பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது!

E-mail Print PDF

பொதுத்தகவல்
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா  4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது.  விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.

கட்டற்ற உரிமம்
விக்கிப்பீடியாவானது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்னும் தனிச் சிறப்பைக் கொண்டுள்ளது. தமிழ்ச் சூழலில் இந்தக் கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழ் மக்களில் பலருக்கு இன்னமும் கணினி, இணையத்தின் பரவலான பயன்பாடு கிடைக்கவில்லை. அந்நிலையில், கட்டற்ற உரிமம் கொண்ட இத்தகையதொரு எண்மிய வடிவத்திலான கலைக்களஞ்சியத்தின் தேவை அதிகமாகின்றது. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை எவரும் பதிப்புரிமைச் சிக்கலின்றி, இலவசமாகவே  பயன்படுத்திக் கொள்ளலாம்.  இங்குள்ள உள்ளடக்கத்தைப் பிரதி செய்யவோ, மீளமைக்கவோ, திருத்தியமைக்கவோ அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படுகின்றது.

தமிழ் விக்கிப்பீடியா உருவாக்குநர்
செப்டம்பர் 30 ஆம் நாள், 2013 இல் தமிழ் விக்கிப்பீடியா 10 வயதை எட்டிப் பிடிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்பத்திற்கு முதலில் வித்திட்டவர், தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் கட்டடக்கலைஞராக தொழில் புரிந்து வரும் மயூரநாதன் என்பவரே. இவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான சரியான இடைமுகத்தை 2003 நவம்பர் மாதத்தில் உருவாக்கினார். மயூரநாதன் அவர்கள் இலங்கையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க முயன்ற சிலர், தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்காமல், ஒரு சில தொகுப்புக்களுடன் நிறுத்திவிட்டாலும், மயூரநாதன் அவர்கள் தமிழரினதும், தமிழ் மொழியினதும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மனதில் கொண்டு இந்தக் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் தமது தொடர்ந்த பங்களிப்பை முனைப்புடன் வழங்கி வருவதுடன், தமிழ் விக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை இடையறாது செய்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் இவரது பல வகையான பங்களிப்புக்களுடன், இவர் தொடங்கி வைத்த கட்டுரைகள் மட்டுமே 3770 ஐத் தொட்டுள்ளது.

விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா
இந்தப் பத்தாண்டு காலத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் 55,600 க்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாகியுள்ளன. கட்டுரைகள் தவிர படிமங்கள், வார்ப்புருக்களுக்கான பக்கங்களும் உள்ளன. கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், மொழிகளின் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா 61 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அதிக தகவல் செறிவான கட்டுரைகள், தரமான கட்டுரைகள் என நோக்கின், தமிழ் விக்கிப்பீடியா பல படிகள் மேலேயே நிற்பதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் 20 இடத்திற்குள் இருக்கும் தமிழ், கட்டுரை எண்ணிக்கை அடிப்படையிலும் மேலேறி வரவேண்டும் என்பதே தமிழ் விக்கிச் சமூகத்தின் ஆவலாகும்.

தமிழ் விக்கிப் பயனர்கள்
தமிழ் விக்கியில் 55,600 க்கு மேற்பட்ட பதிவு செய்த பயனர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் கிட்டத்தட்ட 275 பயனர்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பயனர்களாக உள்ளனர். விக்கிப் பயனர்கள் கட்டுரை உருவாக்கம், படிமங்கள் பதிவேற்றல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால் திருத்தங்கள் செய்தல், கட்டுரைகளில் உள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் இணைத்தல், கட்டுரைகளுக்கு படிமங்களை இணைத்தல், பகுப்புக்கள் உருவாக்கல், துப்புரவாக்கப் பணி என்று பல்வேறு விதத்தில் தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்களவு பயனர்களும், கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, மலேசியா, இந்தோனேசியா, ஹொங்கோங், ஐக்கிய அரபு அமீரகம்,  போன்ற இடங்களில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலரும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 11 வயதான சிறுவர் தொடக்கம், 77 வயதான பெரியவர் வரை தமிழ் விக்கியில் பங்களிப்பது சிறப்பான ஒன்றாகும். ஆனாலும் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விக்கிப்பீடியாவின் பயனர்கள் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு,  விளையாட்டு, வேளாண்மை, தமிழ், கலை, புவியியல், பொறியியல், மருத்துவம், பண்பாடு, நபர்கள் என்று பல்வேறு துறைகளில் கட்டுரைகளை உருவாக்கி வருகின்றனர்.

