அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. நோயல் நடேசன்அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘  எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது.  சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான். இந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா? இல்லை இந்தியன் என நினைப்பதாலா? நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது. இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது? என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது.

‘புதிய வேலைக்கு எங்கள் வாழ்த்துகள்‘ எனக் கூறிவிட்டு ‘இந்த நாய்க்கு இடம் கொடுக்க வேண்டாம். இது திருட்டுப் பெட்டைநாய்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றான்

‘போடா குண்டா’ எனக்கூறிக் கொண்டு அந்த நாய் அவனைத் தொடர்ந்து சென்றது.

சாம், இந்த நாயின் கதை என்ன?”

‘இந்த நாய் மேவிஸ் என்ற வோர்ட்டுகளுக்கு மேலாளராக இருக்கும் பெண்ணின் நாய். அவரோடு அடிக்கடி இங்கு வரும். மற்ற நாய்களை பொருட்படுத்தாது. நாய்க் கூடுகளை எல்லாம் கழுவும் போது எல்லா நாய்களையும் முன் பகுதியில் அடைத்து விட்டு அந்த கூடுகளில் உணவை வைத்து மீண்டும் அந்த கூடுகளில் நாய்களை விடும்வரை இடைவெளி நேரத்தில் வெளிவாசலை பூட்டி இருப்பது வழக்கம். ஒரு நாள் அந்த வாசல் தவறுதலாக திறந்திருந்தது. இந்தப்பகுதியில் இருபத்தினான்கு கூடுகள் இருக்கிறது. இந்தக் குண்டு நாய் அந்த இருபத்து நாலு கூட்டில் உள்ள உணவையும் தின்று விட்டது.

‘எப்படி? அவ்வளவு சாப்பாட்டையும் சாப்பிட்டதா? அதன் வயிற்றுக்குள் எப்படி அடக்க முடிந்தது? ’

‘ஒரு கூட்டில் சாப்பிட்ட சாப்பாட்டை அடுத்த கூட்டில் வாந்தியாக எடுத்துவிட்டு மீண்டும் சாப்பிட்டிருக்கிறது.. இதன் பின் இந்த வைத்தியாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு ஆறுமாதம் தடை போடப்பட்டிருந்தது. இதன்பின் எல்லோரும் இந்த நாயை திருட்டு நாய் என்பார்கள். உண்மையான பெயர் மக்ஸி’

‘வழமையாக லபிரடோர் இனத்து நாய்கள் ஆகாமியம் பிடித்தவை. ஆனால் இது ஒரு உலக சாதனையாகத்தான் இருக்க முடியும்’

சாதாரண நாய்களின் பிரிவில் வேலை சுலபமாக இருந்தது. பெரும்பாலான நாய்கள் நோய்கள் குணமாகி இருந்தன. அவற்றை வீட்டுக்கு அனுப்பலாம் என எழுதிவிட்டு தேவையான மருந்துகளுடன் செலவுக்கணக்கையும் சேர்த்து எழுதிவிட்டு கடைசிப் பகுதியான தொற்று நோய் பகுதிக்குச் சென்றார்கள். வைத்தியசாலையில், தொற்று நோய்ப் பகுதி தனிப்படுத்தப்பட்ட பகுதி. வேலைசெய்பவர்கள் மட்டும்தான் செல்லமுடியும் என வரையறுக்கப்பட்ட பகுதி. அங்கு போகும் போதும், வரும் போதும் கிருமிநாசினியில் கால்களை நனைத்து விட்டுச் செல்ல வேண்டும். சிறிய நாய்க் குட்டிகள்தான் அங்கிருந்தன. தடைமருந்து போடாததால் தொற்றிய வைரசால் பாதிக்கப்பட்டவை.

ஐந்து நாய் கூடுகள் மட்டுமே உள்ள அறையது. அங்கு ஒரு இரண்டு மாத வயதான ரொட்வீலர் இன நாய்க்குட்டியின் சடலம், கருப்பு பிளாஸ்ரிக் பையில் வைத்து தலை மட்டும் தெரிய கூட்டினுள்ளே வைக்கப்பட்டிருந்தது. குளிந்து விட்டிருந்தத. வயிற்று போக்கில் இறக்கும் இந்தக்குட்டிகள் உயிருடன் இருக்கும் போதே தண்ணீர் தன்மையற்று குளிர்ந்திருக்கும். இப்பொழுது விரல்நுானிகளை சில்லிட வைத்தன.

இந்த குட்டிகள் உரிமையாளர்களின் கவனக்குறைவால் இறக்கின்றன. இவைகளுக்கு தடைமருந்துகள் உரியகாலத்தில் ஏற்றப்பட்டிருந்தால் இவை உயிர் பிழைத்திருக்கும். ரொட்வீலர் நாய்க்குட்டியின் உடலை உடனே குளிர் அறைக்கு எடுத்து செல்லும்படிசொல்லிலிட்டு அதனது சொந்தக்காரருக்கு உடனே தகவல் தெரிவித்தான் சுந்தரம்பிள்ளை. இறந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பது மிருகவைத்தியரகளின் பொறுப்பு. இது மிகவும் கஷ்டமான தகவல் பரிமாற்றமாகப் பட்டது சுந்தரம்பிள்ளைக்கு, இறந்த ஒவ்வொரு செல்லப்பிராணியும் மருத்துவரின்

தோல்வியாகவே மனதில் உறுத்தியது. இதைவிட தங்களது நாயோ பூனையோ இறந்து விட்டது என அறிந்தவுடன் அவர்களின் சோகத்தின் வெளிப்பாடுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதால் எதிர்கொள்ளுவது சுலபமான காரியம் இல்லை. மிருகவைத்தியர்களை, தங்கள் செல்லப்பிராணிகளின் மரணத்துக்கு குற்றம் சாட்டுவதும் உண்டு. இறப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும் போது, இழப்பால் ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை உள்வாங்கி ஆறுதல் சொல்லுவது எப்பொழுதும் மிருவைத்தியர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

காலை நேரத்தில் இந்த வோர்ட் ரவுண்ட் முடிய இரண்டு மணித்தியாலம் ஆகிவிட்டது.இதன் பின்பு கிடைக்கும் சிறிய ஓய்வில் தேநீரை அருந்தி விட்டு காத்திருக்கும் வெளிநோயாளர்களைப் பார்ப்பதற்கு சென்றுவிட்டான் சுந்தரம்பிள்ளை. பரிசோதனை அறையில் ஒரு நாயை பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது ஜோன் ரிங்கர் வந்து, ‘சிவா நாய் ஒன்று இறந்து விட்டது’ எனச் சொன்னபோது ‘எழுதிவிட்டு போகவும்’ என்று கூறி விட்டு வேலையை தொடர்ந்தான். இண்டு நோய்களால் பீடிககப்பட்ட செல்லப்பிராணிகளின் இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி இருந்ததால் ஜோன் ஸ்ரிங்கர் சொன்னது மறந்துவிட்டது.

