11.  மலேசியக் கார்

வே.ம.அருச்சுணன் – மலேசியா‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது! இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார்.
        
அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து சாப்பிடும் அழகைப்பார்த்து   இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முடிந்த வரை சுவைமிகுந்த உணவை சமைத்துக் கொடுத்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.
 
“இன்னும் கொஞ்சம் மீகூனைப் போட்டுக் கொள்ளுப்பா.....!”     
 
“போதும்மா.......! போதும்மா......!”

“ஒரு வயசு பிள்ள சாப்பிடுற சாப்பாடா இது.......?”

“கொண்டாப்பா....தட்ட....இன்னும் கொஞ்சம் மீகூனைப்போட்டுத் தர்றேன்...!”

 “ எனக்கு இருப்பது  வயிறா....அல்லது டயரா?”

 “ வீணா.....வழவழன்னு பேசிக்கிட்டு இருக்காதேப்பா!”

 “ சொன்னா கேட்க மாட்டிங்கம்மா....!”

  “ நான் பெற்ற பிள்ள எவ்வளவு சாப்பிடுவானூ எனக்கு  நல்லா தெரியும்.....!  இதோ.....சாப்பிடு.....!” அம்மா தட்டில் அதிகமாகப் போட்டுக் கொடுத்த மீகூனை முகம் சுழித்தபடி சாப்பிடத் தொடங்கினான் பார்த்திபன்!
 
அம்மாவும் மகனும் பேசிக்கொள்வதைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி சுவை மிகுந்த மீகூனை உருசித்து உண்ணுகிறார் தினகரன்.அம்பிகையும் அவர்களோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த வண்ணமாக மீகூனை உண்கிறார்.உண்மையில் அன்று அவர் பிரட்டிய மீகூன் சுவையாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.       
 
“என்னங்க...நான் பிரட்டிய மீகூன் எப்படி இருக்குங்க....?”

“அம்பிகை.....சமைச்சது நீ....! உன்னோட சமையல் என்னைக்குச் சோடைப் போயிருக்கு......குறைச்சி சொல்ல?”

“குறைந்த நேரத்தில நிறைஞ்ச சமையலைச் செஞ்சிருக்கேன் வாயத்திறந்து பாராட்டலாமுல....!” கணவரின் பாராட்டுக்காக ஏக்கமுடன் அவரை பார்க்கிறார் அம்பிகை. 

“மறந்துட்டியா அம்பிகை வர்ர வாரம் பார்த்திபனுக்குப் பிறந்தநாள் என்பதை மறந்து போச்சா....!”

“ஒன்னே ஒன்னு.....கண்ணே.....கண்ணூணு  இருக்கிற நம்ப பையனை எப்படிங்க மறப்பேன்?”

 “நம்ப பையன் பிறந்த நாளுக்கு நீ சமைக்கப் போற சமையலை நாம மட்டுமல்லாமல் என்னோட வேலை செய்யிற நண்பர்கள் சிலரையும் விருந்துக்கு அழைச்சி உன் சமையலைச் சுவைக்கச் சொல்லி அவர்கள் பாராட்டினா நல்லா இருக்குமுனூ நினைக்கிறேன் அம்பிகை நீ என்ன நினைக்கிறே?”  
       
“நான் நினைக்க எனங்க இருக்கு.......அழைச்சிட்டு வாங்க என் திறமையைக் காட்டுறேன்....!”       
                     
“அப்படி சொல்லு அம்பிகை!”                       
           
வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கும் தனது பிறந்தநாள் பற்றிய சிந்தனையில் மூழ்கிப்போகிறான் பார்த்திபன்.      

“பார்த்திபா......உன்னோட நண்பர்களை எல்லாம் பிறந்தநாளுக்கு மறக்காம  வரச்சொல்லுப்பா.....!”

“நிச்சயமாக.....என்னோட நெருங்கிய நண்பர்களை அழைப்பேன். அன்றைய தினம் என்னுடைய எல்லா நண்பர்களையும் நீங்கள் பார்க்கலாம்!”

“சரிப்பா....மொத்தம் எத்தனை நண்பர்கள் வருவாங்கிற எண்ணிக்கையைச் சரியாச் சொல்லிடுப்பா.....! ”     
      
“என்னோடக் கணக்கில ஐம்பது பேரைக் குறிச்சிக்கிங்க......!”