தமிழ் விக்கியின் செயற்பாடுகள்
தமிழ் விக்கிப்பீடியாவானது ஏற்கனவே ஒரு கட்டுரைப்போட்டியையும், ஒரு ஊடகப்போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி, அதில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் மூலம் பலருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி வைத்ததுடன், வெவ்வேறு இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்பியவர்களுக்கு உதவியும் வந்துள்ளது. தமிழ் விக்கியின் இந்த பத்தாண்டு நிறைவை நினைவு கொள்ளும் முகமாக தமிழ் விக்கிச் சமூகம் பல்வேறு ஒழுங்குகள் செய்து வருகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப்போட்டி, ஊடகங்களில் சிறப்பிதழ்கள் வெளியிடல், தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் தயாரித்தல், தமிழ் விக்கியூடகக் கையேடு தயாரித்தல், தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலை வெளியீடு, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடல் என்று பல முன்னெடுப்புகள் நிகழ்கின்றன. பல பத்திரிகைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிட முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடு
விக்கிப்பீடியாவின் பயன்பாடு மிகவும் பரந்தளவில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலராலும் விக்கிப்பீடியா பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விக்கிப்பீடியாவானது கூகிள் இணையத் தேடலில் பொதுவாக முதல் ஐந்து தரவுகளுக்குள் வரும் இணையத்தளமாக இருப்பது ஒரு மிக முக்கியமான விடயமாகும். தமிழ் விக்கிப் பக்கங்களைப் பார்வையிடுவோர் நாளொன்றுக்கு 175,000 க்கு மேல் இருப்பதாகப் புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது. 

தமிழ் விக்கியில் புதிய பங்களிப்பாளர்களின் தேவை
இந்த பத்தாண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியடைந்திருந்தாலும், மேலும் முன்னேறுவதற்கு பல துறைகளில், பல தலைப்புக்களில் கட்டுரைகள் தேவைப்படுகின்றன. சரியாக அமையாத கட்டுரைகளில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. பல குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளன. விக்கிப்பீடியாவானது பல தன்னார்வலர்களால் கூட்டாக இணைந்து தொகுக்கப்படும் இணையக் கலைக்களஞ்சியமாக இருப்பதும், அதனை எவரும் தொகுக்கலாம் என்பதுமே விக்கிப்பீடியாவின் தனிச் சிறப்பாகும். எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம், அதனை  மேலும் வளர்ச்சியடையச் செய்வது தமிழர்களது கடமையாகும்.

ஒவ்வொருவரும், தமக்குத் தெரிந்த விடயங்களை, தமது துறைசார் விடயங்களை இந்தக் கலைக்களஞ்சியத்தில் சேர்த்து வைக்க முடியும். அப்படிச் சேர்க்கப்படும் விடயங்கள் இணையப் பயன்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் தற்போதைய காலகட்டத்தில் நமக்கும், எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எழுதுவதில் ஆர்வமில்லாதவர்கள் கூட, புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவராயின், தாம் எடுக்கும் படங்களை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க முடியும். தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் இன்றே உங்கள் பங்களிப்பை ஆரம்பிக்கலாம். எப்படிப் பங்களிப்பது என்பது அறிந்திராவிட்டால் தமிழ் விக்கிப்பீடியாவில் உதவியை நாடலாம். அங்கே பல உதவிப் பக்கங்கள், தமிழ் விக்கிப்பிடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளன.

ஒவ்வொருவரும் தமது நேரத்தில், கிடைக்கும் சில மணித்துளிகளை தமிழ் விக்கிப் பங்களிப்புக்குப் பயன்படுத்தினாலே போதும். கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு உதவியவர்களாகவும், அதன் வளர்ச்சியில் பங்களித்தவர்களாகவும் இருக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்று சும்மாவா சொன்னார்கள். அறிவே தமிழரின் பலம். அந்த அறிவை நமது சமூகத்திற்கு வழங்கி சமூகத்தைப் பலப்படுத்துவதில் அனைவரும் இணைவோம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இணையமுகவரி ta.wikipedia.org


கலையரசி

கலையரசிகலையரசி நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர். இவர் இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், நோர்வேயில் பேர்கன் பல்கலைக்கழகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கின்றார். தற்போது மருத்துவத் துறையில் நோயியல் ஆய்வு கூடத்திலும், மூலக்கூற்று உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவிலும் பணிபுரிந்து வருகின்றார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்ற இவரது கட்டுரைகள் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும், பொதுவாக அறிவியல் தொடர்பான தலைப்புக்களிலேயே எழுதி வருகின்றார். நோர்வேயில், பேர்கன் நகரில், விக்கிப்பீடியா அறிமுகம், மற்றும் பட்டறை என்பவற்றை ஒழுங்கு செய்து நிகழ்த்தியிருக்கின்றார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி என்பவற்றின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றியிருக்கின்றார்

Last Updated on Sunday, 29 September 2013 15:54  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can


books_amazon




வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி