிமையை தன்னுடையது என்று கூறி அமெரிக்கா நம்ம ஊர் வேப்பமரத்தை விழுங்கப் பார்த்த போது, புகழ் பெற்ற இந்திய இயற்கை விவசாய சுற்றுச்சூழல் போராளி வந்தனா சிவா போன்றோருடன் வெளி நாடு சென்று போராட்டங்கள் நிகழ்த்தி, தமிழக வேம்பின் சிறப்பை இலக்கியச் சான்றுக ளுடன் நிறுவி, வேப்ப மரம் தொடர்பான அனைத்து உரிமைகளும் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றத் தீர்ப்பை பெற்றவர் நம்மாழ்வார்.
 
இந்தப் போராட்டத்தின் வெற்றி பற்றி, ’உழவும் தொழிலும்’ என்னும் இயற்கை விவசாய இதழ் [இக்கட்டுரையாளர் பசுமைக்குமார் நடத்திய இதழ்] எழுதிய கட்டுரையில் ’இவர் நம்மாழ்வார் அல்ல, வேம்பாழ்வார்!’ என்று பாராட்டப்பெற்றார். இயற்கை வேளாண்மை மூலம் பசுமை விளைச்சல் பெருக, நோயற்ற வாழ்வை மக்கள் பெற தன் வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் திருப்பணி தொடர நாமெல்லோரும் நேரிய பங்காற்றுவோம்.

இயற்கை விவசாயம் என்பது_

•இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, நஞ்சுகளைப் பயன்படுத்தாத விவசாயம்!
•ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி முதலியவற்றின் எருக்களைப் பயன்படுத்துவது!
•பயிர் சுழற்சி முறை மூலம் பல தானிய சாகுபடி செய்வது!
•பசுந்தாள் உரம் பயன்படுத்துவது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

•விவசாயிகள் இரசாயன உரம், பூச்சிகொல்லி நஞ்சுகளைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக இயற்கை உரங்களையும், மூலிகை பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும்.
•இயற்கை விவசாயத்தை சிறப்பாகச் செய்ய, கால்நடை வலர்ப்பு அவசியம். மர வளர்ப்பும் முக்கியமானது.
•ஒற்றை நாட்டு நடவு அதிக மகசூல் தரும். பஞ்சகவ்யா, நவகவ்யா, மூலிகை கரைசல் போன்றவை பயிர் பாதுகாப்புக்கு அவசியம்.
•பூச்சி தாக்காத பாரம்பரிய ரகங்களைப் பயிர்செய்ய வேண்டும். மண்ணை வளப்படுத்த வேண்டும்.
•நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிடுவார்கள்.


தோழர் பசுமைக்குமாரைத் தெரிந்துகொள்வோம்!
 
பசுமைக்குமார்தோழர் பசுமைக்குமார்பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், ஆவணப்பட இயக்குனர், சமூக சிந்தனையாளர். இதுவரை எழுத்தாக் கங்களும், மொழிபெயர்ப்புகளுமாய் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் பல நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாகப் பிரசுரமாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனந்தவிகடன், நக்கீரன் போன்ற வேறு பல பதிப்பகங்களும் இவரது எழுத்தாக்கங்களை தொடர்ந்த ரீதியில் பிரசு ரித்துவருகின்றன. .சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான ஜோதி விநாயகம் அறக்கட்டளை விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, தமிழ்நாடு அரசின் விருது ஆகியவை இவர் பெற்றுள்ள சில விருதுகள். தென்னிந்திய சார்லி சாப்ளின் என்.எஸ்.கிருஷ்ணன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், சென்னைக் கடற்கரையைக் காப்போம், தேர்தல் 2001 போன்ற ஆவணப் படங்களையும், சில குறும்படங்களையும் எடுத்துள்ளார். மார்க்ஸிய ஒளி, சோவியத் நாடு, புதுப்புனல், ஜனசக்தி, விவசாயி, உழவும் தொழிலும், தினமணி என பல இதழ்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராகத் திறம்படப் பணியாற்றியவர்.ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் வேறு ஒன்றிரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களிலும் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு.
       
தற்சமயம் ‘ஃப்ரீலேன்ஸ்’ பத்திரிகையாளராகவும், ஆவணப்பட இயக்குன ராகவும் இயங்கி வரும் திரு.பசுமைக்குமார் சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைப் பற்றி எழுதி ஜனவரி 2014 முகம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை திரு. நம்மாழ்வாரின் அரும் பணிகளை நினைவுகூரும் விதமாய் இங்கே தரப்பட்டுள்ளது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R