“சரிப்பா.....என்னோடக் கணக்கில இருபத்தைந்து, அப்பா....நண்பர்கள் மொத்தம் ஐம்பத்தைந்து,ஆக மொத்தம் நூறு பேருக்குச் சமையலை நான் தயார்ப் படுத்திடுறேன்!”

“சமையலை நீங்களாச்......செய்யப் போறீங்க.....?” ஆச்சரியமுடன் கேட்கிறான்  பார்த்திபன்.

“பின்ன.....? என் பிள்ளைக்கு நான் செய்யாம...... வேறு யார் செய்யனும்னு சொல்ற....?”

“ ஏம்மா....வீண்சிரமம்.....? பேசாமக் கேட்ரிங்குக்குக் கொடுத்திடலாம்மா!”

“பார்த்திபா.....உனக்கு அந்தக் கவலையே வேண்டாம்....நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்....!”

“உங்க விருப்பம் போல செய்யுங்க....அம்மா!”

“ உனக்கு....என்னென்ன சாப்பாடு வேணும்....உன்னுடைய மெனுவைச் சொல்லிடு.....!”

“நீங்க.....கேட்டது ஒரு வகையில நல்லதாப் போச்சி....!”

“ என்னப்பா.....! நீ என்ன சொல்ல வர்ர தெளிவா....சொல்லிடுப்பா...!”

“ ஒரு...பத்து பேருக்கு சைவச் சாப்பாடு தயார் பண்ணிடுங்க.....!”


12.  பிறந்த நாள்
 
“இவ்வளவுதானே.....!செஞ்சுட்டாப்போது.சைவப்பிரியாணி,சைவக்குமா, சைவமீகூன் பிரட்டல்,நாசிகோரிங்,உருளைக்கிழங்குகட்லட்,பச்சடி இன்னும் பலவித உணவுகளைப் பிரமாதமாச் செஞ்சி அசத்திப்புடுறேன்...!”   
 
“அம்மான்னா......அம்மாதான்....!” இருக்கையிலிருந்து எழுந்து வந்து அம்மாவின் கன்னத்தில் நச்சென்று அழுத்தமுடன் ஒரு முத்தம் கொடுக்கிறான் பார்த்திபன்!
        
சற்றும் இதனை எதிர்பார்க்காத அம்பிகை ஒரு கணம் அதிர்ந்து போகிறார்! தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் மகனிடம்  அடிக்கடிப் பேசாமல் வேலை வேலைன்னு வீட்டில் தங்காமல் வெளியில் இருப்பது எவ்வளவுப் பெரியத் தவறைச் செய்கிறேன் என்பதை முதன் முதலாக உணர்ந்தபோது, அம்பிகையின் கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது.பாசத்துக்காக ஏங்கித்தவிக்கும் மகனின் முகத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது! மனசாட்சி அவரின் மனதை ஈட்டியால் குத்திக் குடைந்தது!
         
மகனின் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி,மகனின் மனதை ஆறுதல் படுத்த எண்ணுகிறார்.அந்நிகழ்வு, தன் கவலைக்கு வடிக்காலாக அமையும் என்று நம்புகிறார்.அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மகனின் பிறந்தநாள் விழாவைப் பற்றியச் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார் அம்பிகை. மூன்றாண்டுக்குள் புதிதாக வாங்கியக்கார் அடிக்கடி பழுது வைத்ததால்
பார்த்திபன் காரை மாற்றும் முடிவைப் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் சம்மதம் கூறிவிட்டனர்!        
 
“ அம்மா.....எனக்கு இந்தக் கார்தான் வேணும்.....!” தன் விருப்பக் கார்களின் படத்தோடு சில விபரங்கள் அடங்கியத் தாட்களை ஆவல் மேலிடக் காட்டுகிறான்.   

“ மலேசியக் கார்தானே......?”

“ நிச்சயமா.....! அழகிய மலேசியக் காரைத்தான் வாங்குவேன். நமது நாட்டுக்காரை நாம வாங்காம வேறு யாரு வாங்கப் போராங்க.... அம்மா?”

“ யுவர் சோய்ஸ் இஸ் தே பெஸ்!  பார்த்திபா! ”

 “ ஐ யாம் ஆல்வேஸ் தே பெஸ்......அம்மா! ” 

 “ நாளை ஞாயிற்றுக் கிழமை அம்மாவுக்கு  ஓய்வுதான்! ”

 “ அப்பா......நாளை உங்களுக்கும் ஓய்வுதானே?”