நினைவில் மீண்டும் ஜோன் சொன்னதை நினைத்து சொந்தக்காரருக்கு தொடர்பு கொள்ள விரும்பி நாயின் பெயரைப் பாரத்தபோது அந்தக் குறிப்பு புத்தகத்தில் மரணம் என்ற வார்த்தை, காலையில் ஒட்சிசனின் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பொமரேனியனின் அருகே எழுதப்பட்டிருந்தது. சுவாசிப்பதற்கு கடன் வேண்டி கஷ்டப்பட்ட அந்த சிறிய நாய்க்கு பதினைந்து வயதுக்கு மேலாக இருக்கும். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் மருந்தெடுத்து ஒரு வருடத்துக்கு மேல் சராசரி நாய்களிலும் பார்க்க அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளது. அந்தப் பிராணியின் இறப்பில் உரிமையாளரைத் தவிர எவரும் கவலைப்படத் தேவையில்லை. சில நாய்களுக்கு முதுமையில் இதயத்தில் வால்வுகள் பழுதாகி விடுவதால்; இதயத்தின் கன அளவு பெருத்து மார்புக்கூட்டில் உள்ள சுவாசக் குழாயை அழுத்துவதால் சுவாசிக்க முடியாமல் இருக்கும். இந்த நிலையில் மருந்துகளால் இதை சுகப்படுத்த முடியாது. ஆனால் சிலகாலம் மட்டும் ஆயுளை நீட்டிவைக்கலாம். உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து உங்கள் “ஜின்ஜியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. உங்களுக்கு எனது அனுதாபம். மேலும் ஜின்ஜியின் உடலை உங்கள் வீட்டில் புதைப்பதற்கு விரும்பினால் நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம்.’ என சுருக்கமாக சொல்லிவிட்டு, உடலை பார்ப்பதற்கு தீவிர சிகிச்சை நாய்களின் கூடுகள் இருந்த பக்கம் சென்ற சுந்தரம்பிள்ளைக்கு அங்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.

சில அதிர்ச்சிகள் சந்தோசத்தை தரும். ஆனால் இந்த அதிர்ச்சி வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் சங்கடத்தைக் கொடுத்தது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஜின்ஜி அந்தக் கண்ணாடி ஒட்சிசன் கூட்டுக்குள் இருந்தபடி பார்த்து, தனது சிறு உடலோடு சேர்த்து வாலை ஆட்டியது. காலையில் பார்த்த போது இல்லாத புத்துணர்வுடன், உற்சாகமாக நின்றது. சென்னிற சடைமயிரை சிலிர்த்தபடி நின்றது, தொலைவில் இருந்து பார்த்தால் ஆபிரிக்க சிங்கத்தின் தோற்றத்தில் இருந்தது. அந்த வயதில், அந்தத் தோற்றம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அருகில் சென்றதும் மெதுவான அதனது குரைப்பு விட்டு விட்டு வந்தது. சுந்தரம்பிள்ளைக்கு, ‘ இந்தக் கூட்டுக்குள் நான் ஏன் இருக்கவேண்டும். நான் முற்றாக குணமாகி விட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்பு’ என கேட்பது போல் இருந்தது. அதிர்சியும் ஆத்திரமும் புகைந்தபடி அந்த பகுதியின் கதவை அடித்து மூடிவிட்டு ‘ஜோன்’ எனக் கூவியபடி தேனீர் பருகும் இடத்துக்குச் சென்ற சுந்தரம்பிள்ளை அங்கு ஜோன் ஒருகையில் கோப்பியும் மறுகையில் சிகரட்டும் பிடித்தபடி தாழ்வாரத்தில் நின்றதை பார்த்த போது கோபம் மேலும் அதிகமாகியது.

‘என்ன நடந்தது?’ என்றான் மிக சாவகாசமாக.

‘உயிருடன் இருக்கும் நாயை இறந்ததாக நீ எழுதியதால் நான் உரிமையாளரிடம் உடலைப் பெற்றுக் கொள்ளவரும்படி சொல்லிவிட்டேன். இப்பொழுது ஜின்ஜி உயிருடன் இருக்கிறது.’

‘அப்பொழுது ஜின்ஜியை கருணைக்கொலை செய்வோம்’ என்றான் சிரித்தபடி.

‘பகிடி விடாதே. இப்பொழுது யார் பதில் சொல்வது?’

‘நான் சொல்லுகிறேன். அதில் பிரச்சினை இல்லை’.

‘என்ன பிரச்சனை இல்லையா?‘

‘இதை இலகுவாக எடுத்துக்கொள்“.

