ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது மனித வாழ்க்கைக்குரிய இலக்கை இயம்புவது. மனித குலத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நல்லவர்களையும் அவர்களுக்கு இடையூறு செய்யும் தீயவர்களையும் அன்பு, அறம் போன்ற நல்லுணர்வுகளையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு, மறம் போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதால் இலக்கியங்கள் அனைவருக்கும் பொதுவாக விளங்குகின்றன.

இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைய கலைகளிலும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின் இலக்கியம் இயற்றிய புலவன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் எத்தகைய பயன் கிடைக்கும் என்பது பற்றிய எதிர்கால அணுகுமுறையில் இலக்கியம் படைக்கின்றான். அவ்வாறான இலக்கியங்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர், உலகத்தோர்க்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் முதன்மையராய் வைத்து எண்ணப்படுகிறார். உலகம் போற்றும் திருக்குறளில் அவர் வகுத்துள்ள ஒழுக்கமுறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுவதற்குரியதாய், பொதுநோக்கப் பார்வையோடு இயற்றப்பட்டுள்ளது. ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டியவர். தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் பெறவேண்டும் என்னும் உயரிய எண்ணத்தராய், அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையை திருக்குறள் மூலமாக உணர்த்தியுள்ளார்.

இதனையே வள்ளுவர்,

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்’.


தமிழ்மறையாகிய திருக்குறள் உணர்த்தும் பொருளால் உலகப் பொதுமறையாக விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள் தமிழ் அறிஞர்களையும் உலக அறிஞர்களையும் கவர்ந்திருக்கிறது. திருக்குறள் கற்குந்தோறும் புதிய புதிய பொருளைக் கொடுக்கக்கூடிய தன்மையது. எத்தனை உரைகள் தோன்றினாலும் எத்தனை இடங்களில் பேசப்பட்டாலும் அதன் சுவை குறையாது. மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் வாழ்க்கை நூலாகத் திகழும் இது உலகப்பொதுமை, குடிகளைத் தழுவிய முடியாட்சி, காதல் வாழ்க்கை முதலியன பற்றிப் பேசிய பெருமையை உடையது. திருக்குறளில் குறிப்பிட்ட மொழி, இனம், நாடு, சமயம் ஆகியன பற்றிய செய்திகளே இல்லை. ஆனால் ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்பது உரைக்கப்பட்டுள்ளது. சமய உண்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் மனிதன் வளர்வதற்குரிய வழிவகைகளை இந்நூல் கூறுகிறது.

திருக்குறள் மக்கள் சமுதாயத்திற்குரிய அறநெறியை உணர்த்துகின்ற அறநூலாகவும், தவம் செய்யும் துறவிகளுக்கு அறநெறி உணர்த்துகின்ற ஞான நூலாகவும், அரசனுக்கு அரசியல்நெறி, செங்கோண்மை பற்றி விளக்கிக் கூறுகின்ற அரசியல் நூலாகவும், பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பொருளின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகின்ற பொருளியல் நூலாகவும், உலக அரங்கில் கல்வியை இயக்கமாக்கி கற்க என்று ஆணையிட்ட கல்வி நூலாகவும், அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறிவை முதன்மைப்படுத்திய நூலாகவும் அமைகிறது.

வள்ளுவர்,

'உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’


கற்றவர்களின் இயல்பை இவ்வாறு விளக்குகிறார்.

சமய நெறிகளுக்குரிய அடிப்படை உரிமைகளைத் கூறுகின்றமையால் அறநூலாகவும், காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழும் மனையற நெறிகள் பேசுகின்றமையால் குடும்பவியல் நூலாகவும் அமைந்திருப்பதை பெருமையோடு குறிப்பிடுவதற்குரிய பேறு பெற்றவர்களாக தமிழர் திகழ முடிகிறது.

எதிர்காலவியல் என்பது நேற்று எப்படி இருந்தோம்? இன்று எப்படி இருக்கிறோம் நாளை எப்படி இருக்கவேண்டும், நேற்றைய வாழ்வில் தவிர்க்க வேண்டியது என்ன, இன்றைய வாழ்வின் நிறை குறை என்ன நாளைய வாழ்வில் மாற்றம் வேண்டுவது எவற்றில் என்பது போன்றவற்றை எண்ணுவதாக அமைகிறது.

மேலும் வள்ளுவர்,

'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு’

என எதிர்கால வாழ்க்கையை விளக்கிச் செல்கிறார்.

எதிர்காலச் சிந்தனைகளை இன்றைக்கு வளர்த்திருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலவியல் என்னும் கல்வியாக்கி வளர்ச்சி பெற்ற அனைத்துத் துறைகளிலும் எதிர்காலவியல் அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உணர வேண்டியது அவசியமாகிறது. எதிர்காலவியல் அணுகுமுறை ஒன்று போல் அமைந்ததில்லை. தனித்துறையாக எதிர்கால உலகில் பல்வேறு வகையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் உள்ள இவ்வணுகுமுறைகளை இருபது நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் அவருடைய நூலாகிய திருக்குறளில் எதிர்காலவியல் சிந்தனைகளைப் பெரும்பாலும் காணமுடிகிறது.