 “ அப்பாவுக்கும் ஓய்வுதான் நாளையே காரைப் பார்த்துட்டு வருவோம்...!”   
 
வேலையில்  சேர்ந்த, முதல்  மாதத்திலேயே  பெற்றோர், புதிய மலேசிய கார் ஒன்றைப் பார்த்திபனுக்கு  வாங்கிக்  கொடுக்கின்றனர்.அதனால் வேலைக்குச் சென்று வருவதில் அவன் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை!
 
பிறந்த நாளுக்காகப் புதிதாக வந்திருந்த மலேசியக் கார் ஒன்றை வாங்கித் தருவதற்குஏற்கனவேபெற்றோர் உறுதியளித்திருந்தனர்.அதன்படி மூன்றாண்டுகளுக்குப் பிறகு பழையக் காருக்குப் பதிலாகப் புதியக் கார் வாங்க மூவரும் கார் விற்பனை மையத்திற்குச் செல்கின்றர்.
                   
பார்த்திபனுக்குப் பிடித்த ‘வாஜா’ காரை புக் பண்ணுகின்றனர்.பழைய ‘புரட்டோன் சாகா’ காரை நல்ல விலைக்கு விற்பனையாளர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.தனக்குப் பிடித்த நீல நிறக்கார் ஒரு வாரத்தில் பட்டுவாடா செய்யப்படுகிறது. மூன்று ஆண்டு நிறைவானவுடன் தனக்குப் பிடித்தக் கார் வாங்கப்பட்டது பார்த்திபனுக்கு மிகுந்த மகிழ்ச்சி! மனமறிந்து தன் ஆசைகளை நிறைவேற்றிய பெற்றோருக்கு நன்றி கூறுகிறான்!
                   
மறுவாரம் பார்த்திபன் பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளையும் தினகரன் செய்திருந்தார்.அவருடன் பணிபுரியும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.அம்பிகையுடன் பணிபுரியும் சிலரும் சமையல் வேலைகளில் உதவுவதற்காகக் காலையிலேயே வந்திருந்தனர்.மற்றவர்கள் நிகழ்வுக்கு வந்திருந்தனர்.
                 
“ ஹல்லோ......பார்த்திபன் ஹெப்பி பேர்த்திடே டூ யூ......! ”  பரிசு பொருளுடன் வந்த ‘போஸ்’ எடி சோங் பார்த்திபனின் கையைக் குலுக்கிறார்.கோட்டும் சூட்டுமாக வந்து அனைவரையும் அசத்துகிறார்! பார்த்திபன் பணிபுரியும் நிறுவனத்தின் எம்டி அவர்.அவருடன் வந்திருந்த சில பணியாளர்களும் பார்த்திபனுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் கூறி மகிழ்கின்றனர். எம்டியே நேரில் வந்து தன்னை வாழ்த்தியது பார்த்திபனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
 
வேஸ்டி,ஜிப்பா அணிந்து மாப்பிளைக் கோலத்தில் அனைவரையும் அசத்திக் கொண்டிருந்தான் பார்த்திபன்! “பார்த்தி......பக்காயான் டிராடிஷனால் காமு சுக்கோப் சந்தேக்! ஜிப்பா டெங்கான் வேஸ்டி மெமாங் மெனாரிக்...!” நண்பன் மிஸ்புன் சீடேக் பார்த்திபனின் ஜிப்பாவைத் தொட்டுத் தடவியபடி கூறி அகம் மகிழ்கிறான். 
 
“பட்டு வேஸ்டி, ஜிப்பாவில் பார்க்க என் பேரான்டி ரொம்ப அழகா இருக்கான்! என் கண்ணே பட்டுடும் போல.....! என் இராசா....நீ நூறாண்டு வாழனும்.....!” அப்பா பாட்டி பார்த்திபனை உச்சி முகர்கிறார். விழாவுக்குச்சுமார்நூறுவிருந்தினர்கள்வந்திருந்தனர்.அனைவருக்கும் அறுசுவை ததும்பும் உணவுகளை அம்பிகை சிரத்தை எடுத்து தயாரித்திருந்தார்.