‘எப்படி ஜோன்? உயிரோடு இருக்கும் நாயை இறந்து விட்டது என உரிமையாளருக்கு சொல்லிவிட்டு——-‘

‘இப்படி பல விடயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. இது ஒரு விபத்து.’

அமைதியாக சிலகணங்கள் ஜோனின் முகத்தை பார்த்துவிட்டு, ‘இப்படி பெரிய வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட சாத்தியம் இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது. எதற்கும் இதை நானே பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என நினைத்து‘நான் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சுந்தரம்பிள்ளை தனது அறைக்குச் சென்று தொலைபேசியை எடுத்து நாய்க்குரியவரை அழைத்தபோது, அடுத்த முனையில் அவரது மனைவி அழுதபடி, ‘அவர் ஜின்ஜியின் உடலை எடுக்க வைத்திய சாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்;’ என்றாள்.

அந்த மனைவியிடம் விடயத்தை சொல்லி மேலும் சிக்கலாக்காமல் உரிமையாளர் வந்ததும் மன்னிப்புக் கேட்டு்க் கொள்வோம் என சிந்தனையில் வைத்தியசாலையின் வரவேற்புப் பகுதியில் இருப்பவர்களிடம் ஜின்ஜியின் உரிமையாளர் வந்தால் தன்னிடம் அனுப்பும்படி சொன்னான் சுந்தரம்பிள்ளை.

இதுபோன்ற சம்பவங்கள் இந்த வைத்தியசாலையில் முன்பு நடந்திருந்தாலும் குறிப்பிட்ட சம்பவங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும். ஆனால் செய்தியை பரவவிட்டால் எல்லோர் வாயிலும் இந்த விடயம் அவலாகும். முடிந்தவரை விடயம் வெளியே பரவுவதை தவிர்க்கவும் முக்கியமாக வைத்திய முகாமைத்துவத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள விரும்பினான் சுந்தரம்பிள்ளை. அவனது மனதைப் பொறுத்தவரை தனது தவறாக இதனை நினைத்துக்கொண்டு, இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதாரத்தை குறைப்பது எப்படி என்று மனதில் குமைந்து கொண்டிருந்தான். கால்மணி நேரத்தில் ஒருவர் அறையின் கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்தபோது அறுபது வயதான நரைத்த தலையோடு, சட்டையின் மேல் இரு பொத்தான்களைப் போடாமல் அவரது மார்பு மயிர்கள் வெளியே தெரிந்தது. கால்மேசு போடாமல் கருப்பு காலணியை அணிந்திருந்தார். கருமையான கண்களுடன் ஒரு ஒலிவ் நிறத்தில் தென் இத்தாலியர் அல்லது கிரிக்க நாட்டவர் என அனுமானிக்கப்படக் கூடியவிதத்தில் ஒருவர் நின்றார். அவசரத்தில் மனிதர் ஓடிவந்திருக்கிறார். அவரது முகத்தில் சோகம் திரையிட்டு கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. ‘எப்பொழுது ஜின்ஜி இறந்தது? ’வார்த்தைகள் தடுமறியபடி

‘நீங்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டும். இங்கு ஒரு தவறு நடந்து விட்டது. ஜின்ஜி உயிரோடு உள்ளது. இறந்தது ஜின்ஜி போன்ற வேறு பொமரேனியன் இறந்துவிட்டது. பெயரை சரியாக பார்க்காமல் நாங்கள் தவறு இழைத்து விட்டோம்’ அவரது கையை பிடித்தபடி குரல் தாழ்மையாகவும் முகத்தில் உண்மையான, ஆழமான மனவருத்தத்தை வெளிப்படுத்தியபடியும் சுந்தரம்பிள்ளை சொல்லியியதும் அந்த மனிதர் முகத்தில் மகிழ்சி புதுவெள்ளமாக புரண்டு ஓட அப்படியே சுந்தரம்பிள்ளையை கட்டி இறுக்கமாக அணைத்துவிட்டார். அந்த அணைப்பின் இறுக்கம்,அந்த மனிதரின் சந்தோசத்தை வெளிபடுத்தியபோதிலும் குற்ற உணர்வில் வெட்கத்தில் நெளிந்தான் சுந்தரம்பிள்ளை. அதைப் பொருட்படுத்தாமல் நின்ற இடத்தில் இருந்து பலே நாட்டியப் பெண்களைப்போல் குதிக்காலை எம்பியபடி ‘ஜின்ஜியை பார்க்கலாமா?’என்றார்.

