"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் நான்காவது சிறுகதைத்தொகுப்பு.

பதிவுகள் இணைய இதழ் இணையத்தில் தமிழ் காலூன்றிட உழைத்த ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களிலொன்று. அக்காலகட்டத்திலிருந்து இன்றுவரை பதிவுகள் இணைய இதழுக்குப் பங்களித்த, பங்களித்துவரும் படைப்பாளிகள் நன்றிக்குரியவர்கள். அவர்கள்தம் படைப்புகள் இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். அவ்வகையில் வெளியாகும் தொகுப்புகளே பதிவுகள் தொகுப்புகள்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின்  படைப்புகள்:

1. பறவைப்பூங்கா - சித்ரா ரமேஷ் (சிங்கப்பூர்) -
2. அப்பாச்சி  -எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
3. 3. ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து - அ.முத்துலிங்கம் -
4. லூசியா - அ.முத்துலிங்கம் -
5.இழப்பு - குரு அரவிந்தன்
6. றைட்டோ - சாந்தினி. வரதராஐன்
7. வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம் -- புதுவை எழில் -
8. அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்  - திலகபாமா

9. விருந்து - கே.எஸ்.சுதாகர
10.  பூப்பும் பறிப்பும் - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்)
11.  நாசிலெமாக்  -  - கமலாதேவி அரவிந்தன்-
12. சிவப்பு விளக்கு எரியும் தெரு - நடேசன்(அவுஸ்திரேலியா)
13.  முயல்களும் மோப்ப நாய்களும்!   - மூதூர் மொகமட் ராபி (இலங்கை) -
14. தண்டணைகளின் மகிழ்வில் - - திலகபாமா -
15. தினம் தினம் தீபாவளி  - வி.ல.நாராயண சுவாமி ( மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை)
16. அவள் - ராமசந்திரன் உஷா -
17. கொள்ளை! - சாயிதாசன் -
18. முகதரிசனம்! - குமரவேலன் -
19. சுனாமி வைத்தியம்! - என்.எஸ்.நடேசன் -
20. காதலின் பாதையில்..  - ஷண்முகி -
21. மீண்டும் வருமோ எனது தேசம்! - குகன்
22.  குற்றம் புரிந்தவன். - குமரவேலன் -
23. ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..! - குரு அரவிந்தன் -
24. மீளவிழியில் மிதந்த கவிதை  - குரு அரவிந்தன் -
25.  - விதை - - ராம்ப்ரசாத் ( சென்னை ) -
26. சலனங்களுக்கு வயதில்லை  - - நடேசன் (ஆஸ்திரேலியா) -
27. புதிய வருகை  - - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)
28.  திரிபு - கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்
29. பவானி - கடல்புத்திரன் -
30. பேய் பிடித்த வீடு - நடேசன் -

தொகுப்புக் கதைகளை வாசிக்க: https://archive.org/details/pathivukal_stories_volume4_toc
இதுவரை பதிவுகள்.காம் வெளியிட்ட மின்னூல்களை வாசிக்க: https://archive.org/details/@gthami


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R