இன்றைய வாழ்வின் தன்மை எப்படிப்பட்டது? மாற்றம் வேண்டுவது எவற்றில் நாளை பெற வேண்டுவதைப் பெறும் முயற்சியில் இன்றைய செயல் எண்ண என்பன போன்றவற்றை எண்ணுவதாக எதிர்காலவியல் அமைகிறது. உருவாக்கப்பட்ட எதிர்கால எதிர்பார்ப்பின் நிறைவேற்றத்திற்கான திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்காலவியல் காட்டுகிறது. எறும்புகள் மழைகாலத்திற்குத் தேவையான உணவுப்பொருளைச் சேமித்தல் போன்று அஃறினை உயிர்களே தம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படும் போது பகுத்தறிவு கொண்ட மனிதரிடம் இவ்எ திர்காலச் சிந்தனை வேர் கொண்டிருப்பது இயல்பே. மனித சமுதாய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பின் அதன் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனது திட்டமிட்ட எதிர்காலச் சிந்தனையும் பெரும் காரணமாக அமையக் காணலாம். சமுதாயத்தின் எதிர்கால நலன் நோக்கிய செயல்பாடுகளில் அறநூல்களுள் ஒன்றாகும். எனவே இங்கு திருக்குறள் ஆய்வு களமாகிறது. வள்ளுவரின் பிறர் நலன் நாடும் சமுதாயச் சிந்தனையாக திருக்குறள் அமைகிறது. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஆக்கம் அல்லது அழிவு வழியில் எதிர்காலச் சிந்தனை அமையும் என்ற அடிப்படையில் சமுதாயச் சிற்பியாக, உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவரின் எதிர்காலவியல் அணுகுமுறை ஆக்கல் வழிப்பட்டது என்பது சொல்லாமலேயே விளங்கும்.

எதிர்காலச் சிந்தனையாளரின் சிந்தனைகள் நிகழக்கூடிய எதிர்காலம், நிகழ்வதற்கு வாய்ப்புள்ள எதிர்காலம், தாம் விரும்பும் எதிர்காலம் என மூவகைப்படுகிறது. திருக்குறள் அறநூலாதவின் இம்மூன்றையும் உட்கொண்டுள்ளது. நடைமுறையின் பொழுதுபோக்கு எப்படி அமைகிறது என்பதை அளவிட்டு அதன் அடிப்படையில் அதுவே தொடரக்கூடியது என்னும் கணிப்பில் எதிர்காலவியல் அணுகுமுறை வள்ளுவரால் உருவாக்கப்படுகிறது. எதிர்காலவியல் அணுகுமுறையை வள்ளுவர் எங்ஙனம் மேற்கொண்டார் என்ற வினாவிற்கு விடைகாணுதல் அரிது.

ஆயினும் அவரது குறளில் ‘எதிர்காலத்திட்டமிடல்’ அமையவேண்டிய முறைமையையும் அவற்றின் தேவையையும் உணர்த்தியுள்ளார். திட்டமிடும் எதிர்காலம் நல்லனவற்றை விளைவிப்பனவாக அடைதல் வேண்டும். திட்டமிட்ட ஒன்ற வெற்றி பெறவேண்டுமானால் அவை எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.

எத்துறையும் ஓர் அடிப்படை இலக்கினை, நோக்கினைக் கொண்டிருத்தல் இயல்பு. மனித வாழ்விற்கு, நலனுக்கு உறுதுணையான எல்லாத் துறைகளும் அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பனவற்றை, கண்டு உணர்ந்து, அவற்றைக் களைந்து, அவற்றின் தேவைக்கு ஏற்ப வளர்த்து முன்னேறிச் செல்வதை எதிர்காலவியல் அணுகுமுறையாக அமைகின்றார். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் திட்டமிடலும் அதற்கு உரிய செயற்பாடும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவை என்பதையும் பொருள் பொதிந்த நிறைவான வாழ்க்கையே ஒவ்வொருவரின் வாழ்க்கை

நோக்கமாக, அதற்கான திட்டமிடலாக, செயலாக அமையவேண்டும் என்பதையும் எதிர்காலச் சிந்தனையின் பயனாய் மனிதன் தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் முயற்சி செய்து அதனால் புதிய புதிய ஆக்கங்களையும் பெறக்கூடும் என்பதையும் மனதில் கொண்டு எதிர்காலவியல் அணுகுமுறையோடு திருக்குறளை அமைத்துள்ளார் என்பது வள்ளுவரின் அசையா நம்பிக்கை நாளை எதிர்பார்ப்புகளுக்காகத் திட்டமிட்டுச் செயற்பட முனைவது இன்றாதலின் நாளை என்பது இன்றே என்று வழங்கப்படுகிறது. ஆகவே வள்ளுவரின் குறட்பாக்கள் எதிர்காலவியல் அணுகுமுறையில் பொருந்தியதே என்பது துணிவு.

துணை நின்ற நூல்கள்:

1.திருக்குறள் காவ்யா சண்முக சுந்தரம் உரை, காவ்யா பதிப்பகம் சென்னை.


*கட்டுரையாளர்: - முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641105 -

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R