அவரது முகத்தில் சில விநாடிகள் முன்பாக இருந்த சோகம் கோடையில் பெய்த சிறுமழை போல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த இடத்தில் அளவற்ற சந்தோசம் ததும்பியது. சுந்தரம்பிள்ளைக்கு அது பெரிய ஆறுதலாக இருந்தது..
‘நீங்கள் ஜின்ஜியை போய் பாருங்கள். வீட்டுக்கு கொண்டு செல்லலாம். நான் பத்துநிமிடத்தில் மருந்துகளை தர ஆயத்தம் செய்கிறேன். மீண்டும் வந்து இந்தக் கதவுக்கு பக்கத்தில் வந்து அமருங்கள்’

அவரது மகிழ்சி சுந்தரம்பிள்ளையை காற்றில் பரவும் வைரஸ் நோய்போல் வேகமாக தொற்றிக்கொண்டது. ஜின்ஜிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு கொரிடோரல் தொடர்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மனிதரைக் காணவில்லை.மற்றய செல்லப் பிராணிகளைப் பரிசோதிகாமல் பத்து நிமிடம் காத்திருந்து அந்த. மருந்துகளை எப்படி காலாகாலத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுவதற்காக காத்துக் கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. இந்த வேலையை நர்சுகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதுடன் குற்றவுணர்வும் நிழலாக சேர்ந்து அந்த மனிதருக்காக காத்திருந்தான் சுந்தரம்பிள்ளை

அரை மணி நேரமாகிவிட்டது

அவசரமாக எம்பி எம்பி நடந்தபடி அந்த நீளமான கொரிடோரில் வந்து கொண்டிருந்த அவரின் இடுப்பில், மரணமடைந்து உயிர்த்தெழுந்த நல்லாயனாக ஜின்ஜி என்ற அந்த பொமரேனியன் நாய் இருந்தது. அதனது முகத்தில் ஒருவித ஒளிவட்டம் தெரிவது போல் இருந்தது. நல்லாயனை சிலுவையில் அறைந்து பின்பு புதைத்தவர்கள் நம்மைப் போல் தவறு செய்திருக்கலாமா? இவ்வளவு மருத்துவம் முன்னேறியகாலத்திலே இறந்தவர்கள் என பிணஅறையில் போட்டவர்கள் பிழைத்து வரும் போது இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாக இப்படியான விடயங்கள் சாதாரணமாக நடக்கலாம் என சிந்தனையுடன் நின்றான் சுந்தரம்பிள்ளை. அருகில் வந்து மருந்து சரைகளை பெற்றுக்கொண்ட அந்த மனிதர் பதிலுக்கு கையில் இருந்த காகிதப் பொட்டலத்தை கொடுத்தார்.

அந்தப் பொட்டலத்தை வாங்காமல் ‘இது என்ன?’ எனக்கேட்டான் சுந்தரம்பிள்ளை.

‘இது சம்பூக்கா. இனிப்பாக இருக்கும் இத்தாலிய மது. ஜின்ஜி உடலை எடுத்துப்போக வந்த என்னி;டம் அதனை உயிருடன் மட்டுமல்ல குணமாக்கியும் கொடுத்துள்ளீரகள். ஜின்ஜி நாய் இல்லை. எனது மனைவிக்கு பிள்ளை மாதிரி’ என அவர் சொன்ன போது அவரது குரல் கரகரத்தது. கண்களில் நீர் இமைகளை முட்டியது..