13.   திரும்பி வந்தவன்            
 
கோழி பிரியாணி, ஆட்டிறைச்சிப் பிரட்டல்,அதிலும் சைவைக் குருமா ஒட்டு மொத்த விருந்தினர்களையும் சுண்டி இழுத்துவிட்டது. உணவைச் சுவைத்தவர்கள்  அம்பிகையின் சமையலை வானலாவப் புகழ்ந்தனர்.புகழ்ச்சி மழையில் நனைந்த அம்பிகையின் கால்கள் தரையில் நிற்கவில்லை! 
         
“பிறந்தநாள்    விழாவைச்    சிறப்புடன்     செய்ததைப்  பார்த்து பார்த்திபன் முகத்தில் காணப்படும்  மகிழ்ச்சியைப் பார்த்தாயா அம்பிகை?”      

“ நம்ப பிள்ளையாச்சே பார்க்காம இருப்பேனா?” அம்பிகையின் முகம் அன்று மலர்ந்த இரோஜா மலரைப் போல் காணப்படுகிறது! 
         
“ நிகழ்ச்சியின் போது பார்த்திபன் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ஆண்களும் பெண்களும் வந்தார்களே அவர்களின் உடையும் நடையும் பார்த்தீங்களா......! சகிக்கல! அதுல ஒரு பெண் சிவப்பு கலர்ல அரையும் குறையுமா உடை உடுத்திக் கொண்டு பார்திபனைச் சுற்றிச் சுற்றி வந்தாலே.......! எனக்கு அந்தப் பெண்ண கொஞ்சம் கூடப் பிடிக்கல!”
 
“அம்பிகை......உனக்கு அந்தப் பெண்ணப் பிடிக்கலையா அல்லது அவள் அணிந்திருந்த உடையைப் பிடிக்கலையா,தெளிவாச் சொல்லு……?”    
“பொண்ணு பார்க்கச் செக்கச் செவேல்ன்னு மூக்கும் விழியுமா நடிகை தாமணா மாதிரி அழகாக இருக்கா ஆனா, போட்டிருந்த உடைதான் ரொம்பச் செக்ஸியா இருந்துச்சு!”

“அதுல என்ன தப்பு....? இந்த வயசுலப் போடாம நம்பல மாதிரி ஐம்பது வயசுலையா போடச்சொல்ற.....? ”

“ அதுக்குனு.....ஒரு வரம்பு இல்லை.....? என்னதான் காலம் தலைக்கீழ மாறினாலும் நாம இதுவரையிலும் கட்டிக் காத்துவரும் பண்பாடுகளை மறந்திடலாமா.....?” பொறுப்பான அம்மாவாகப் பேசுகிறார் அம்பிகை.

“காலத்துக்கு ஏற்றார் போல,உடைகள் மாறியிருக்கு.....அவ்வளவுதானே! ”

“அந்தப் பொண்ணு உன்னிடம் அண்டி,அண்டின்னு அன்பாதானே பேசுனுச்சி...?”

“அதலாம் சரிதானுங்க.....நம்பப் பையனோட நெருக்கமாப் பழகினாளே.... அதைச் சொன்னேன்!”     
        
“என்ன நீ சுத்தப் பத்தாம்பசலியா.....இருக்கிற? இந்தக் காலத்துப் பிள்ளைகள் அதிர்ஸ்டம் செய்தவர்கள். நம்பக் காலம் மாறிப் போயிடுச்சு! இது அவர்கள் காலம்.இது காலம் செய்யும் கோலம்! அவர்கள் சுதந்திரத்தில நாம கை வைக்க முடியாது! நமக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தா அவளும்தான் மோடனா காலத்துக்கு ஏற்றார் போன்று உடை உடுத்துவா……! அப்ப நாம குறைச் சொல்ல முடியுமா?”  
கணவர் சொல்வதிலும் உண்மை இருந்ததால அம்பிகை பேச்சை மேலும் வளர்க்காமல், மகனைப் பற்றிப் பேசத்தொடங்கினர்.
 
“அது சரிங்க.....நம்ப பையனுக்குக் காலா காலத்தில ஒரு கால் கட்டைப்போட்டுட்டா நமக்கு ஒரு பேரனோ அல்லது பேத்தியோ பிறந்தா கொஞ்சி மகிழலாம் அல்லவா?”

“பையனுக்கு.....இப்பதானே இருபத்தைந்து வயது ஆவுது.....? கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?”

“நமக்கும் வயசாவுது......காலாக் காலத்திலப் பையனுக்குக் கலியாணத்த முடிச்சா நம்ம கடமையும் முடிஞ்ச மாதிரி இருக்குமில்ல?”

