அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன்.

இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor).

பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

அக்கோட்டையினைப் பாதுகாக்கும் அதிகாரியாக 'பற்ரிக் ஒ''நீல்' (Patrick O'Neal) நடித்திருப்பார். அவரது மனைவியாகப் தொலைக்காட்சி நடிகையாகவிருந்து திரைப்பட நடிகையாகப் புகழ்பெற்ற மரியானா ஹில் (Marianna Hill) நடித்திருப்பார். இவரது தந்தையான ஃப்ராங் ஸ்வார்ஸ்கோஃப் (Frank Schwarzkopf) ஒரு கட்டடக்கலைஞர். போர்த்துக்கீசர். ஜோர்ஜ் புஷ் சீனியர் காலத்தில் ஈராக்குடன் நடந்த வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா இராணுவத்தளபதியாக யுத்தத்தை வழி நடத்திய நோர்மன் ஸ்வார்ஸ்கோஃப்பின் மைத்துனர். இவர் தனது தாயாரின் குடும்பப்பெயரான ஹில் என்பதைத்தன் குடும்பப்பெயராக வரித்துக் கொண்டவர்.

எல் கொண்டரைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் துடித்துக்கொண்டிருந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று படத்தில் இவரால் கவரப்பட்ட ஜிம் பிறவுணும், இவரும் இணைந்து நடித்த காட்சிகளைப் பார்ப்பதற்காகத்தாம். :-)

ஜிம் பிறவுணை ஒரு சாதாரண வெஸ்டேர்ன் திரைப்பட நடிகராக மட்டுமே அறிந்திருந்த நான் பின்னாளில் கனடா வந்த பின்பே அவர் மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க 'ஃபூட்போல்' விளையாட்டு வீரர் என்பதையும் அறிந்து கொண்டேன். இவரது முழுப்பெயர் ஜேம்ஸ் நதானியல் பிறவுண் (James Nathaniel Brown). 1957 - 1965 காலப்பகுதியில் அமெரிக்கத் தேசிய 'ஃபுட்போல்' குழுக்களில் ஒன்றான கிளீவ்லான்ட பிறவுண்ஸ் (Cleveland Browns) குழுவின் 'ஃபுல்பாக்' (fullback) ஆக விளையாடி விருதுகள் பல பெற்ற, சாதனைகள் பல புரிந்த சிறந்த விளையாட்டு வீரர். இவ்விளையாட்டில் மிகச்சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். இப்புகழே அவர் திரைப்படங்களிலும் நடிக்க உதவியிருக்கிறது.

இத்திரைப்படத்துக்காகக் கட்டப்பட்ட கோட்டை பின்னர் மேலும் சில திரைப்படங்களில் ( the Barbarian & March or Die (1977)') பாவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

'எல் கொண்டர்; திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் பார்த்த யாழ் திரையரங்கின் நினைவு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. பரதன் நினைவிருக்கிறதா?


அழியாத கோலங்கள்: ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)

ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களை ஆரம்பத்தில் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று மேற்குலகம் எள்ளி நகையாடினாலும் அவற்றின் வெற்றி பின்னர் அவற்றையும் எள்ளி நகையாடிய மேற்குலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஸ்பாகட்டி என்பது இத்தாலியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது நமது தோசையைப்போல. கிளின்ட் ஈஸ்வூட் நடித்துப்புகழ்பெற்ற 'The Good, the Bad and the Ugly ' வெஸ்டேர்ன் திரைப்படமும் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டதுதான். சேர்ஜியோ லியோனின் (Sergio Leone) இயக்கம், 'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவு , 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் சேர்ந்து இப்படத்தை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டதெனலாம்.

இவ்விதமாக இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களிலொருவர்தான் ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma). ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு நடிப்புடன் கூடிய பாத்திரங்களை அளித்துப் பின்னாளில் இவர் புகழடையக் காரணமானவர் இயக்குநர் டுச்சியோடெஸ்சாரி (Duccio Tessari. இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட பல வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர். இவரது மகளான வேரா ஜெம்மாவும் நடிகையே.

இத்தாலியத்திரைப்படங்கள் பலவற்றில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப்புகழ்பெற்ற இவருக்கு அந்நாட்டின் 'டேவிட் டி டொனடெல்லோ'' (David di Donatello) விருதினையும் (ஆஸ்கார் விருதினையொத்த அந்நாட்டு விருது) நடிப்புக்காகப்பெற்றுள்ளார். இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கின்றார்.

அக்டோப1ர் 1, 2013இல் கார் விபத்தொன்றில் மரணமான இவர் ஒரு சிற்பியும் கூட.

என் பதின்ம வயதுகளில் நான் பார்த்து இரசித்த இவரது திரைப்படம். யாழ் ராஜா திரையரங்கில் அபூர்வமாகத் திரையிடப்பட்ட ஆங்கிலத்திரைப்படமான 'அரிசோனா கோல்ட்' ((Arizona Colt) திரைப்படமே அது. முதல் திரைப்படத்திலேயே என்னைக் கவர்ந்த நடிகர்களில் இவருமொருவர். அந்த ஒரு படத்தின் மூலம் என் நினைவில் இவர் பெயர் நிலைத்து நின்றுவிட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R