அந்த அரைமணி நேர இடைவெளியில் வெளியே சென்று மதுசாலையில் அவர் இதை வாங்கியிருக்க வேண்டும். அவரது மனநிறைவுக்காகவும் தொடர்ந்து அந்த மனிதரை சங்கடப்படுத்தாமல் இருப்பதற்காகவும் சம்புக்கா இருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டதும் திரும்பவும் நன்றி சொல்லி விட்டு அந்த மனிதர் சென்றார்.

சுந்தரம்பிள்ளைக்கு சம்பவம் சேதாரம் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்த போதிலும், மனதில் செய்த தவறு உறுத்தியது. ஜோன் எழுதிவிட்டு சென்றாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முன்னர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டியது வைத்தியரின் கடமையாகும். தவறு செய்து விட்டு அதற்கான பரிசுப் பொருளை வாங்குவது எப்படி சரியாகும் என்பது மனசாட்சியின் வாதமாக இருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஜோன், ‘இந்தப் போத்தல் எனக்கு கிடைத்திருக்க வேண்டும்’என்றான்.
‘அந்த மனிதனுக்கு நாங்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறோம்.என்றாலும் நீ சிறிது கவனமாக எழுதி இருக்கலாம். நானும் ஜின்ஜியைப் பார்த்த பின்புதான் அவர்களுக்கு தொலைபேசி எடுத்திருக்கவேண்டும்.’

‘சிவா, நடந்ததையிட்டு கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இலகுவாக எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி பல விடயங்களை வாழ்வில் நாம் எதிர் கொள்ளவேண்டும்’என்றான் அந்த இருபத்தைந்து வயதான இளைஞன் ஜோன். அவனது கூற்றிலும் உண்மையிருக்கிறது. ஒரு விடயத்தில் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒருவர் விடும் தவறு பலரை பாதிக்கிறது. எனது தவறுகளை தவிர்த்துக் கொள்ள இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டு தனது அடுத்த வேலைக்குச் சென்றான் சுந்தரம்பிள்ளை.

பரிசோதனை அறையில் ஏற்கனவே ஒரு வயதான அவுஸ்திரேலிய தம்பதிகள் நின்றார்கள். உயரமாக, சிறிது குறும்தாடியுடன் நின்றவர் கண்ணாடி அணிந்திருந்தார். நீள் வட்டமான அவரது முகத்தில் உதடுகள் பெனிசிலால் வரைந்தது போன்று மெல்லியதாக இருந்தது. அவரது முகத்தில் கடுகடுப்பு தெரிந்தது. அவரது மனைவி பச்சைக்கலரில் சட்டை அணிந்து மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள். அமைதியாக அழகு அவரது முகத்தில் தெரிந்தது. இருவரும் எழுபது வயதை ஒட்டியவர்களாக இருந்தார்கள். ஆணிடம் கையில் வயதான டல்மேசன் நாய் தோல் வாரால் பிணைக்கப்பட்டு இருந்தது. கருப்பு புள்ளிகள் கொண்ட அதனது உரோமம் பளிச்செனத் எடுப்பாக தெரிந்தது. அந்த நாயின் விதைகள் கால்களுக்கிடையால் வேள்விக்கு வெட்டும்ஆட்டின் விதைகள் போல் பெரிதாக தெரிந்தன.

‘உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என கேட்ட சுந்தரம்பிள்ளையை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்தார். அவருக்கு புரியவில்லை என நினைத்து‘ நான்தான் மிருகவைத்தியர் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும்? என்றபோது அவரது முகத்தில் கடுப்பாகியது.
அவருடன் வந்த மனைவி உடனே ‘ஹீரோவுக்கு தான் பிரச்சனை. எங்களுக்கல்ல’

அந்தப் பதிலில் உள்ள நகைச்சுவையை பொருட்படுத்தாமல் ‘என்ன பிரச்சனை?‘ என்றபடி அந்தப்பெண்ணை நோக்கியபோது
‘சில நாட்களாக சலத்தோடு இரத்தம்போகிறது‘

‘என்ன வயது?