“அதுவெல்லாம் சரி……..பையன் இதற்கு ஒத்துக்கனுமே.....?”

“அதற்கு.....நானாச்சிங்க! பார்த்திபனை ஒத்துக்க வைக்கிறது என்னுடைய பொறுப்பு.நீங்க.... இன்றைக்கே ஒரு நல்லப் பெண்ணா பாருங்க!”
“ நம்ம தகுதிக்குப் பெண்ணப் பார்த்தா மகன் ஏற்றுக்குவானா?”

“அந்தக் கவலைய நீங்க விடுங்க.நம்பப் பையன் நாமச் சொல்றததான் கேட்பான், இனியும் கால தாமதம் செய்யாமக் காரியத்தில உடனே இறங்குங்க! கோலாலம்பூர்,பத்துமலை முருகன் அருளால நாம நினைத்தக் காரியம் நிச்சயம் கைக்கூடும்!” அம்பிகை முழு நம்பிக்கையோடு கூற அவளது நம்பிக்கையை ஏன் கெடுப்பானேன்.முருகப் பக்தரான தினகரன் தானும் முருகனை எண்ணி மனமுறுகி வேண்டிக் கொள்கிறார்.   
 
தனக்கும், பேரக்குழந்தைகள் பிறப்பதைத் தினகரன் விரும்புகிறார்.இதுவரையில், அவ்வாறு எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றாலும், அம்பிகையின் வற்புறுத்தலுக்குப் பின் அந்த எண்ணம் வலுவாக மனதில் பூமணம் வீசத்தொடங்கியது!  
 
பிறந்த நாள் விழாவுக்குப் பிறகு, பார்த்திபன் போக்கில் சில மாற்றங்கள் தென்படுவதைக் கண்டு பெற்றோர்கள் அதர்ச்சி அடைகின்றனர். முன்பெல்லாம் பெற்றோருக்கு முன் வீடு திரும்பிவிடும் பார்த்திபன் இப்போது பெற்றோருக்குப் பின் வீடுதிரும்புவதை வழக்கமாக்கிக் கொள்கிறான். அதோடு, இரவுவில் நேரம் கழித்து வீடு திரும்புகிறான்! காரணம் கேட்டால் சரியாகப் பதில் கூறாமல், நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறுகிறான்.
 
அதுவும், வேண்டா வெறுப்பாக......மிகவும் சுருக்கமாகவே பேசுகிறான். வந்தவன் நேராக தன் அறையில் புகுந்து கொள்கிறான். கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் பதில் ஏதும் கூறாமல் குறட்டை விட்டுத் தூங்கிவிடுகிறான்.அதற்கு மேல் அவனிடம் ஏதும் பேசமுடியவில்லை!


14.  மனமாற்றம்
 
காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்!
 
“என்னங்க......பார்த்திபன் இப்படிப் பண்றான்......நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?”

“அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்......?”

“அதற்காக......அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா....?”

“அவசரப்பட வேண்டாம் அம்பிகை, எதையும் பக்குவமாத்தான் கேட்கனும், கொஞ்சம் விட்டுதான் கொடுப்போமே!”

“நாளைக்கு ஏதும் பிரச்சனைனு வந்துட்டா இழப்பு நமக்குதான் என்பதை மறக்காம இருந்தா சரிங்க.....!”

“அம்பிகை, நீ எதுக்கும் பயப்படாதே.....! நடப்பதெல்லாம் நன்மைக்கேனு நினைச்சுக்க!”       
 
மாலையில்  கணவனும்  மனைவியும்  இருவரும் இரவு ஏழு மணிக்கு முன்பதாகவே  இல்லம் திரும்பி விடுகின்றனர். ஆனால்,தன் ஒரே மகன் பார்த்திபன் மட்டும் இன்னும் வீடு திரும்பாமல்   இருந்தது அம்பிகைக்கு  கவலையாக  இருந்தது. அதிலும்  காலையில்  கலக்கி வைத்திருந்த காப்பியும், எடுத்து வைத்திருந்த  ரொட்டியும் அப்படியே இருந்ததைப் பார்த்ததும் அவரதுக் கவலை மேலும் வலுத்தது!
 