“பன்னிரண்டு“

‘ கொஞ்சம் மேசையில் ஹீரோவை ஏற்றுவோமா’?

மேசையைின் உயரத்தை குறைத்தபோது ‘கமோன் ஹீரோ ஏறு’ என்றதும் மெதுவாக ஏறியது.

அந்த நாயில் மேன்மையுடன் கீழ்படிவு தெரிந்தது.

‘ நான் ஹீரோவின் புறஸ்ரேற்றை பரிசோதிக்கப்போகிறேன். நீங்கள் ஹீரோவை பிடித்து கொள்ளுங்கள்’ எனக்கூறியபோது அந்த மனிதர் கவனிக்காமல் அடுத்த பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்

இப்பொழுது அந்த மனைவி வந்து பிடித்தார்.

நாயின் குதத்தில் விரலை விட்டு பரிசோதனை செய்தபோது அதனது புரோஸரேற் வீங்கி இருந்தது. ‘ உங்களது ஹீரோவின் புரஸ்ரேற் தொற்றாகி வீங்கி இருக்கிறது. அதனால்தான் இரத்தம் வருகிறது. ஆனாலும் சலத்தை எடுத்து ஏதாவது கல் அல்லது கான்சர் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.’

‘ஏன் புரஸ்ரேற் வீங்கி இருககிறது? மனைவி

‘இது விதை எடுக்காத ஆண் நாய்களுக்கு வருவது.’

‘மனிதருக்கு வருவது போல்’ என்று விட்டு கையை வாயால் மறைத்தபடி சிரித்தார் அந்த பெண்மணி. உடனே அந்த மனிதர் இப்பொழுதுதான் நாயின் பக்கம் திரும்பினார். அவரது கண்களிலும் முகத்திலும் சூடு முகத்தில் தெரிந்தது. இருவருக்கும் இடையில் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்கவேண்டும். அதற்கு இந்த டல்மேசன் ஊடகமாக பயன்படுகிறது. இந்த விடயத்தில் நான் ஈடுபடுவதிலும் பார்க்க தலைமை வைத்தியரிடம் இரண்டாவது ஆலோசனைக்கு விடுவது சாலசிறந்தது என்று ‘இதை பற்றி மேலும் விளங்கப்படுத்துவதற்கு எனது தலைமை வைத்தியரை கூப்பிடுகிறேன்’

வெளியே வந்த சுந்தரம்பிள்ளை, அடுத்த அறையில் நின்ற காலோஸை அழைத்தான்.

உள்ளே வந்த காலோசையும் அந்த மனிதர் உற்சாகமாக பார்க்கவில்லை. அதைப்பொருட்படுத்தாமல் மீண்டும் அந்த நாயை பரிசோதித்துவிட்டு, இந்த விடயத்தில் “எனது கருத்தும் சிவாவைவின் கருத்தை ஒத்து இருக்கும். விதையை எடுக்காததால் இந்த நோய் வந்திருக்கிறது .தற்பொழுது மருந்துகளோடு ஒப்பரேசன் செய்வது தான் ஒரே வழி’

‘இந்த வயதில் ஹிரோ தாங்குமா?’ என கவலையுடன் கேட்ட பெண்ணை பார்த்து ‘வேறுவழி இல்லை’ என பதிலை கூறி விட்டு அவர்களது பதில்களை எதிர்பார்காமல் அந்த அறையை விட்டு காலோஸ் வெளியேறிவிட்டான் ‘ இப்பொழுது மருந்தை தாருங்கள். மற்றவைகளை நாங்கள் யோசிதது சொல்கிறேம்.’ என்று அந்த பெண் கூறியதும் மருந்துகளைத் தயார் செய்ய பார்மசிக்கு சென்றான்.
மருந்தை வாங்கிக் கொண்டு செல்லும் போது அந்த மனிதர் நன்றி எதுவும் சொல்லாமல் அதையும் தன்மனைவின் பொறுப்பாக அவள்மேல் சுமத்திவிட்டு தொடர்ச்சியாக மவுன விரதம் இருந்துவிட்டு வெளியேறினார். சுந்தரம்பிள்ளையைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே சென்றது தலையில் இருந்து பாரத்தை இறக்கியது போன்று இருந்தது.

மனததில் இருந்த நினைவுகளைப் யாருக்காவது சொல்லித் தீர்போம் என பார்மசிக்கு சென்றபோது அங்கு நின்ற காலோஸிடம், ’ அந்த மனிதன் ஒரு வார்த்தை என்னோடு பேசவில்லை.அதைவிட புரஸ்ரேற் விடயமாக பேசிய போது அந்தப் பெண் சிரித்துக்கொண்ட மனிதர்களுக்கு வரும் விடயம் போல் என சொல்லி சிரித்தபோது அந்த மனிதரின் முகத்தில் கடுப்பாக இருந்தது.’

‘அந்த மனிதருக்கு புரஸ்ரேட். விட்டுத்தள்ளு.’

முதல் நாள் ரிசப்சனில் இருந்து, சுந்தரம்பிள்ளையை காலோஸ்க்கு அறிமுகப்படுத்திய அந்த மெல்லிய பெண் பார்மசிக்கு வந்தபோது ‘ என்ன லின், உனது வாசனை இன்றைக்கு எனக்கு தலையை கிறுகிறுக்கிறது.’ என்றான் காலோஸ்.

‘கமோன் காலோஸ், உனக்கும் சிவாவுக்கும் இந்த விடயத்தை சொல்ல வேண்டும். இப்ப சிவாவை பார்த்துவிட்டு டலமேசனோடு வந்த மனிதர் காசை கொடுத்துவிட்டு, நான் இந்த வைத்தியசாலைக்கு இனிமேல் வரமாட்மாட்டேன், என்றபோது நான் கேட்டேன் என்ன நடந்தது என்று, அதற்கு அவர் ஆரம்பத்தில் ஒரு இந்தியன் நாயை பற்றி சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பின்பு ஒரு யப்பான் மேலதிகாகாரி என வந்தான். அப்பொழுதும் எதுவும் பரியவில்லை. ஏன் ஆவுஸ்திரேலியன் ஒருவரும் இல்லையா என கேட்டார்..
‘அப்ப நீ என்ன சொன்னாய்?’

‘நான் வேறு மிருகவைத்தியரை பார்க்கப் போகிறீர்களா என்றேன். அவர் வெளியில் சென்றதும் அவரது மனைவி நாய்க்கு புருஸரேற் என்றது அவருக்கு பிடிக்கவில்லை. இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொன்னார். இதை சொல்லத்தான் வந்தேன்’ என்றாள்.

‘அந்த நாய்க்கு மட்டுமல்ல அந்த மனிதருக்கும் புறஜ்ரேட. அதுதான் எங்களில் கடுப்பு.. சிவா, விட்டுத் தள்ளிவிட்டு வேலையைப் பார்’

இனவாதம் என்பது நேரடியாக ஒருவரை வெறுப்பது. அதைப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது நடந்த விடயத்தை பார்க்கும் போது தனக்கு பிடித்தமில்லாத விடயம் நடக்கும் போது இந்த மனிதரிடம் இனவாத சிந்தனை உருவாகிறது. இப்படியாக பல இடங்களில் தொடர்ந்து கடந்து செல்ல வேண்டும் என சுந்தரம்பிள்ளை நினைத்தபடி தனது வேலையைத் தொடர்ந்தான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R