சில  எறும்புகள் ரொட்டி சுற்றப்பட்ட பிளாஸ்டிக் உறை மீது ஊர்ந்து கொண்டிருந்தன.சுறுசுறுப்புடன் அவை எதையோ தேடிப் பயணித்துக் கொண்டிருந்தன! மனச் சஞ்சலத்துடன் மேசை மீது  வைக்கப்பட்டிருந்த கிளாஸ்சை எடுத்துக் கழுவிச் சுத்தப்படுத்தி அதற்கான டிரேயில் ஒழுங்காக அடுக்கி வைக்கிறார்.ரொட்டியைப் பாதுகாப்பாக அதற்கான டப்பாவில் வைக்கிறார்.                            
         
அந்த ரொட்டியை உண்பதற்கான நாள்  இன்னும்  சில தினங்கள் எஞ்சியுள்ளன என்பதை ரொட்டியைச் சுற்றியுள்ள உறையில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது ! மகன்  காலையில்  என்ன  சாப்பிட்டானோ….! என்ற கவலை  அம்பிகையின் உள்ளத்தை வருத்தியதால் மனம் ஒரு நிலையில்  இல்லை!
 
வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனத்தைத்  தட்டி விடுகிறார் தினகரன். அன்றைய தினசரியைக் கையில் எடுத்துக் கொண்டு,
“ அம்பிகை  இன்றைக்கு என்ன சமையல்?” என்ற      கேள்வியோடு மனைவியின் முகத்தை ஏரிட்டுப் பார்க்கிறார்!
 
அம்பிகையின்  கவனமெல்லாம் மகன் மீது படிந்துவிட்டதால்  கணவர் கேட்டதையும் கவனத்தில் கொள்ளாமல்  எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.
 
“அம்பிகை……!அம்பிகை……! என்று மீண்டும்  கணவர் அழைத்த போதுதான் சுய நினைவுக்குத்  திரும்புகிறார்!

“என்னங்க ……? என்ன…..என்ன.....கேட்டிங்க……. ?” தடுமாற்றமுடன்  கணவரைப் பார்க்கிறார்!

“சரிதான் …….. நீ எங்க  இருக்கிறே அம்பிகை …….?”

“ இல்லைங்க…..பார்த்திபனை நினைத்துக்  கொண்டிருந்ததால நீங்கள் கேட்டதைக்  கவனத்தில் கொள்ள முடியாமல்  போயிடுச்சி. மன்னிச்சிடுங்க !ஆமாம்……நீங்க என்ன  கேட்டிங்க…? மீண்டும்…..ஒருமுறை  சொல்லுங்க”   பரிதாபமாகக்  கேட்கிறார்.
             
“இன்றைக்கு  என்ன  சமையல்  செய்யப் போற அம்பிகை  என்று கேட்டேன்” என்றார்  அழுத்தமுடன் தினகரன்.

“ பிரிட்ஜில்  நிறையக்காய்கறிகள்,  மீன், கோழி, இறைச்சி இன்னும் சமையலுக்குத் தேவையான எல்லாம்  தயாரா  இருக்குங்க, உங்களுக்கு  என்ன  வேணும்னு சொல்லுங்க உடனே சமைக்கிறேன்………!” என்று பதற்றமுடன்   பதில்    கூறுகிறார்  அம்பிகை!
 
பசிக்கு மட்டும்  சாப்பிடும் . வழக்க முடைய  தினகரனுக்கு  எதைச் சமைக்க  வேண்டும்  என்று  மனைவிக்குக் கட்டளையிடும்  தகுதி  அவருக்கு  இல்லாததால், “என்ன மெனுன்னு கேட்டா எனக்கு என்ன தெரியும் அம்பிகை? பசி ருசி அறியாதுன்னு சொல்லுவாங்க.பசிக்கு எதைக்கொடுத்தாலும் சாப்பிட மட்டும்தான் எனக்குத் தெரியும் என்பதைத்தான் நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கும் நீ தர்மசங்டமான கேள்வியைக் கேட்டால் நான் என்ன பண்ண?   
      
“பிள்ளையை நினைச்சு நான் குழம்பிப் போயிருக்கிறேனு உங்களுக்குத் தெரியுது....அதைப் புரிந்து கொண்டு எனக்கு உதவக் கூடாதா?” கோபித்துக் கொள்கிறார் அம்பிகை.

“ ஞான சூனியமா ஆண்கள்....சாப்பிடுவதோடு நின்றுவிடாமல் சமையலைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்திட்டேன். ம்.....இப்ப என்ன பண்றது? எதிர்காலத்தில் முயற்சி செய்றேன்! ” கவலையுடன் கூறுகிறார்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R